அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிழ்ப் பெண் என்ற அடையாளத்துடன் சினிமாவில் காலடியெடுத்துவைத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர், சமந்தா. சென்னையிலும் ஹைதராபாத்திலும் இவருக்கு ஆடம்பரமான பங்களாக்கள் உண்டு. இவரது ஏரியாவில் விசிட் அடித்து, மிஸ்டர் மியாவ் திரட்டியத் தகவல்கள் இதோ...

மிஸ்டர் மியாவ்

•  சென்னையில் பிறந்துவளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே பாக்கெட் மணிக்காக மாடலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

• சமந்தா என்றால், ‘கடவுள் சொல்வதைக் கேட்பவர்’ என்று அர்த்தமாம். நண்பர்களுக்கு இவர், செல்லமாக ‘சாம்’. குடும்பத்தினருக்கோ ‘யசோதா’!

• தெலுங்கு முன்னணி நாயகன் நாகசைதன்யாவைக் கரம்பிடித்த பிறகு, சமந்தா ரூத் பிரபு என்ற தன் பெயரை, சமந்தா அக்கினனி என்று ட்விட்டரில் மாற்றிக்கொண்டார். அக்கினனி என்பது நாகர்ஜுனாவின் குடும்பப்பெயர்.

• சுஷி எனும் ஜப்பானிய உணவு வகை, சமந்தாவுக்கு ஆல்டைம் ஃபேவரைட். வேகவைத்த காய்கறிகள் மற்றும் கடல் உணவு வகைகளைக் கொண்டு சமைக்கப்பட்ட சுஷி, பெருநகர ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்கும்.  

• 1940-களில் ஹாலிவுட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன், சமந்தாவின் இன்ஸ்பிரேஷன். தமிழில் ரேவதி நடித்த படங்கள் இவரது ஃபேவரைட். கண்ணாடி முன்பாக நின்று நடித்துப் பழகும்போது பேசுகிற வசனங்கள், இவர்கள் இருவரது வசனங்களாகத்தான் இருக்கும் என்கிறார், சமந்தா.

• ஆஸ்திரேலிய எழுத்தாளர் ராண்டா ப்ரன் எழுதிய‘தி சீக்ரெட்’ புத்தகத்தை இதுவரை நூற்றுக்கும் அதிகமான முறை வாசித்திருக்கிறாராம், சமந்தா. ‘நல்லதே நினைத்தால், நல்லதே நடக்கும்’ என்ற நேர்மறை சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம் இது. சமந்தாவும் அந்தக் கோட்பாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர்.

• இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்.

• மலையாளத்தில் ‘அம்மா’ அமைப்பைப்போல், தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஓர் அமைப்பை நிறுவ இருக்கின்றனர், தமிழ் நடிகைகள். அதில், சமந்தாவுக்கு முக்கியப் பொறுப்புத் தரப்படுமாம்.

ம்யூட்

• இரண்டெழுத்து நடிகருடன் ஒரு படத்தில் கமிட்டாகிய இரண்டு பெயர் கொண்ட கன்னடத்துப் பைங்கிளி, பெண்களுக்குப் பிடித்த தெலுங்கு திரையுலக நாயகனைக் கைப்பிடிக்கப்போகிறார். ஏற்கெனவே ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் ரத்துசெய்யப்பட்டதில் சோகத்தில் இருந்த அந்த நடிகை, இப்போது உற்சாகத்தில் இருக்கிறார்.

• காதலனைக் கைப்பிடிக்க ஜாதகம் பார்க்கச்சென்றார், நம்பர் ஒன் நடிகை. ‘இப்போது திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் குறைந்துவிடும்’ என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அதனால், குழப்பத்தில் இருக்கிறார், நாயகி.

• துபாயிலிருந்து இறக்குமதியான நடிகைக்கு ஹாலிவுட்மீது தீராத ஆசை. அதற்காக, பலரிடமும் வாய்ப்புக் கேட்டுவந்தார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தின் கதை மாட்டியிருக்கிறதாம். விரைவில் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குத் தாவப்போகிறார்.