
கேத்தரின் தெரசா
கேரளா பூர்வீகம், கன்னடத்தில் அறிமுகம், தெலுங்கில் சினிமா கரியர் ஸ்பீடெடுத்து, தமிழில் ‘மெட்ராஸ்’ நாயகியாக வந்து எனத் தென்னிந்திய ரசிகர்களைத் தன்வசமிழுத்த கேத்தரின் தெரசா ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜாவுடன் நடிக்கவிருப்பதில் ஏக குஷியில் இருக்கிறார். நியூயார்க்கில் கேத்தரின் கற்றுக்கொண்ட ஸ்டிரீட் டான்ஸை இந்தப் படத்தில் பார்க்கலாம் என ரசிகர்களும் ஆவலுடன் வெய்ட்டிங்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கீர்த்தி சுரேஷ்
இந்தியக் கால்பந்து கோச் சையத் அப்துல் ரஹீம் பயோபிக்கில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘சாவித்திரி’ கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோய்தான் தயாரிப்புக்குழு இவரை அணுகியதாம். பாலிவுட் என்ட்ரி என்பதால் எப்போதையும்விட உற்சாகமாக இருக்கிறார் கீர்த்தி.