twitter.com/manipmp
எப்போதும் ஆப்போசிட் பஸ்களில்தான், அழகான பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.

twitter.com/HAJAMYDEENNKS
முன்னாடிலாம் அதிமுகவுல செந்தில், குண்டு கல்யாணம் போன்ற காமெடி யன்கள் பிரசாரம் பண்ணுவாங்க.இப்ப திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்களே அதைப் பார்த்துக்கிறாங்க!

twitter.com/TalksssTweet
நானும் 2000-ல இருந்து வெயிட் பண்றேன், இந்த த்ரிஷாவுக்குக் கல்யாணம் ஆகுறதும்... ரஜினி கட்சி ஆரம்பிக்கிறதும்... ஸ்டாலின் முதல்வர் ஆகுறதும்... அந்தா இந்தானுறானுக ஆனா நடக்க மாட்டேங்குது.

twitter.com/nithya_shre
விசிக - கேட்ட சின்னம் மறுப்பு
மதிமுக - கேட்ட சின்னம் மறுப்பு
நாதக - கேட்ட சின்னம் மறுப்பு
அமமுக - கேட்ட சின்னம் மறுப்பு
தமாகா - கேட்ட சைக்கிள் சின்னம்
பாமக - கேட்ட மாம்பழச் சின்னம்
தேர்தல் ஆணையம்?

twitter.com/amuduarattai
மொபைலைப் பார்த்துக்கொண்டே, நீங்கள் பேருந்து ஏறுவது தப்பில்லை. ஆனால் மொபைலைப் பார்த்துக் கொண்டே, யார் மடிமீதாவது உட்காருவது தான் தப்பு.

twitter.com/Annaiinpillai
பக்கத்து வீட்டில் புதிய பொருள் வாங்கினால் அது நம் வீட்டின் தலைப்புச் செய்தி ஆகிவிடுகிறது!

twitter.com/smhrkalifa
தீபா ஆதரவு விடயத்தில் ‘அலட்சியம் காட்டிய ராகுல், அசத்திக்காட்டிய மோடி’ன்னு ஒரு குருப் இப்போ வாட்சப்பில் கட்டுரை எழுதப்போறதை நினைத்தால்தான்...

twitter.com/Kozhiyaar
மனைவி கூறியதை மறந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்பொழுது ஏற்படும் பயம் மரண பயத்திற்கு இணையானது!

twitter.com/kumarfaculty
தீபாவின் ஒரு ஓட்டும் அவர் தூங்காமல் இருந்தால்தான் கிடைக்கும்...!

twitter.com/saravananucfc
மோகன் படங்கள் பெரும்பாலும் அது ‘பாட்டுக்கு ஓடுச்சு.’

twitter.com/Kozhiyaar
இனி விஜயகாந்தின் குரலை மிமிக்ரியில் மட்டும்தான் கேட்க முடியும் போல!

facebook.com/Aadhavan Dheetchanya
எல்லாத்துக்கும் வலியுறுத்தினால் வலியுறுத்த வேண்டியதுக்கு வலியுறுத்தும்போது வலியுறுத்தும் கணக்கில் வராதென வலியுறுத்தி...

facebook.com/RedManoRed
பந்தியில் செய்யக் கூடாதவை -
* இலையில் தண்ணீர் தெளிப்பதற்கு முன்பே கூட்டு, பொரியல் வைத்திருப்பது கண்டு ஆரம்பத்திலேயே அதிரக் கூடாது.
* ‘இலையில் ஸ்வீட் எங்கே?’ எனத் தேடக் கூடாது.
* எல்லாம் வைத்த பிறகு இறுதியாக வரும் ஸ்வீட் கண்டு எரிச்சலடையக் கூடாது.
* வேண்டாம் என்று சொன்னாலும் இலையை நிரப்பிச் செல்வதை எதிர்க்கக் கூடாது.
* தெறித்துப் பக்கத்து இலையில் விழுவதுபோல் அப்பளம் நொறுக்கக் கூடாது.
* தூரத்தில் சோறு பரிமாறுபவரை அழைத்து ரசம் கேட்டால் அவர் மோர் ஊற்றுகிறவரைக் கை காட்டுவார். மோர் ஊற்றுகிறவர் ரசத்தை அழைப்பதோடு மட்டும் நின்றுவிட்டு பாயசத்துடன் வந்து நின்றால் கோபிக்கக் கூடாது.
* அடுத்து உட்காருபவர் பின்னால் நின்றபடி உரசிக்கொண்டே இருக்கும்போது முருங்கைக்காய் சுவைக்கக் கூடாது.
* 500ml வாட்டர் கேனில் பாதி மிச்சமாகி வீணாகிறதே என வருந்தக் கூடாது.
* எல்லாக் கோபத்தையும் குழாயைத் திருகுவதில் காட்டி அருகில் இருப்பவர் நனையுமளவுக்குக் கை கழுவக் கூடாது.

facebook.com/neander.selvan
Bore ஏன் அடிக்கிறது?
நம் மரபணுக்களுக்குப் பரிச்சயமான தொல்மனித வாழ்க்கையை வாழமுடியாத நாகரிகச் சூழலின் விளைவே வியாதிகளும், மன அழுத்தமும், தற்கொலைகளும்.

மரபணுக்களுக்குப் பரிச்சயமான வாழ்க்கைமுறை
புலாலுணவு
நாள் ஒன்றுக்கு 8 கி.மீ நடை
குளிர்நீர்க் குளியல்
குடும்பம், நண்பர்கள், உறவுகள்
சூரிய வெளிச்சம் உடல்மேல் படுதல்
வெறும் காலில் நடத்தல்
காடுகளில் இயற்கையுடன் நாள் முழுக்க வசித்தல்
உண்ணாவிரதம்

பளு தூக்கல் (பெரிய வேட்டை மிருகங்களை வெட்டி எடுத்து வருவது, விறகு வெட்டுவது, பாறைகளை நகர்த்துவது)
இவ்வாழ்க்கைமுறையில் போர் அடிக்கிறது என்பதே இல்லை.
நம் மூளை மிகப்பெரும் எனர்ஜி உறிஞ்சும் ஓர் உறுப்பு. நம் மொத்தக் கலோரிகளில் 20% கலோரிகளை மூளையே எடுத்துக்கொள்கிறது. நாள் முழுக்க எப்படி வேட்டையாடுவது, எப்படிப் பொறிகளை அமைப்பது, புதிய ஆயுதங்களை எப்படிச் செய்வது என மிகப்பெரும் ராஜதந்திர ரீதியிலான திட்டங்களைத் தொல்மனிதன் தீட்டினான். குழுவாகச் செயல்பட்டான். இதனால் உடல்வலுவும், மூளைவலுவும் மேம்பட்டது.

தற்கால வாழ்க்கைமுறையில் நாள் முழுக்க மூளைக்கு எந்த வேலையும் கொடுக்காமல், உடலுக்கும் எந்த வேலையும் கொடுக்காமல் சேரில் உட்கார்ந்து வழக்கமான வேலைகளைக் கணினியில் செய்வதால் அவை கடுமையாக ரியாக்ட் செய்கின்றன. அதன் பெயர்தான் “போர் அடிக்கிறது.” அவை ஏங்குவது சவாலுக்கு.
சவாலான வேலைகளைச் செய்ய முடியாத சூழலில் மது, புகை, குப்பை உணவு என போதையில் மூழ்கி அத்துயரை மூளை தணித்துக்கொள்கிறது. நகர்ப்புற இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு அத்துயரைத் தணித்துக்கொள்கிறார்கள்.

தற்கால வாழ்க்கைமுறையில் ஆதிமனித வாழ்க்கைக்கு நிகரான சவாலை அளிக்கும் விசயம் விளையாட்டுதான்.

விளையாட்டுப் போட்டிகளில், உடற்பயிற்சியில் ஈடுபடுவது வேட்டைக்கு ஒப்பாக மூளைக்கும், உடலுக்கும் சவாலை அளிக்கும் விசயம்.
தினமும் 10,000 அடிகள் நடந்து
தொல்லுணவை உண்டு
உடற்பயிற்சியில் ஈடுபட்டு
குடும்பம், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அதன்பின் உங்கள் மூளைக்கு லாகிரி வஸ்துகள் அவசியமில்லை.

- சைபர் ஸ்பைடர்