Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

படம்: கிரண் ஷா

மிஸ்டர் மியாவ்

படம்: கிரண் ஷா

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இந்த முறை மிஸ்டர் மியாவ் வலம் வந்தது அக்கட பூமியான ஹைதராபாத். அங்கிருந்து நடிகை சாயிஷா பற்றி மியாவ் அள்ளிவந்த தகவல்கள் இதோ... 

• சாயீஷா அறிமுகமானது, ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தில். நாகார்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சாயீஷா, படத்தின் டப்பிங் முடிந்த நிலையில், புகைப்பட ஆல்பத்தை வெளியிட்டார். இயக்குநர் விஜய் அவரது ஆல்பத்தைப் பார்த்து ‘டிக்’ அடிக்கவே, ‘வனமகன்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• சாயீஷாவின் தாத்தா திலீப்குமாரும், பாட்டி சயீரா பானுவும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள்.  பாட்டி சயீரா பானு, சாயீஷாவின் திருமணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியுள்ளார்.

• சிறு வயதிலிருந்தே படிப்பில் கில்லாடியான சாயீஷா, பள்ளிப் படிப்பில், 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• சிறு வயதிலேயே நடனத்தின்மீது அதிக ஆர்வம்கொண்ட சாயீஷா, 10 வயதிலேயே லண்டனில், லத்தீன் அமெரிக்க நடனத்தைக் கற்றுக்கொண்டார்.

• ‘வனமகன்’ படம்தான் இவரின் நடனத் திறமையை முதலில் வெளிக்கொண்டு வந்த திரைப்படம். ஒடிசி, கதகளி, பெல்லி, குச்சுப்புடி எல்லாமே இவருக்கு அத்துபடி! 

• வீட்டுக்கு ஒரே பெண்ணான சாயீஷா, செல்லமாக வளர்க்கப்பட்டவர். எந்தவொரு முடிவையும் தன் அம்மாவிடம் கேட்காமல் எடுக்கமாட்டார். சினிமாவில் சாயீஷாவுக்குக் காஸ்ட்யூம் டிசைனர் இவருடைய அம்மாதான்.

• சாயீஷாவின் அப்பா பாலிவுட்டில் விநியோகஸ்தராக இருக்கிறார். தமிழில் சாயீஷா நடித்த ‘வனமகன்’ ரிலீஸாவதற்கு முன்பே இந்தியில் இவர் நடித்திருந்த ‘ஷிவான்’ ரிலீஸ் ஆகிவிட்டது.

• சாயீஷாவின் பொழுதுபோக்கு உடற்பயிற்சிசெய்வதுதான். பொழுதுபோகவில்லை என்றால், நீச்சலடிக்கக் கிளம்பி விடுவார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வெரைட்டியான கேக்குகளைச் செய்வதும் சாயீஷாவுக்குப் பிடித்த விஷயம்.

• சொந்த ஊர் மும்பையாக இருந்தாலும் ஆந்திர உணவு வகைகள்தான் சாயீஷாவின் ஆல்டைம் ஃபேவரைட்!

ம்யூட்

• மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த தமிழ் நடிகை சமீபத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கே, தனது மொபைலில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட, அது சர்ச்சையாகியிருக்கிறது. சாதாரண மக்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்லத் தடை. உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தார்கள்... எனக் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம், நாயகி.

• தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் எனச் சொல்லி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய உயரமான ஆங்கிலோ இந்தியன் நடிகை, சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான போட்டோவை இணையத்தில் ஏற்றியிருக்கிறார். இந்தப் போட்டோக்கள்தான் வைரலாகி வருகின்றன. வைரலுக்காகவே இப்படிப்பட்ட போட்டோக்களை வெளியிடுகிறாரோ... எனப் பலரும் கமென்ட் அடிக்கிறார்கள்.

• நல்லி எலும்பு சாப்பிடுவதில் கில்லியான நடிகரைத் தேடிப் பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், இவர் கேட்கும் சம்பளத்தைக் கேட்டு அலறி ஓடுகிறார்களாம். கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்வரைக்கும் சம்பளம் கேட்கிறராம் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism