Published:Updated:

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

Published:Updated:
“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“ ‘தெய்வத் திருமகள்’ சாரா , ‘கரு’ வெரோனிகா, ‘லட்சுமி’ தித்யா பாண்டே... இவங்கள்லாம் என் குழந்தைகளாவே ஆகிட்டாங்க. ‘வனமகன்’ சாயிஷா தங்கையாகிட்டா. இதேபோல்தான் சாய்பல்லவியும் அவங்க தங்கை பூஜாவும்.  சரண்யா பொன்வண்ணன் மேடம் எனக்கு அக்கா. அவங்க நம்பரை ‘அக்கா’ன்னுதான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன். பிரபுதேவா சார், நீரவ் ஷா, ஜெயம் ரவி, ஆர்யா எல்லாம் பிரதர்ஸ். ஜி.வி. என் நெருங்கிய நண்பன். பிரியதர்ஷன் சார், ஐசரி கணேஷ் அங்கிள் இருவரும் என் வழிகாட்டிகள். இப்படி சினிமா மூலம் கிடைச்ச அழகான உறவுகளை பொக்கிஷமா நினைக்கிறேன்.” - உறவும் உணர்வும் கலந்த கலவையாய் இருப்பதுதான் இயக்குநர் விஜய்யின் சிறப்பு. ஒருபுறம் தங்கை சாயிஷா-ஆர்யா திருமண வேலைகள், மறுபுறம் நண்பன் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு என்று நட்பும் உறவும் கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்தப் பரபரப்பு அடங்கிய நள்ளிரவு வேளையில் விஜய்யை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலிருந்து...

“நல்லா நினைவிருக்கு... பிரபுதேவா சாரும் ஐசரி கணேஷ் அங்கிளும் சேர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாங்க. அந்த நிகழ்ச்சி பிரபு சார் வீட்ல நடக்குது.  ‘இதன் முதல் படத்தை நீங்க டைரக்ட் பண்ணணும், நீங்க ஹீரோவா நடிக்கணும்’னு என்னையும் ஜெயம் ரவி சாரையும் சேர்த்தாங்க. ‘இது ஹீரோயினை மையப்படுத்தின கதை. இதில் எனக்கு நடிக்க ஸ்கோப் இருக்குமா’ன்னு ரவி சாருக்கு ‘தேவி’ கதையில் டவுட். பிறகு ‘தேவி’ கதையைக் கேட்ட பிரபுதேவா சார், ‘நல்லா இருக்கு. பேய் என்பது யுனிவர்சல் கான்செப்ட். ஒர்க்கவுட் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்குன்னு மூணு மொழிகள்ல பெருசா பண்ணலாம். பிரபுதேவா ஸ்டுடியோஸ்லயே பண்ணுவோம்’னார். ‘அப்படின்னா இந்தியா அறிந்த நடிகர் ஒருத்தர் வேணும். பிரபு சாரே ஏன் பண்ணக்கூடாது’ன்னு கணேஷ் அங்கிள்ட்ட சொன்னேன். ‘என்னது நானா, தமிழ்ல நடிச்சு 12 வருஷம் ஆச்சே?’ன்னு பிரபுதேவா சார் யோசிச்சார். ஆனா அதுக்கப்புறம் சின்சியரா நடிச்சுக்கொடுத்தார். படம் ஹிட். இப்ப ‘சார்லி சாப்ளின்-2’, ‘மெர்க்குரி’, ‘பொன்மாணிக்கவேல்’, ‘எங்மங்சங்’, ‘தேள்’, ‘ஊமை விழிகள்’னு அஞ்சாறு படங்கள் முடிச்சு வெச்சிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“ ‘தேவி’ படத்திலேயே எல்லா கேரக்டர்களையும் எஸ்டாபிளிஷ் பண்ணிட்டீங்க. ‘தேவி-2’-ல் என்ன சொல்லப்போறீங்க?”

“அந்தப் பேய் அப்படியே பிரபுதேவா சாருக்குள் வரும்னு முதல் பாகம் முடிவிலேயே 2-ம் பாகத்துக்கான லீட் வைத்திருந்தேன். அதுதான் ‘தேவி-2’ கதை. ‘தேவி’யில் தமன்னாவுக்குள் பேய் வந்திருக்குன்னு தமன்னாவுக்கே தெரியாது. அவங்களை பேய்ட்ட இருந்து பிரபுதேவா சார் காப்பாத்துவார். ‘தேவி-2’-ல் பிரபு சாருக்கு தனக்குள் பேய் வந்திருக்கிறது ஆரம்பத்தில் புரியும். ஆனாலும் அவருக்கே தெரியாமல் பேயிடமிருந்து அவரை தமன்னா மீட்டெடுக்கணும். அதை எப்படிச் செய்றாங்க என்பதுதான் கதை. முதல் பாகத்துல இருந்தவங்ககூட இதுல கோவை சரளா மேடமும் சேர்ந்திருக்காங்க. இதில் அவங்க ‘லாயர் லலிதா’. அதாவது வக்கீலான இவங்க தேவி குடும்பத்துக்குள் மாட்டிக்கிட்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்படுறாங்கன்னு  கதை போகும். அவங்க வந்ததும்தான் எங்களுக்கு மிகப்பெரிய எனர்ஜி கிடைச்சது. கலக்கிட்டாங்க.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“உங்க ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை வெச்சுப் பண்ணின படம் எந்தளவில் இருக்கு?”

“ஒரு நாயை வெச்சு ஜி.வி என்னெல்லாம் செய்யறார் என்பதுதான்  ‘வாட்ச்மேன்’ படம். போன வருஷம் அக்டோபர்லயே படம் முடிஞ்சிடுச்சு. விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி வாங்கறதுல தாமதம். கண்டிப்பா இதில் ஜி.விக்கு நடிகராவும் இசையமைப்பாளராகவும் மிகப்பெரிய பெயர் வரும்.”

“இசையமைப்பாளர் ஜி.வி-யைத் தெரியும். நடிகரா அவர் எப்படி இருக்கார்?”

“ஜி.வி. என் நெருங்கிய நண்பன். இருவரும் நிறைய டிராவல் பண்ணியிருக்கோம். நிறைய ஊர்களுக்குப் போயிருக்கோம். ஒண்ணா ஒரே ரூம்ல பலமுறை தங்கியிருக்கோம். ஜி.வி-க்கு ஒரு நல்ல படம் தரணும்ங்கிறது என் கடமையாவே இருந்தது. 2013-ல் தலைவா படத்தில் ‘வாங்கண்ணா’ பாட்டுல கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணினப்பதான் முதல்முதல்ல கேமராவைப் பார்க்கிறார். பிறகு 2019-ல் ஒரு நடிகரா அவர்கூட ஒர்க் பண்றப்போ அவ்வளவு முன்னேற்றம். ஆச்சர்யமா இருந்தது!”

“அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்குறீங்க. பயோபிக் பண்ணும் அனுபவம் எப்படி இருக்கு?”

“ ‘விப்ரி மீடியா’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு. என்டிஆர் பயோபிக் எடுத்தவர். இப்ப கபில்தேவ் பயோபிக் எடுத்துட்டிருக்கார். பயோபிக் ஸ்பெஷலிஸ்ட்னு அவரைச் சொல்லலாம். அவர்தான் ‘ஜெயலலிதாம்மாவைப் பற்றிய பயோபிக்கை  நீங்கதான்  டைரக்ட் பண்ணணும்’னு என்னை அணுகினார். ‘எவ்வளவு பெரிய விஷயம். நமக்கு அதுக்கான மெச்சூரிட்டி இருக்கா? அந்தளவுக்கு நாம வளர்ந்திருக்கோமா?’ன்னு எனக்குள் கேள்விகள். பிறகு திரைக்கதை அமைச்சோம். ராஜமௌலி சாரின் அப்பா விஜயேந்திர பிரசாத் சாரும் எங்களுடன் இணைஞ்சார். ரிசர்ச் வேலைகள் மட்டுமே கடந்த எட்டு மாசமா போயிட்டிருக்கு. ஐந்து பேர்  டீம். புத்தகங்களைப் படிக்கிறது, அதில் உள்ள விஷயங்களில் எதை வெச்சுக்கிறது, எடுக்குறதுன்னு விவாதித்து சீனியர்களிடம் கேட்டு முடிவெடுக்கிறோம். ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்தான் எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்.”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“தலைவியில் யார்யாரெல்லாம் நடிக்கிறாங்க?”

“இந்தி-தமிழ்னு இரண்டு மொழிகள்ல பண்றோம். இரு மொழிகளுக்கும் தெரிந்த நடிகர்களாக இருக்கணும். நாசர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மதுபாலா மேடம் எல்லாரும் இருக்காங்க. ராணா சார்ட்ட கேட்டிருக்கோம்.  இன்னும் பெரிய காஸ்டிங் இருக்கு. யார் யார்னு இன்னும் 10 நாள்கள்ல தெரிஞ்சிடும். மே மாசம் ஷூட்டிங் போறோம்.”

“சாயிஷாவை அறிமுகப்படுத்தினீங்க. இன்னைக்கு அவங்க திருமணம் முழுக்க அருகிலேயே இருந்திருக்கீங்க. எப்படி இருக்கு அந்த உணர்வு?”

“ ‘வனமகன்’ ஷூட்டிங் முடிஞ்சதும் சாயிஷாவுக்கும் எனக்கும் மிகப்பெரிய பாண்டிங். அண்ணன்-தங்கையாகவே ஆகிட்டோம். முதல் ரக்‌ஷாபந்தன் வந்தது. நான் ‘கரு’ ஷூட்டிங்ல இருந்தேன். சாயிஷா விமானத்தில் சென்னை வந்து நேரா நான் ஷூட் பண்ற இடத்துக்கு வந்துட்டாங்க.  நான் ஷூட் பண்ணிட்டிருக்கேன், என்னால அவங்களுக்கு டைம் கொடுக்க முடியலை. ‘நீ கேரவன்ல உட்காரும்மா’ங்கிறேன். ‘இல்லண்ணா... இந்த நாள் உங்களுக்கானது. உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு வந்திருக்கேன். நான் உங்ககூட இருக்கணும்’னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யம். இந்த வருஷ ரக்‌ஷாபந்தனுக்கும் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாங்க.  ஒரு சின்னப்பொண்ணு, இவ்வளவு பக்குவமா.. லவ்வபுளா இருக்காங்களேன்னு எனக்கு சந்தோஷம்.

திருமண விஷயம் தெரிஞ்சதும் ‘ஆர்யாவை எனக்கு ரொம்ப வருஷம் தெரியும். அதைவிட நீ எனக்கு ரொம்ப முக்கியம்’னு சொல்லிட்டு ஆர்யாவிடம் பேசினேன். ‘ஆமாம் பிரதர். இது காதல் திருமணம் கிடையாது. பேமிலி ஏற்கெனவே பேசியிருக்காங்க’ன்னார். ‘நீ திறமையான பொண்ணு. சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திடாதே’ன்னேன். ‘ஆர்யாவும் இதைத்தாண்ணா சொன்னார். கண்டிப்பா நடிப்பேண்ணா’ன்னு சொல்லியிருக்காங்க. ரெண்டுபேருமே மெச்சூர்டானவங்க. அவங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்!”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“அடுத்து என்னென்ன கமிட்மென்ட்ஸ்?”

“நான் பண்ணினதுலயே என் மனசுக்கு நெருக்கமான படங்கள், ‘கரு’, `லட்சுமி’. ரொம்ப ரசிச்சு, சந்தோஷமா பண்ணினேன். முதல் முறையா விகடனுக்குச் சொல்றேன், ‘கரு’வை இந்தியில் ரீமேக் பண்றேன். அக்டோபர்ல ஷூட் ஆரம்பிக்குது. பெரிய புரொடக்ஷன் கம்பெனி, பெரிய ஆர்ட்டிஸ்ட் பண்றாங்க. மொத்தப் படத்தையும் லண்டன்ல ஷூட் பண்றோம்.”

“நீங்க தமிழில் அறிமுகப்படுத்திய ஆட்களின் பட்டியல் நீளம். எல்லாருடனும் தொடர்புல இருக்கீங்களா?”

“பியா, ஏமி, சாய் பல்லவி, சாயிஷா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், வெரோனிகா, சாரா,  ‘சைவம்’ல நடிச்ச வித்யா பிரதீப்னு பலர் இருக்காங்க. சாரா ஹீரோயினா ஆகணும்னு காத்திருக்கா. ‘விஜி மாமா நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா ரெண்டு வருஷம் இருப்பேன். அப்புறம் என்னை ஹீரோயினா லான்ச் பண்ணணும்’னு திட்டமிடலோட இருக்கா. அதுவரை நான் பீல்டுல இருக்கணும் என்பதுதான் என் ஆசை.”

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“சினிமா மூலம் கிடைச்ச இவ்வளவு உறவுகளோட இருக்கீங்க. ஆனா தனியா இருக்கோம்னு தோணினது உண்டா?”

“வலியிலிருந்து மீண்டு வரவே எனக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டுச்சு. அதுக்கு மருந்தா எனக்குப் படங்கள்தான் இருந்துச்சு. நிறைய பேர் அன்போடு பழகுறதால அந்த எண்ணம் எனக்கு ஏற்படலையோன்னு நினைக்கிறேன். ஆனா நீங்க கேக்கும்போதுதான், ‘ஓ... நாம தனியா இருக்கோம்ல’ன்னு தோணுது. வீட்ல அம்மாவும் தங்கையும் ரொம்ப பிரஷர் பண்றாங்க. அதுக்கான மனநிலை வரலை. வீட்ல அழுத்தம் தர்றாங்களேன்னு அவசரப்படக்கூடாதுன்னு கவனமா இருக்கேன். நான் எது பண்ணினாலும் அதில் 100 சதவிகிதம் இருந்திருக்கேன். பார்ப்போம்.”

- ம.கா.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism