சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மிழில் வெற்றிபெற்ற `கனா’வைத் தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஹீரோயின். ஐஸ்வர்யா தவிர வேறு யாராலும் அந்தப் பாத்திரத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு நடிக்கவியலாது என அடம்பிடித்து அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.  படத்தின் டைட்டில் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி.’ சிறப்பண்டி!

இன்பாக்ஸ்

படம்: கிரண் ஷா

த்தனை முறை தோற்றாலும் விடமாட்டேன் என ஜெனிபர் லோபஸ் தன் நான்காவது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார். நியூயார்க் நகரைச் சேர்ந்த பேஸ்பால் பிளேயர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் ஜெனி. இருவருக்கும் அதிகாரபூர்வ நிச்சயதார்த்தம் நடந்துள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிச்சயதார்த்த மோதிரத்தின் விலை மட்டும் ஒரு மில்லியன் டாலராம். பாப்புலர் பார்ட்டிகள்!

இன்பாக்ஸ்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹெட்டர்களால் கால் இறுதிக்குள் நுழைந்திருக்கிறது யுவன்ட்டஸ். கடந்த ஆண்டுதான் ரியால் மேட்ரிட் அணியிலிருந்து யுவன்ட்டஸ் அணிக்குத் தாவினார் ரொனால்டோ. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்குள் நுழையும் அணிகளுக்கான போட்டாபோட்டி நடந்துவருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த ஸ்டேடியங்களில் மாறி மாறி மோத வேண்டும். இதில் கடந்த வாரம் முதலில் அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியின் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் அட்லெட்டிகோ, யுவன்ட்டஸ் அணியை 2-0 என வீழ்த்தியது. இம்முறை யுவன்ட்டஸ் மண்ணில் நடக்கும் போட்டியில்
3 கோல்கள் அடித்தால் மட்டுமே காலிறுதிக்குள் நுழைய முடியும் என்கிற நிலையில் இரண்டு ஹெட்டர், ஒரு பெனால்ட்டி என ஹாட்ரிக் கோல்கள் அடித்து யுவன்ட்டஸ் அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார் சிஆர்7. நீ ஆடு ராஜா!

இன்பாக்ஸ்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமா மேல் அளவில்லாப் பற்று கொண்டவர் அனுராக். ஏற்கெனவே, வெற்றிமாறனின் விசாரணை, ஆடுகளம், சசிகுமாரின் சுப்ரமணியபுரம், அமீரின் பருத்திவீரன் ஆகிய படங்களைச் சென்ற இடமெல்லாம் பாராட்டித் தள்ளிக்கொண்டிருந்தவர், இப்போது `சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு ஏகத்துக்கும் சிலாகித்துக்கொண்டிருக்கிறாராம். படத்தில் தான் பணியாற்ற முடியாததை எண்ணி, பொறாமையாகவும் வருத்தமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சூப்பர் தியாகராஜா!

இன்பாக்ஸ்

ஸ்கர் விருதுகளுக்குத் தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்களை மட்டும்தான் பரிந்துரைக்க வேண்டும் என இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் மோஷன் பிக்சர்ஸ் அகாடமியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரான ஸ்பீல்பெர்க், நெட்ப்ளிக்ஸ் படங்களை டிவி படங்களாகவே கருதுகின்றார். இதில் வரும் தேர்ந்த படைப்புகளுக்கு ஆஸ்கருக்குப் பதில் எம்மி விருதுகள் தரலாம். இயக்குநர்கள் பார்வையாளர்களைத் தியேட்டருக்குக் கொண்டு வரப் புதுமையான படைப்பனுபவங்களை அளிக்க முயல வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார். ஆஸ்கர் அரசியல்கள்! 

இன்பாக்ஸ்

ட்டைப்படத்துக்காக கலக்கல் கலர்புல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அசத்தியிருக்கிறது ‘வோக்’ பத்திரிகை. ஆஸ்திரேலியா, தென் கொரியா, நைஜீரியா, ஐஸ்லேண்ட், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து, மொத்தம் 14 பெண் பிரபலங்கள் இந்த போட்டோஷூட்டில்  இடம்பெற்றுள்ளனர். ‘எல்லைகளைக் கடந்து’ மற்றும் ‘வரம்புகள் தெரியாது’ எனும் இரு தலைப்புகளுக்குக் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டோஷூட்டுக்காக இந்தியாவின் சார்பாக போஸ் கொடுத்திருப்பவர் தீபிகா படுகோன். பவர்புல் கண்ணு!

இன்பாக்ஸ்

லகம் முழுவதும் மேடை நாடகங்களுக்கு வெகுசிலரே ரசிகர்களாக இருக்கின்றனர்.  மேடை நாடகங்களுக்கு ரசிகர் வட்டத்தை அதிகரிக்கப் புதிய உத்திகளை நாடகத் தயாரிப்பாளர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த  தொழில்நுட்ப நிறுவனம்  LIVR ‘விர்ச்சுவல் ரியாலிட்டி தியேட்டர் பிளாட்பாரம்’  என்ற உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளது. மேடை நாடகங்களைப் பதிவுசெய்து வாடிக்கையாளர்களுக்கு 360 டிகிரி பார்வையுடனான ஆடிட்டோரியத்தில் இருக்கும் அனுபவத்தைத் தருகிறது. மேடை நாடகங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் டிஜிட்டல் உபகரணம் LIVR என்பது குறிப்பிடத்தக்கது. நெட்ப்ளிக்ஸ், அமேசான் மாதிரி சந்தாத் திட்டத்துடன் லண்டன் சந்தையில் வெளிவந்துள்ளது. கண்ணுக்குள் நாடகம்!

இன்பாக்ஸ்

ராஜமௌலி, தனது ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை டெய்ஸி எட்ஜர் ஜோன்ஸ் நடிப்பார்கள் என அறிவித்துள்ளார். 1920-களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கெரில்லா போர் நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்  அல்லூரி சீதாராம் ராஜு (ராம் சரண்), கோமரம் பீம் (ஜுனியர் என்.டி.ஆர்) ஆகியோரை அடிப்படையாகக் கொண்ட கதை இது எனத் தெரிவித்துள்ளார். RRR என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றவாறு படத்தின் தலைப்பு விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து #RRRTitle என்ற ஹேஷ்டாக்குடன் ட்வீட் செய்யலாம். அந்த விரிவாக்கங்களில் படத்திற்குச் சரியானதாக இருக்கும் தலைப்பையே படத்தின் தலைப்பாகச் சூட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரா.. ரா.. ராமைய்யா!

இன்பாக்ஸ்

 ‘கேப்டன் மார்வ’லில் கலக்கிய ஆரஞ்சு பூனைதான் இப்போது உலக ட்ரெண்டிங். கனடா பாப் பாடகி கார்லி ரே ஜெப்ஸனின் ‘Now that i found you’ என்ற பாடலில் பாடகியுடன், இந்தப் பூனையும் பல கெட்டப்புகளில் வந்துபோகிறது. இந்தக் குண்டுப் பூனையின் படத்தை க்யூட், ஸ்வீட் என்று ஸ்டேட்டஸ் வைத்தே இந்தப் பாடலை ட்ரெண்டாக்கி விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். பூனை பராக்!