Published:Updated:

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

Published:Updated:
“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“எங்க ஊர்ல பெண்கள் கபடி ரொம்பவே பாப்புலர். அந்த டீமுக்கு என் அப்பாதான் ஆலோசகர். விவசாயம் பார்க்கிறதைவிட, கபடி டீம்கூட இருக்கிறதைத்தான் அவர் விரும்புவார். பெண்கள் கபடி விளையாடுறது, அவங்களுக்கான போராட்டம், அதில் நடக்கும் அரசியல் இதையெல்லாம் பதிவு பண்ணணும்ங்கிற அவருடைய எண்ணம்தான், இந்தப் படம் உருவாகக் காரணம்.” - ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் தொடக்கப்புள்ளியை  ஆர்வத்துடன் விவரிக்கிறார், இயக்குநர் சுசீந்திரன்.

“ ‘கென்னடி கிளப்’ பெயர்க் காரணம்?”

“50 வருடம் பழைமையான கபடி டீம் கதைக்குத் தேவைப்பட்டது. அப்படித் தமிழ்நாட்டுல இருக்கிறது, மூணே டீம்தான். வெண்ணிலா கபடிக்குழு, கென்னடி கிளப், லட்சுமி மில்ஸ் டீம். அதுல, ‘வெண்ணிலா கபடிக்குழு’வைப் படமா எடுத்துட்டேன். லட்சுமி மில்ஸ் டீம் தனியார் கம்பெனியுடையது. அதனால, ‘கென்னடி கிளப்’பைக் கதைக்கு எடுத்துக்கிட்டேன்”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“பாரதிராஜா - சசிகுமார்னு ரெண்டு இயக்குநர்களுக்கு என்ன கேரக்டர்ஸ்?”

“எங்க ஊர் கபடி வீரர்கள் எல்லோரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்கதான். அவங்க காலேஜ் பீஸ், கேன்டீன் பீஸ் இதையெல்லாம் செல்வம்னு ஒருத்தர்தான் பார்த்துக்கிறார். அவர் இந்தியன் கபடி டீம் கேப்டன் முருகானந்தத்தின் தம்பி. செல்வம் கேரக்டரையும், என் அப்பா கேரக்டரையும் சேர்த்து பாரதிராஜா சார் கேரக்டரை உருவாக்கினேன். அவருடைய சிஷ்யனா, ‘முருகானந்தம்’ங்கிற கேரக்டர்ல வர்றார், சசி சார்.”

“கபடி வீராங்கனைகள் பலரைப் படத்துல நடிக்க வெச்சிருக்கீங்களாமே?!”

“கபடி விளையாடி ஜெயிக்கிற பணத்துலதான் அவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கணும். அவங்களுடைய போராட்டமான வாழ்க்கையைப் பதிவு பண்ண அவங்களே இருந்தாதான் சரியா இருக்கும்னு நினைச்சேன். விளையாட்டு வீரர்களை இந்த நாடு எப்படிப் பார்க்குது, அவங்க இந்த  தேசத்தை எப்படிப் பார்க்கிறாங்க என்பதுதான் கதை. 2017-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவமும் படத்துல இருக்கு.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“நீங்க என்ன ஜானர்ல படம் எடுத்தாலும், அதில் காதல் இருக்கும். இந்தக் கதையில யார் ஹீரோயின், காதல் எப்படி இருக்கும்?”

“மீனாட்சி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துறோம். எட்டு மாசம் பயிற்சி எடுத்து கபடி பிளேயரா நடிச்சாங்க. படத்துல சசிகுமாருக்கு இவங்கதான் ஜோடி. ஆனா, வழக்கமான காதல் ஜோடி பீல் வராது.”

“திடீர்னு நீங்க அஜித்தை அரசியலுக்கு அழைக்க என்ன காரணம்?”

“ட்விட்டர்ல என் கருத்தைப் பதிஞ்ச பிறகு, அரசியல் ரீதியா எதிர்ப்பு வருது. ஒவ்வொருத்தரும் காசு கொடுத்து ஒரு சோஷியல் மீடியா டீம் வெச்சிருக்காங்க. அது ஆரோக்கியமான விஷயமே இல்லை. அந்த மாதிரி ஒரு கூட்டம் சினிமாவுக்குள்ளேயும் உருவாகிடுச்சு. அவங்களுக்கு மத்தவங்களைத் திட்டுறதுதான் வேலை. திருமுருகன் காந்தி, சகாயம், கரு.பழனியப்பன், எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, ‘நீயா நானா’ கோபிநாத்... இவங்களை மாதிரி நல்லவங்க அரசியலுக்கு வந்தா, நல்லது நடக்கும்னு நினைக்கிறேன். அவங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இல்லை. ஆனா, அஜித்துக்கு மக்கள் செல்வாக்கு அமோகமா இருக்கு. விஜயகாந்த் சாருக்குப் பிறகு, அஜித் சார்தான் சினிமாவுல பல நல்ல விஷயங்களை யாருக்கும் தெரியாம பண்றார். இப்படி நல்லது செய்யணும்னு நினைக்கிற ஒருத்தர், அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறேன்.”

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“ரஜினி, கமல், விஜய்... அரசியலுக்கு வந்த, வர நினைக்கிற நட்சத்திரங்களை யெல்லாம் விட்டுட்டு, உங்க ஆசை அஜித்தைச் சுற்றி ஏன்?”

“மக்களுக்கு யாரால் நல்லது நடந்தாலும், நான் வரவேற்கத் தயார். மத்தவங்களைப் பற்றி நான் பேசல. ஆனா, அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அப்படி வரலைனாகூட, தமிழ்நாட்டுல நடக்கிற அரசியல் மாற்றத்துக்குக் காரணமா இருப்பார், இது நடக்கும்.”

“ ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ என சாதிக்கு எதிரான அரசியல் படங்களை எடுத்தவர் நீங்கள். ஆனால், அஜித் இதுவரை சாதி உட்பட சமூக அநீதிகளுக்கு எதிரா குரல் எழுப்பவில்லையே?”

“சாதி, மதவாதம் மாதிரியான பிரிவினைகளுக்கு எதிராதான் அஜித் நிச்சயம் இருப்பார். அவர்கிட்ட யாரும் இதைப் பத்திக் கேட்கவே இல்லையே? அவர்கிட்ட இதைப் பத்தியெல்லாம் கேட்டால் அவர்கிட்ட இருந்து நல்ல பதில் வரும்.”   

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“காவிரிப் பிரச்னைக்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்தபோது வராதவர் அஜித். எந்தப் பொதுப்பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்காத அஜித்தை அரசியலுக்கு அழைப்பது சரிதானா?”

 “அஜித் சார் சினிமாவுல இருக்கிற சிலரால் பாதிக்கப்பட்டிருக்கார். அதனால்தான் சில இடங்களில் விலகி இருக்கணும்னு முடிவு பண்ணிட்டார் போல. அவர் வந்திருந்தால் காவிரி நீர் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் நிச்சயம் வந்திருப்பார். மொத்தமா விலகி இருக்கும்போது, சில நிகழ்ச்சிக்கு வந்து சிலவற்றிற்கு வராமல் இருந்தால் நல்லா இருக்காதுன்னு நினைச்சிருக்கலாம். மத்தபடி, யாராவது நல்ல விஷயங்களைப் புறக்கணிப்பார்களா?!”  

- உ.சுதர்சன் காந்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism