Published:Updated:

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

Published:Updated:
“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

‘கடல்’ படத்துல நடிக்கிறப்போ, மணிரத்னம் சார் ‘அப்பா பாடி லாங்குவேஜ் வருது பார்... மாத்திக்கோ!’ன்னு சொல்வார். நான் அவரோட பையன். அவருடைய உடல்மொழி எனக்கும் இருக்கத்தான் செய்யும். எனக்கு என்ன ஆச்சர்யம்னா, நான் ஊட்டியில படிச்சு வளர்ந்தேன், அவர் சென்னையில்தான் இருந்தார். அவர்கூட அதிகமா பழகினதும் இல்லை. அப்படி இருந்தும், அப்பாவோட தாக்கம் நடிப்புல எப்படி வந்துச்சுன்னு தெரியலை”  ஒரு புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் கெளதம் கார்த்திக்.

“எனக்கு மியூசிக், மார்க்கெட்டிங்லதான் ஆர்வம் அதிகமா இருந்தது. பெங்களூருல சைக்காலஜி, மீடியா, இங்கிலீஷ் மூணுக்கும் சேர்த்து ஒரு ‘ட்ரிபிள் டிகிரி கோர்ஸ்’ படிச்சுக்கிட்டிருந்தேன். ஸ்கூல் படிக்கும்போது, ‘நீயும் அப்பா மாதிரி சினிமா வுல நடிக்கலாமே’ன்னு சிலர் சொல்வாங்க. அந்த வயசுல ஒரு திமிர் இருக்கும்ல... ‘நான் ஏன் அப்பா மாதிரி சினிமாவுல நடிக்கணும்’னு நகர்ந்திடுவேன். காலேஜ் படிக்கும்போது ஒருநாள் அப்பா போன் பண்ணினார். ‘மணி சார் கூப்பிடுறார், போய்ப் பாரு’ன்னு சொன்னார். ‘சினிமா நம்மளை இழுக்குதே’ன்னு யோசிச்சேன். பொதுவா, அப்பா எதையும் என்கிட்ட கேட்கமாட்டார். இந்த விஷயத்தைச் சொன்னதும், மணி சாரைப் பார்த்தேன். ‘தமிழ் பேசுவியா’ன்னு கேட்டார், அரைகுறைத் தமிழ்ல பேசிக் காட்டினேன். ரெண்டு வாரம் கழிச்சு, ஒரு கதையைச் சொன்னார். அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கப் போறாரோன்னு நினைச்சேன். ஏன்னா, ‘நடிக்கணும்னா, உதவி இயக்குநரா இருந்து நடிப்பைப் பார்த்துக் கத்துக்கணும்’னு அம்மா சொன்னது, மைண்டுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. வாரம் ஒருமுறை கூப்பிடுவார், அனுப்பிவிடுவார். ஒருநாள், ஒரு காட்சியைச் சொல்லி, ‘நடிச்சுக் காட்டு’ன்னு சொன்னார், நடிச்சேன். அப்படியே படத்துல நடிக்க வெச்சுட்டார்.” 

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“ ‘தேவராட்டம்’ படம் பற்றி?”

“இது ஒரு ஹெவி ஆக்‌ஷன் படம். எனக்கு முத்தையா சார் படத்துல நடிக்கணும்னு ஆசை. எனக்கு ஏற்ற ஒரு கதையைச் சொன்னார். ‘முத்துராமலிங்கம்’ பண்ணுன டேமேஜை ‘தேவராட்டம்’  சரி பண்ணும்னு நினைக்கிறேன். படத்துல, ‘வெற்றி’ங்கிற அட்வகேட் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். எனக்கு ஜோடியா மஞ்சிமா மோகன் நடிச்சிருக்காங்க. ‘தப்புன்னு தெரிஞ்சா டப்புனு அடிப்பேன்!’னு சொல்லிக்கிட்டுத் திரியிற கேரக்டர். அவனுக்கு ஒரு சின்ன பேமிலி பாண்டிங். அதைச் சுற்றி நடக்கிற எளிமையான கதை.”

“ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்திய கதைகளைத் தேர்ந்தெடுக்குறீங்களே, இது ஆரோக்கியமானதுதானா?”

“அப்படியெல்லாம் நான் நினைக்கிற தில்லை. நான் நடிகன். கதையில வர்ற கதாபாத்திரம் என்ன சாதி, என்ன மதம், என்ன இனமா இருந்தாலும், கதை பிடிச்சிருந்தா நடிப்பேன். பிரச்னை பண்றதுக்குக் காரணம், அதைத் தேடுறவங்க தான், ‘அவர் அதனாலதான் இந்தப் படத்துல நடிச்சார், இவர் இதனாலதான் இந்தப் படத்துல நடிச்சார்’னு சொல்றாங்க. மக்களுக்குப் பிடிச்சா பார்ப்பாங்க, இல்லைனா தியேட்டர் பக்கம் வரமாட்டாங்க. அது எனக்குத் தெரியும். இயக்குநர் முத்தையாவும் இந்தப் பிரச்னைகளை யெல்லாம் சந்திச்சிருக்கார், நானும் சந்திச்சிருக்கேன். எல்லாத்துக்கும் பிறந்த இடம்தான் காரணம். மத்தபடி, ஒரு நடிகனா நான் சாதி, மதத்துக்கு முதலிடம் கொடுக்கிற ஆள் இல்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“ ‘முத்துராமலிங்கம்’ படத்துக்குப் பல ட்ரோல்ஸ்... அதையெல்லாம் எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

“சில தவறான முடிவுகள்னு சொன்னேன்ல... அதுல டாப்ல இருக்கிறது, இந்தப் படம்தான். ஒரு யூ டியூப் விமர்சகர் கலாய்ச்சது செம்மயா இருந்தது. அதைப் பார்க்கும்போது, நானே விழுந்து விழுந்து சிரிச்சேன். அந்தப் படத்தை முடிக்கிறப்பவே, ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சது. அதுவும் ஒரு அனுபவம்தான். அதுக்கப்புறம்தான், கதை மட்டுமல்ல... ஒரு படத்துக்கு இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன்.”

“ ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ மாதிரியான அடல்ட் காமெடி படங்கள்ல கமிட் ஆனதுக்கு என்ன காரணம்?”

“இந்த ரெண்டு படமும் வந்த சமயம், அப்படி ஒரு டிரெண்ட் இல்லை. ரிஸ்க்னு தெரிஞ்சுதான், நடிச்சேன். இந்தமாதிரி படங்களை தைரியமான முயற்சியாதான் நான் பார்க்குறேன். ஏன்னா, எனக்குத் தெரிஞ்சு என் வயசுப் பசங்க என்ன பண்ணுவாங்களோ, அதுதான் படத்துல இருந்துச்சே தவிர, கேவலமா எதுவும் இல்லை.”     

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

“ ‘இ.அ.மு.கு’ மாதிரியான படங்கள் எல்லாம் தேவையா என்ன?”

“எனக்குத் தெரிஞ்சு என் படங்கள் ஆடியன்ஸுக்குப் பொழுதுபோக்கா இருக்கு மான்னு மட்டும்தான் பார்ப்பேன். அதுல என்ன அரசியல் இருக்கு, சமுதாயத் தேவை என்ன இருக்குன்னெல்லாம் பார்க்கிறதில்லை. தவிர, இங்கே எல்லாப் படமும் தணிக்கை செய்யப் பட்டுதானே வருது. என் குடும்பமும் சுற்றமும் முகம் சுளிக்கிற அளவுக்கு நான் எந்த முடிவும் எடுக்கலை!”

“அப்பாவின் அரசியல் ஆர்வத்தை உங்ககிட்ட எல்லாம் ஷேர் பண்ணிக்குவாரா?”

“ ‘நான் அரசியல்ல இருக்கிறது உனக்குப் பிடிச்சிருக்கா?’ன்னு கேட்டிருக்கார். ‘எனக்கு அரசியல் புரியாது, அதைப் பத்தித் தெரியாது, தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை. நீங்க என் அப்பா. நீங்க என்ன பண்ணாலும், என் சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்’னு சொல்லி யிருக்கேன். தவிர, நானும் அவரும் ப்ரெண்ட்ஸ் மாதிரி. வேலையைப் பத்தி வீட்டுல பேசிக்கமாட்டோம்.”

- அலாவுதின் ஹூசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism