Election bannerElection banner
Published:Updated:

``மோகன்லால், பிரபு, அர்ஜூன், கீர்த்தி சுரேஷ்... நல்லவேளை வாய்ப்பை மிஸ் பண்ணல!" - அசோக் செல்வன்

``மோகன்லால், பிரபு, அர்ஜூன், கீர்த்தி சுரேஷ்... நல்லவேளை வாய்ப்பை மிஸ் பண்ணல!" - அசோக் செல்வன்
``மோகன்லால், பிரபு, அர்ஜூன், கீர்த்தி சுரேஷ்... நல்லவேளை வாய்ப்பை மிஸ் பண்ணல!" - அசோக் செல்வன்

மலையாளத்தில் அறிமுகமாகும் படம் குறித்தும், தமிழில்தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசுகிறார், நடிகர் அசோக் செல்வன்.

`பில்லா 2' படத்தில் சிறு வயது அஜித்தாக அறிமுகமான அசோக் செல்வன், `சூது கவ்வும்', `தெகிடி', `கூட்டத்தில் ஒருத்தன்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஹீரோவாகவும் பதிந்தார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான முதல் தமிழ்ப்படமான `சில சமயங்களில்' படத்தில் நடித்தவர், தற்போது மலையாளத்தில் அறிமுகம் ஆகவிருக்கிறார். அவரிடம் பேசினேன். 

`` `அரபிக்கடலின்டே சிம்ஹம்' படத்துல நடிக்கிற வாய்ப்பு எப்படி வந்தது, என்ன ரோல்?"

``நான் வொர்க் பண்ண படத்திலேயே பெஸ்ட் அனுபவம், `சில சமயங்களில்' படத்துல கிடைச்சது. ப்ரியதர்ஷன் சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். `சில சமயங்களில்'ல நடிச்சது மூலமா, இந்தப் படம் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. மலையாளத்துல பெரிய பட்ஜெட்ல உருவாகிற படம் இது. என் கேரக்டர் பெயர், அச்சுதன். சர்பிரைஸ் என்னன்னா... மோகன்லால் சாருக்கு இந்தப் படத்துல நான் வில்லன்! ப்ரியதர்ஷன் சார் என்கிட்ட இதைச் சொல்லும்போது, முதல்ல தங்கினேன். ப்ரியதர்ஷன் சார் எனக்கு ஒரு டீச்சர் மாதிரி. அப்புறமா அவரே கால் பண்ணி, `வில்லனா நடிக்க உனக்கென்ன பிரச்னை, யூ டூ இட்!'னு சொன்னார், அடுத்த நிமிடமே நானும் ஓகே சொல்லிட்டேன்."

``மோகன்லால், பிரபு, அர்ஜுன்... சீனியர் நடிகர்களோட நடிச்ச அனுபவம் எப்படியிருக்கு?"  

``இதுவரை நான் மல்டி ஸ்டார் படம் பண்ணதில்லை. இதுல மோகன்லால் சார், பிரபு சார், அர்ஜுன் சார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன்னு பல பிரபலங்கள் இருக்காங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபிறகு, `நல்லவேளை, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணல'னு சந்தோஷப்பட்டேன். மோகன்லால் சார் உடனுக்குடன் அந்த நடிப்பைக் கொடுக்கிறதுல வேற லெவல்ல பண்றார். அவர் ஒரு டெக்ஸ்ட் புக். எனக்கும் நடிப்புல நிறைய டிப்ஸ் கொடுக்கிறார். பிரபு சார் வீட்ல இருக்கிற அந்த உபசரிப்பு பற்றிக் கேள்விபட்டிருக்கோம். ஆனா, இங்கேதான் அதை நேரடியா பார்த்தேன். ஹைதராபாத்ல ஷூட்டிங் நடந்தபோதும், அப்பப்போ பிரபு சார் வீட்டுல இருந்து சாப்பாடு வந்தது. நான் பிரபு சாருடைய மிகப்பெரிய ரசிகன். அவர்கூட பழைய விஷயங்களைப் பகிர்ந்துக்கும்போது சூப்பரா இருக்கு. மோகன்லால் சார் படங்களையும் நான் பிரமிச்சுப் பார்த்திருக்கேன். இப்போ அவருக்கே வில்லனா நடிக்கிறது, அவ்வளவு சந்தோசம். இந்த சின்னப் பையனை நம்பி பெரிய பொறுப்பு கொடுத்த ப்ரியதர்ஷன் சாருக்கு நன்றி!" 

`` `தெகிடி'க்குப் பிறகு இப்போ நீங்களும் ஜனனியும் சேர்ந்து நடிக்கிற புதிய படம் `தெகிடி 2'வா இருக்குமா?" 

``இல்லை. பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஜனனியைப் பார்க்க ஒருநாள் உள்ளே போனப்போ, அவங்ககிட்ட இப்படி ஒரு கதை இருக்குனு சொல்லிட்டேன். இயக்குநர் ஷ்யாம் சந்தீப் கதையைச் சொல்லும்போது, அந்தக் கேரக்டருக்கு ஜனனிதான் சரியா இருப்பாங்கனு தோணுச்சு. அவரும் அதேதான் யோசிச்சிருக்கார். பிக் பாஸ்ல இருந்து வெளியே வந்ததும், ஜனனியும் கதையை முழுசா கேட்டாங்க. `தெகிடி' மாதிரி இதிலும் எங்க காம்போ கண்டிப்பாப் பேசப்படும். இந்தப் படத்துல ஜனனி மட்டுமல்ல, ஐஸ்வர்யா மேனனும் நடிக்கிறாங்க."

``தமிழ்ல வேறென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?"  

`` `ரெட் ரம்' என்ற ஹாரர் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. விளம்பரப் படங்கள்ல என்னை அதிகம் நடிக்க வெச்ச விக்ரம் ஶ்ரீதர் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். தவிர, `கச்சாங்' என்ற படத்துல நானும் கலையரசனும் சேர்ந்து நடிக்கிறோம். ஜனனியும் நானும் நடிக்கிற படமும், ப்ரியதர்ஷன் சார் படமும் ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு. இதுதவிர, 'ஜாக்' என்ற ஒரு படம் ஓகே ஆகியிருக்கு. படத்துல முக்கியமான கேரக்டர்ல ஒரு நாய் நடிக்குது. இதோட ஷூட்டிங் சீக்கிரமா ஸ்டார்ட் ஆகும்." 

``அசோக் செல்வன் இனி ஹீரோவா, வில்லனா?"

``சினிமாவுல எனக்குப் பிடிக்கிற எல்லாத்தையும் பண்றேன். ஹீரோ, வில்லன்னு எனக்கான இமேஜை ஒரே மாதிரி வெச்சுக்க விரும்பலை. வர்ற வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் மனசுல இடம் பிடிக்கணும், அவ்ளோதான்!"  

வாழ்த்துகள் அசோக் செல்வன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு