Published:Updated:

ரெண்டு புரத்திலும் சண்டை!

ரெண்டு புரத்திலும் சண்டை!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டு புரத்திலும் சண்டை!

ரெண்டு புரத்திலும் சண்டை!

ரெண்டு புரத்திலும் சண்டை!

ரெண்டு புரத்திலும் சண்டை!

Published:Updated:
ரெண்டு புரத்திலும் சண்டை!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டு புரத்திலும் சண்டை!

“பிரபுதேவாவின் கேரக்டர் பெயர் ‘எங்க நாராயணன்’, இதேபோல் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் மங்களம், ‘கும்கி’ அஸ்வினின் பெயர் சங்கர். இந்த மூன்று கதாபாத்திரங்களின் முதல் இரண்டெழுத்துகளையே படத் தலைப்பாக்கியுள்ளோம்.” - ‘எங் மங் சங்’ படத்துக்கான பெயர்க்காரணத்தை, படம் வரைந்து பாகம் குறிப்பதுபோல் விளக்குகிறார் அறிமுக இயக்குநர் அர்ஜுன். ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ படங்களில் இணை இயக்குநர். ‘ராட்சசன்’ படத்தின் இணை திரைக்கதை ஆசிரியர்.

“ஒரு பீரியட் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே என் கனவு. ‘எங் மங் சங்’  1980-களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம். பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் மூவரும் சீனா சென்று தற்காப்புக் கலையான குங்பூ கற்கிறார்கள். அந்தக் காட்சிகள் படத்தில்  20 நிமிடங்கள்  இடம்பெறுகின்றன.”

ரெண்டு புரத்திலும் சண்டை!

“சீனாவில் படப்பிடிப்பு நடத்தினீர்களா?”

“‘முண்டாசுப்பட்டி’ என்கிற ஒரு ஊரே தமிழ்நாட்டில் இல்லை. அது, நாங்கள் கற்பனையாக உருவாக்கிய ஊரின் பெயர். அதுபோலவே ‘எங் மங் சங்’ படத்திலும் நடராஜபுரம், வனவேங்கைபுரம் என்ற இரண்டு ஊர்களைக் கற்பனையாக உருவாக்கியிருக்கிறோம். 17-ம் நூற்றாண்டிலிருந்தே நடராஜபுரம், வனவேங்கைபுரம் இரண்டுக்கும் ஜென்மப் பகை. அதன் காரணமாக இரு ஊர்களுக்குமிடையில் அடிக்கடி சண்டை நடக்கும். இந்தியாவின் அனைத்துத் தற்காப்புக் கலைகளையும் கற்று வைத்திருக்கும் வன வேங்கைபுரத்து ஆட்களிடம் நடராஜபுரத்தில் இருப்பவர்கள் சண்டை யிட்டுத் தோற்கிறார்கள்.  இந்தியாவிலேயே இல்லாத சண்டைக் கலையைக் கற்று வன வேங்கைபுரத்து ஆட்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நடராஜ புரத்தினர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெண்டு புரத்திலும் சண்டை!

அந்தச் சமயத்தில் நடராஜபுரத்தைச்  சேர்ந்த தங்கர்பச்சான், தன் ஊரைச் சேர்ந்த பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் மூவரையும் அழைத்துக்கொண்டு ‘என்டர் தி ட்ராகன்’ படத்தை தியேட்டரில் பார்க்கிறார். அதில் புரூஸ்லீயின் சாகச சண்டைக் காட்சிகளைப் பார்த்து பிரமிக்கிறார்கள். நாமும் குங்பூ, கராத்தே கலையைக் கற்று வன வேங்கைபுரத்து ஆட்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, தங்கர்பச்சான் தலைமையில்  பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின்  மூவரும் குங்பூ கற்க சீனா செல்கிறார்கள். தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டு வனவேங்கைபுரத்து ஆட்களைத் தோற்கடித்தார்களா, இல்லையா என்பதுதான் கதை.”

ரெண்டு புரத்திலும் சண்டை!

“பிரபுதேவா-லட்சுமி மேனன் காம்பினேஷனுக்கான காரணம் என்ன?”

தமிழ்சினிமாவில் ஆக்‌ஷன், காமெடி, டிராஜிடி என எல்லா எமோஷன்களையும் கலந்துகட்டி நடிக்கக்கூடிய திறமை பெற்றவர்களில் பிரபுதேவாவும் ஒருவர். நான் உருவாக்கி வைத்திருந்த எங்க நராயணன் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று விடாப்பிடியாக அவரை நடிக்க வைத்தோம். இயல்பாகவே பிரபுதேவா பிரமாதமான டான்ஸ் மாஸ்டர். தன் உடலை ரப்பர்போல் வளைக்கக்கூடியவகையில் உடலை வைத்துள்ளவர். அவர் குங்பூ கற்றுக்கொண்டு சண்டையிடும்போது தத்ரூபமாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மேல் ‘எங்’ கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து நடித்துள்ளார்.  1980-களில் பெண் குழந்தைகளை வளர்க்கும் போதே ‘இவளுக்கு இவன்தான்’ என்று  அவளுக்கான முறைப்பையனை முன்கூட்டியே முடிவு செய்துவிடுவார்கள். அப்படி முறைப் பையனுக்குப் பேசிமுடிக்கப்பட்டவள் தான் யமுனா. லட்சுமி மேனனை ஏகப்பட்ட கிராமத்துக் கதாபாத்திரங்களில் பார்த்துள்ளோம். அவருக்கு இந்தப் படத்திலும் கிராமத்துப் பெண் கேரக்டர்தான். இருந்தாலும் அவரின் ‘யமுனா’ என்ற இந்த கேரக்டர் அவர் இதுவரை நடித்ததிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ‘பாகுபலி’ படத்தில் காளகேய மன்னனாக நடித்த பிரபாகர், இதில் வனவேங்கைபுரத்தில் வசிக்கும் வில்லனாக நடிக்கிறார்.”

ரெண்டு புரத்திலும் சண்டை!

“இந்தப்படம்  வெகுநாளாக தயாரிப்பில் இருப்பதுபோல் தெரிகிறதே?”

“மூன்று ஷெட்யூல்களில் படத்தை முடித்துவிடுவது என்று நானும் தயாரிப்பாளர் சீனிவாசன் சாரும்  திட்டமிட்டுதான் படத்தைத் தொடங்கினோம். இடையில் பிரபுதேவா வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்ததால் இதன் படப்பிடிப்பு காலதாமதாகி விட்டது. இப்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்து வருகிறது. ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யவிருக்கிறோம். பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ பட்டத்துடன் வெளிவரும் முதல் படம் இது என்பதில் எங்கள் யூனிட்டுக்கு மகிழ்ச்சி.”

- எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism