Published:Updated:

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

Published:Updated:
“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

மீபகாலத்தில் வெளிவந்த திரைப்படங்களில் பலரின் கவனத்தையும் கவர்ந்த படம் ‘நெடுநல்வாடை.’ இந்தப் படத்துக்கு மொத்தம் 52 தயாரிப்பாளர்கள் என்பது தமிழுக்குப் புதுசு. படக்குழுவைச் சென்று சந்தித்து உரையாடியதில்...

“இத்தனை நண்பர்கள் என்னை நம்பிப் பணம் தந்திருக்காங்க. ஏதோ கடமைக்குப் படம் எடுக்க முடியாது. படம் வெளியாகி இன்னும் ஒரு வாரம்கூட ஆகலை. இன்னைக்கு வரைக்கும் என்னிடம் வசூல் குறித்து எந்தக் கேள்வியும் யாரும் கேட்கலை. அத்தனை நம்பிக்கையை என்மீது வைத்திருக்கும்போது, என் வேலை சரியா இருக்கணும்ல! சரியான திட்டமிடல், எல்லோரிடமும் கதையின் சாராம்சத்தைப் பற்றி விளக்குவதுன்னு எல்லாவற்றையும் புரியவைத்து இந்தப் படத்தை உருவாக்கினோம். காசி விஸ்வநாதன் சாரைப் போன்ற சில சீனியர்கள் இந்தப் படத்தில் இருந்தது, எனக்குப் பெரும்பலம்” என்று எடிட்டர் காசி விஸ்வநாதனின் கைகளைப் பற்றிக்கொண்டார் செல்வகண்ணன்.

“எனக்கு வேலையைச் செய்வதில் அவ்வளவு சுதந்திரம் இருந்துச்சு. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சி படத்தின் மிக முக்கியமான ஒன்று. அதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்துக்கு புட்டேஜ் வெச்சிருந்தாங்க” என்கிறார் காசி விஸ்வநாதன்.

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பொதுவா ஒரு பீரியட் படம் எடுக்கும்போது, கேமராவின் ப்ரேமில் இன்றைய காலகட்டத்தின் செல்போன் கோபுரங்கள், வண்டிகள் தெரியாத வண்ணம் எடுக்கணும். ஆனா, இந்தப் படத்தின் ஷூட்டிங் லொக்கேஷன்களில் எங்குமே செல்போன் கோபுரங்கள் இல்லை. அதனால் ஈஸியா எடுக்க முடிந்தது” என்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி.  “ஹீரோ சார் பேசுங்க. படத்துல இருக்கிற மாதிரியே அமைதியாவே இருக்கீங்களே?” என்று கலாய்த்தார் வினோத்.

சிரித்தவாறே பேசத் தொடங்கினார் இளங்கோ. “எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, ‘மைம்’ கோபி அண்ணனால்தான். அவர்தான் இந்தப் படம் பற்றி என்கிட்ட சொல்லி ஆடிஷனுக்குப் போகச் சொன்னார். கிட்டத்தட்ட 50 சினிமா கம்பனியில் வாய்ப்பு கேட்டு நின்னிருக்கேன். அதில பாதி கம்பனி, உண்மையான சினிமா கம்பனியே கிடையாது. அதனால இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தப்போ கொஞ்சம் யோசனையாவே இருந்துச்சு. அரைகுறை மனநிலையுடனே போனேன். ஆனா கதையைக் கேட்டபிறகுதான் நம்பிக்கை பிறந்துச்சு. நானும் டைரக்டரோட நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல, “ஹீரோவைப் பிடிச்ச கதை கேட்டாச்சு. ஹீரோயினைப் பிடிச்ச கதையைச் சொல்லுங்க” என்றேன்.

“உங்க ஆர்வம் புரியுது” என்று என்னைக் கலாய்த்தபடியே அஞ்சலி நாயரைப் பார்த்துப் புன்னகைத்தார் செல்வகண்ணன். “ஹீரோயினைத் தேர்வு செய்ய உதவியா இருந்தது, படத்தில் மருதுபாண்டி பாத்திரத்தில் நடித்திருந்த அஜய் நட்ராஜ். அவர்தான் இந்தப் படத்துக்குக் காஸ்டிங் செய்தார். அவர் எனக்கு அறிமுகம் செஞ்சப்போ, அஞ்சலிக்கு 19 வயது. ஆனால், அவர் வயதை மீறிய ஒரு மெச்சூரிட்டி அவரிடம் இருந்துச்சு. கதையைப் புரிந்துகொண்டு நடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது” என்றார்.

 “செல்வகண்ணன் சார் கதையைச் சொல்லிட்டு, படத்தின் பைலட் ஷாட்டுகளைப் போட்டுக் காட்டினார். அதைப் பார்த்ததிலேயே இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது புரிந்தது. நான் கேரளாவில பிறந்து வளர்ந்தவ. தமிழ்நாட்டுக் கிராமம் எப்படி இருக்கும்னே தெரியாது. அங்கே போய் நடிக்க ஆரம்பிச்சபிறகுதான், எனக்குத் தெரியாத ஒரு பெரிய உலகம் இருக்குங்கிறதே தெரிய வந்துச்சு. எனக்கு அந்த வில்லேஜ் மக்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு” என்கிறார் அஞ்சலி, நேசம் கண்களில் விரிய.

“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல!”

“படத்தில் வரும் சில சாதாரண வட்டார வழக்குச் சொற்களைக்கூட மியூட் செய்திருக்கிறார்களே... என்ன காரணம்?” என்று நான் கேட்க, இயக்குநர் பேசுவதற்கு முன்பே ‘பூ’ ராமு பதில் சொல்லத் தொடங்கினார். “கெட்ட வார்த்தைகள் எல்லா ஊர் வழக்குகளிலும் இருக்கத்தான் செய்யும். ஆனால், சென்சார் போர்டில் யார் இருக்கிறார்கள்? அந்த ஊரைப் பற்றித் தெரியாத, சினிமா என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தணிக்கைக் குழுவில் இருந்தால் இப்படித்தான் ஆகும். வட்டார வழக்குதான் இதுபோன்ற படங்களுக்கு அடித்தளமே! அதைச் சிதைப்பதுதான் இவர்கள் வேலை” என்று கொதிக்கிறார்.

“படத்தைப் பற்றி பாசிட்டிவா விமர்சனங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. அடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கும். எப்படித் தேர்ந்தெடுக்கப்போறீங்க?” என்றேன்.

“உண்மைதான். சில வாய்ப்புகள் வந்திருக்கு. ஆனா ஒரு விஷயத்தில தெளிவா இருக்கேன். பன்ச் டயலாக் பேசுறது, பறந்து பறந்து அடிக்கிறது...இதெல்லாம் நமக்கு வேணவே வேணாம். என் படத்துல கதைதான் ஹீரோவா இருக்கணும்” என்று இளங்கோ சொல்ல, “சூப்பரா சொன்னீங்க” என்று கைகுலுக்குகிறார் அஞ்சலி. “நானும் அப்படித்தான். பொதுவா ஹீரோயின்னா கிளாமர் டாலா வந்துட்டுப்போவாங்க. எனக்கு முதல் படத்திலேயே நடிப்பை வெளிப்படுத்துற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ‘செமையா நடிச்சிருக்கம்மா’ன்னு நிறையபேர் பாராட்டினாங்க. இதைத் தக்கவெச்சுக்கணும்ல? அதனால ரொம்பப் பொறுமையா கதை கேட்டுக்கிட்டிருக்கேன்” என்கிறார் அஞ்சலி.

“இந்தப் படம் வெற்றிபெறும்னு நான் எதிர்பார்த்தேன். ஆனா நான் எதிர்பார்த்ததைத் தாண்டி நல்ல விமர்சனங்கள் வருது. கண்டிப்பா என் அடுத்த படம் இதைவிட நேர்த்தியா இருக்கும்” என்கிறார் செல்வகண்ணன் நம்பிக்கையுடன்.

நம்பிக்கை வெல்லட்டும்!

- சந்தோஷ் மாதேவன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,  ப.பிரியங்கா