Published:Updated:

`தேவ்' ரிலீஸ் அன்று இரண்டாயிரம் ரசிகர்களுக்கு முன்பு `என்ஜிகே’ டிரெய்லர்!

`தேவ்' ரிலீஸ் அன்று இரண்டாயிரம் ரசிகர்களுக்கு முன்பு `என்ஜிகே’ டிரெய்லர்!
`தேவ்' ரிலீஸ் அன்று இரண்டாயிரம் ரசிகர்களுக்கு முன்பு `என்ஜிகே’ டிரெய்லர்!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'என்ஜிகே' படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 14-ம் தேதி அன்று ரிலீஸாகவிருக்கிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. 

அந்நாளில்தான் அறிமுக இயக்குநர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'தேவ்' திரைப்படமும் ரிலீஸாகிறது. சமீபத்தில் கார்த்தி தனது முகநூலில் ரசிகர்களுடன் லைவ்வில் கலந்துரையாடும்போது, `` `என்ஜிகே’ படத்தின் டிரெய்லரை தான் பார்த்துவிட்டதாகவும், அது வெறித்தனமாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக 'தேவ்' படத்தில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்தான் 'என்ஜிகே' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். 

மேலும், பிப்ரவரி 14-ம் தேதி அன்று சென்னை கோயம்பேட்டிலிருக்கும் ரோகிணி தியேட்டரில் 2,000 ரசிகர்களுக்கு முன்பு பெரிய திரையில் டிரெய்லர் ரிலீஸாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சாய்பல்லவி, ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.