Published:Updated:

``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வருபவர் சித்ரா. சித்து என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். காதலில் கமிட் ஆகியிருக்கிறார் என்கிற செய்தி உலாவி வருகிறது. 

``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!
``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!
``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வருகிறார் சித்ரா. அந்த சீரியலில் சித்ராவின் கதாபாத்திரம் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் பெற்றதாகும். ஆரம்பத்தில் சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியவர் தற்போது படத்தில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். தற்போது அவர் காதலிக்கிறார் என்று கேள்விப்படவும் அவரிடம் பேசினோம், 

`அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லைங்க. என்கூட நடிக்கும் கதிருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. அவரும் நானும் ஸ்கிரீன்லதான் கணவன், மனைவியா நடிக்கிறோம். நடிச்சி முடிச்சப் பிறகு நானும், அவரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி. சண்டைப் போட்டுட்டே இருப்போம். எனக்கும், அவருக்கும் 'செட்'டே ஆகாது என்பது இங்கிருக்கிற எல்லாருக்குமே தெரியும். வதந்திகளை நம்ப வேண்டாம் மக்களே. எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். இன்னும் சொல்லப் போனா மெரினா பீச் பக்கம் பகலில் போனா ஜோடியா உட்கார்ந்திருப்பவர்களை சீண்டி துரத்திவிட்டுடுவோம்.

``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!

லவ்னா அவ்வளவு அலர்ஜியா இருக்கும். எப்படிடா மொட்டை வெயிலில் இப்படி உட்கார்ந்து கூலா பேசுறீங்கனு மலைப்பா இருக்கும். சரி, அதுவும் ஒரு வகை ஃபீலிங் போலனு நினைச்சுக்குவேன். அப்படி இப்போதைக்கு காதல் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் பக்கா சிங்கிளாக இருக்கிறேன்.'' அப்போது வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்கிறாங்களா? எனக் கேட்டால்,

``என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா!

``எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலைங்க. நிறைய நடிக்கணும். நடிச்சிட்டே இருக்கணும். அதுக்காகக் கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்க மாட்டேன். எனக்காக ஒருத்தன் கண்டிப்பாகப் பிறந்திருப்பான். அவனை நானோ, என்னை அவனோ ஒரு நாள் தேடி வந்து பார்த்துத்தானே ஆகணும். அன்றைக்கு நானே உங்கக்கிட்டச் சொல்றேன். நிறைய பேர் கமிட் ஆகி ஆறு மாதங்கள், வருஷ கணக்குனு காதலிக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த அளவுக்குப் பொறுமை இல்லை. பிடிச்சிருந்தா உடனே வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிப்பேன். கண்டிப்பாக காத்திருக்கமாட்டேன். கல்யாணம் எப்படி நடக்கவேண்டுமென்று ஒரு ட்ரீம் இருக்கு. அதன்படி நடக்கவேண்டுமென்று ஆசை இருக்கு. அதுக்கு என் அப்பா, அம்மாவும் மனசு வைக்கணும். மற்றபடி எல்லா காதலர்களுக்கும் என் வாழ்த்துகள்'' எனச் சிரிக்கிறார் சித்ரா.