Published:Updated:

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

Published:Updated:
அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

`லாக்கப்’ நாவல்  `விசாரணை’ படமாக உருவாச்சு. ‘நல்ல படம்’னு நாலா பக்கங்கள்ல இருந்தும் பாராட்டுகள். அப்ப ஓர் அலைபேசி அழைப்பு. ‘நான் பூமணி பேசுறேன். என்னைத் தெரியுமா உங்களுக்கு?’ன்னு எதிர்முனையில் ஒரு மெல்லிய குரல். ‘தெரியும் சார் சொல்லுங்க’னேன். ‘உங்களைச் சந்திக்கணும்’னார்.  நேரில் சந்திச்சேன். ‘நாவல்களைப் படமாக்குறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’ன்னு கேட்டார்.  ‘எனக்கு அதில் ஆர்வம் இருக்கு சார்’னு சொன்னேன். உடனே, ‘இது உங்களுக்குப் பொருத்தமான நாவலா இருக்கும். படிங்க’ன்னு சொல்லி, தன் ‘வெக்கை’ நாவலைக் கொடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன். ‘அப்பா, அம்மா, மகன்னு இருக்கிற ஒரு பேமிலி டிராமா படம் இதுவரை  நான் பண்ணியதில்லை. இது அப்படியான ஒரு படமாகவும் இருக்கும். தவிர, சாதிய அமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தண்டனை  முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். நிச்சயம் இதைப் படமா பண்ணணும்’னு தோணுச்சு. ‘வெக்கை’ நாவல், ‘அசுரன்’ ஆன கதை இதுதான்” வெற்றிமாறன் சொல்லச் சொல்ல அதுவே ஒரு படமாக நமக்குள் ஓடத்தொடங்குகிறது. தன் உத்திரமேரூர்த் தோட்டத்தில் தர்ப்பூசணிப் பழங்களைப் பறித்தபடியே பேசத்தொடங்குகிறார் வெற்றிமாறன்.

“ ‘வெக்கை’ நாவல், 25 மணிநேரப் படமா எடுக்கிற அளவுக்கான பதிவு. அதில் சினிமாவுக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு கதையா பண்ணியிருக்கோம். இது 60-களின் தொடக்கம், 80-களின் நடுவில்னு இரண்டு காலகட்டங்கள்ல நகரும் கதை.”

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

“நாவலைப் படமாக்கும்போது என்ன மாதிரியான சவால்கள் இருக்குன்னு நினைக்கிறீங்க?”

“நாவலைப் படிச்சிட்டுப் படம் பார்க்கிற வங்களுக்கு நிச்சயம் அதிருப்தி ஏற்படும். அது தவிர்க்க முடியாதது. இந்தப் படத்துக்கு மட்டு மல்ல, நாவலைப் படமாக்கும் எந்த சினிமாவுக்கும் இது நேரக்கூடிய ஒன்றுதான். ஒரு நாவலை வாசிக்கிறவங்க, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உருவம் கொடுத்து ஒரு உலகத்தைத் தங்களுக்குள் உருவாக்கியிருப்பாங்க. திரையில் பார்க்கும்போது அந்தப் பாத்திரங்கள் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால் அந்த உலகத்தை ‘வெக்கை’ மூலமாக அறிந்துகொள்ளாதவர்களுக்கு ‘அசுரன்’, நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும்.”

“இதில் தனுஷ் எப்படி அசுரனாக மாறியிருக்கிறார்?”

“அசுரன் அல்ல, அசுரன்கள். இதில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கள்.  18 வயசு தனுஷை ‘வடசென்னை’யில் பார்த்திருக்கீங்க. 45 வயசு தனுஷை ‘அசுர’னில் பார்க்கப்போறீங்க.

தனுஷுடன் ‘அது ஒரு கனாக்காலம்’ தொடங்கி ‘வடசென்னை’ வரை வேலை செஞ்சிருக்கேன். ஆனால் இந்தப்படத்தில் தனுஷிடம் நான் பார்த்த டெடிகேஷனை வேறு எந்தப் படத்திலும் பார்த்ததே கிடையாது.

ஒரு மலையேறும் காட்சி. ஏற மூணு மணிநேரம், இறங்க மூணு மணிநேரம், ஷூட் பண்ண இரண்டு மணிநேரம்னு  ஒரு கால்ஷீட் முடிஞ்சிடும். கேமராவுக்குப் பின்னாடி ஒர்க் பண்ற டெக்னீஷியன்கள் எவ்வளவு டயர்டா இருந்தாலும் கேமராவை ஆன் பண்ணிட்டு உட்கார்ந்துடலாம். அவங்களுக்கு முகம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. ஆனா, நடிகர்கள் அந்த நேரத்தில் உடம்பும் மனசும் எப்படி இருந்தாலும் காட்சியினுடைய தன்மைக்கு ஏற்றாற்போல் நடிச்சாகணும். அந்தச் சவாலை ஏற்று, தன் நடிப்புத்திறமையை நிரூபிச்சிருக்கார் தனுஷ். ஒவ்வொருமுறை வொர்க் பண்ணும்போதும்  தனுஷ் என்கிற கலைஞன்மீது ஆச்சர்யமும் பிரமிப்பும்தான் அதிகமாகுது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

“இதுக்கு முன்ன நிறையபேர் அழைத்தும் தமிழுக்கு வராத மஞ்சுவாரியர் முதன்முறையாக உங்க படத்துல நடிக்கிறாங்க...”

 “ ‘இப்படி ஒரு ஐடியா’ன்னு கதையைச் சொன்னேன். ‘நிச்சயம் நான் பண்றேன்’னு வந்துட்டாங்க. ஸ்பாட்டுக்கு வந்து உட்கார்ந்தாங்கன்னா ஷூட்டிங் முடிச்சிட்டுதான் திரும்ப கேரவன் போறாங்க. மலையாளத்தில் முன்னணி நடிகை என்கிற விஷயத்தைத் தலையில் ஏத்தாம, இயல்பா இருக்காங்க... ரொம்ப பிரமாதமா நடிச்சுக்கொடுக்கிறாங்க. அந்த கதாபாத்திரத்துக்கு அவங்களை விட வேற யாரும் நியாயம் செய்ய முடியாது!”

“பசுபதி முதல் பாலாஜி சக்திவேல் வரை அசுரனில் இன்னும் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் இருக்கே?”

“என் முதல் படத்துல இருந்தே பசுபதிகிட்ட பேசிட்டிருக்கேன். முதல் படத்துல அவரை  ரீச் பண்ண முடியலை. ஆடுகளத்தில் ஒரு ஆப்ஷனா இருந்தார். விசாரணைக்கு முன் ‘சூதாடி’ படம் திட்டமிடும்போது பேசினேன். ஆனால் அந்தப் படமே நடக்கலை. ‘வடசென்னை’யில் செந்தில், குணா இரண்டு கேரக்டர்களில் ஒருவராக நடிக்கவைக்கலாம்னு பேசினோம். தவிர்க்க முடியாத காரணங்களால அந்த நேரத்தில் அது நடக்கல. இதில் ஒருவழியா பிடிச்சுட்டேன். இதில் அவருக்கு மஞ்சுவாரியரின் அண்ணன் கதாபாத்திரம். அந்தக் குடும்பத்துக்கு காட் பாதர் மாதிரின்னு சொல்லலாம். அவர் சொல்றதைக் கேட்டுதான் எல்லாமே நடக்கும்.  தனுஷ்-மஞ்சு-பசுபதி இவங்க மூவருக்குமான காம்பினேஷன் காட்சிகளை பிலிம் மேக்கரா இல்லாம நல்ல நடிப்பை ரசிக்கிற ரசிகனா பார்க்கும்போது அவ்வளவு அழகா இருக்கு.

இன்னொரு ஆச்சர்யம், இயக்குநர் பாலாஜி சக்திவேல். ஒருநாள் மிஷ்கின் அலுவலகத்தில் நிறைய இயக்குநர்கள் சந்திச்சுப் பேசிட்டிருந்தோம். அதில் அதிகமா பேசினது பாலாஜி சக்திவேல்தான். நைட் 11 மணியில இருந்து விடியற்காலையில 3 மணிவரை பேசிட்டே இருந்தார். அவர் பேசுறதைக் கேட்டு எல்லாரும் சிரிச்சிட்டே இருந்தோம். அன்னையில இருந்து ‘நீங்க நடிக்கலாம்’னு சொல்லிட்டே இருப்பேன்.  ‘ஏங்க, என்னை  மாட்டி விட்றாதீங்க’ம்பார். ஆனாலும் நான் நடிக்கணும்னு கேட்டப்ப, மறுக்காம வந்துட்டார். இன்னொரு அறிமுகம்,  கருணாஸின் மகன் கென். இப்போதைக்கு அவனைப்பற்றி அதிகம் பேசலை. படம் பார்க்கும்போது நிச்சயம் உங்களை சர்ப்ரைஸ் பண்ணுவான். இவர்களைத் தவிர, நரேன்,  பவன் முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கிறாங்க.”

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

“தயாரிப்பாளர் தாணுவுடன் இது உங்களுக்கு முதல் படம். எப்படி இருக்கு இந்தக் காம்பினேஷன்?”

“இதுக்கு முன்பே நாங்க பேசிட்டுதான் இருக்கோம். எங்க மாமாவுக்கு தாணு சார்  நல்ல நண்பர். ‘பொல்லாதவன்’ முடிச்சதுமே எங்க மாமா என்னை அழைச்சிட்டுப்போய் தாணு சாரை சந்திக்க வெச்சார். அப்பப்ப அவரை சந்திப்பேன். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு அட்வான்ஸ் கொடுத்தார். அதைத் திரும்பக் கேட்கவே இல்லை. ‘இருக்கட்டும். நீயே வெச்சுக்க. படம் பண்ணும்போது பார்த்துக்கலாம்’னார்.  பெரிய ப்ராஜெக்டா பண்ணணும்னு ஆசைப்படுவார். படத்துக்காகச் செலவு செய்யும் விஷயத்துல நம்மை அசரவைக்கிறவர் தாணு சார். வழக்கம்போல் வேல்ராஜ் ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஜாக்சன்னு என் டீம் அப்படியே இருக்காங்க. சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் இசை.”

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

“வடசென்னையின்  அடுத்தடுத்த பாகங்களை எப்போது எதிர்பார்க்கலாம்?”

“ இது, அமீர், தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்னு எல்லோருமே என்கிட்ட அடிக்கடி கேட்கிற கேள்வி. ‘ஒரு கதை நல்ல திரைப்படமாக உருவாக வேண்டும் என்றால், காலத்தையும் சூழலையும் தனக்கு ஏற்றதாக உருவாக்கிக்கொண்டு நம்மைக் கையில எடுத்து அது தனக்குத் தேவையானதை உருவாக்கிக்கும்.’ - இது பாலுமகேந்திரா சார் சொன்ன விஷயம். அதுதான் இந்தக் கேள்விக்கான பதிலும். அப்படித்தான் வடசென்னையும் தன்னை உருவாக்கிக்கிச்சு. சந்திரா அழாமல் வடசென்னை முற்றுப்பெறாது. இரண்டாம் பாகமும் தயாராகிட்டிருக்கு... விரைவில் அறிவிப்பு வெளியாகும்!”

- ம.கா.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism