Published:Updated:

கமலுடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி! - 'இந்தியன் 2' அப்டேட்

கமலுடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி! - 'இந்தியன் 2' அப்டேட்
கமலுடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி! - 'இந்தியன் 2' அப்டேட்

`2.0' படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்க இருக்கும் திரைப்படம் `இந்தியன் 2'. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்து பல வருடங்கள் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு பலருக்கும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக, இந்தப் படத்துக்குப் பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் கமலும் அறிவித்திருக்கிறார். 

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. அனிருத் இசையமைக்கக் கதாநாயகியாக காஜல் அகர்வால் கமிட் ஆகியிருக்கிறார். தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்ததில் அதிகாரபூர்வமான தகவல் என்றே அறியப்படுக்கிறது. மேலும், `இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதியாக நடித்த கமல் இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் தொடர்கிறார்.

சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் கேரக்டர் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே கேரக்டர் ரோலில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதனால், நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாலாஜி திரைக்கதை வசனம் எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் `எல்.கே.ஜி' திரைப்படம் இந்த மாதம் இறுதியில் ரிலீஸாக இருக்கிறது.