Published:Updated:

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"
"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரம். வாழ்க்கை முழுவதும் நேசிக்கிறோம்; நேசிக்கப்படுகிறோம். அதற்கென ஒரு தினம் வைத்து, `காதலர் தினம்' எனக் கொண்டாடியும் வருகிறோம். காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான காதல் திரைப்படங்களைத் தேடியபோது, நம் கண்ணுக்குச் சிக்கிய படங்களின் பட்டியல் இதோ... 

பூவே உனக்காக :

காதல் தோல்வியால் இளைஞர்கள் மரணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், காதல் தோல்வியிலும்கூட  மகிழ்ச்சியைக் காணலாம் என்பதை உணர்த்தியது, `பூவே உனக்காக'. இன்றளவிலும் பிரபலமாகப் பேசப்படும் இந்தப் படத்தின் காதல் வசனங்கள், அந்தக் காலகட்டத்தில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

பிரிந்த குடும்பத்தை இணைக்க விஜய் மேற்கொள்ளும் குறும்புகளும், படம் முழுக்க இருந்த சின்னச் சின்னத் திருப்பங்களும் படத்தை ரசிகனோடு நன்கு ஒன்றிப்போனது. மேலும், சில படங்களின் முடிவு மனதைவிட்டு அகலாமல் எப்போதும் பசுமையாக இருக்கும். `இது காதல் கைகூடலேங்கிற விரக்தியால எடுத்த முடிவல்ல. தன் காதலையே கடைசி வரை நினைச்சுக்கிட்டு இருக்கணும். அதற்காக எடுத்த முடிவு. இந்த முடிவுகூட சுகமான ஒரு முடிவுதான்.' எனப் பிண்ணனிக் குரல் ஒலிக்க, விஜய் நடந்துசெல்லும் அந்தக் க்ளைமாக்ஸ், இன்றளவும் படம் பார்க்கும் அனைவரையும் விஜய்யின் காதலை ஆழ்மனதில் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளவும், ரசிக்கவும் வைக்கிறது. 

மின்னலே :

`மின்னலே' சாயலில் ஏற்கெனவே சில படங்கள் வந்திருந்தாலும், மாதவன் - ரீமாசென் நடிப்பும், விறுவிறுப்பான திரைக்கதையும் அன்றைய இளசுகளைக் கட்டிப்போட்டது. அறிமுக இயக்குநரின் படம்போல இல்லாமல், கச்சிதமான காதல் காட்சிகளுடன் கொஞ்சமே கொஞ்சம் ஆக்ஷன் கலந்த படமாக, சிறப்பாக `மின்னலே'வை இயக்கியிருந்தார், கௌதம் மேனன். 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கும், நடிகை ரீமாசென்னுக்கும் `மின்னலே'தான் முதல் படம். படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல் வரிகளிலும் காதலை இழையவிட்டிருந்தனர், வாலியும் தாமரையும். குறிப்பாக, தாமரை எழுதிய `வசீகரா' பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. ``அலைபாயுதே' நிகழ்த்திய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தியதோடு, கூடுதலாக மாதவனுக்கு `மேடி' என்ற செல்லப்பெயரையும் பெற்றுத் தந்ததும் இப்படம்.  

ஆட்டோகிராஃப் :

சாதாரண ஒருவனது வாழ்க்கையில் கடந்துபோன பெண்களையும், அவர்கள் மீது அவன் கொண்டிருந்த காதலையும், அந்தக் காதல்களினால் கிடைத்த வலிகளையும்  ரீவைண்டு செய்த `ஆட்டோகிராஃப்' செல்லுலாய்டில் சேரன் போட்ட கையெழுத்து. ஈர்ப்பு, காதல், தோழமை, திருமணம்... என நான்கு மாறுபட்ட நிலங்களில் உணர்வு விதைகளைத் தூவி, கருத்துப் பாசனம் செய்து, அட்டகாசமாய் அறுவடை நடத்தினார், இயக்குநர் சேரன். 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

சேரன், தனது திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு பள்ளிக் காதலி, கல்லூரிக் காதலி, தோழி மற்றும் நண்பர்களைச் சந்திக்கும் அந்தப் பயணமும் நினைவு நாடாக்களிலிருந்து மீட்கப்பட்ட அனுபவங்களும் `ஆட்டோகிராஃப்' படத்தை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் பேசவைத்துக்கொண்டிருக்கும். 

சிவா மனசுல சக்தி :

ஆதிகாலத்திலிருந்து தமிழ்சினிமாவில் பார்த்துச் சலித்த காதலர்களின் ஈகோவும், சண்டைகளும்தான் படத்தின் கதைக்களம். ஆனால், அதில், யார் மனசுல யாரு? எனக் காதல் தத்துவம் பேசாமல், லோக்கல் பையனுக்கும், ஹைடெக் பொண்ணுக்குமான காதலை இடைவிடாத நகைச்சுவையால் சுவாரஸ்யமாகச் சொல்லியது, 'சிவா மனசுல சக்தி'. 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

ஈகோ பாஸ்பரஸ் பற்றிக்கொள்கிறது. இந்தக் காதல் கண்ணாமூச்சி ரேரேவின் முடிவுதான், க்ளைமாக்ஸ். இந்தப் படத்திற்கு முன்பு வந்த பல `காதல் ஈகோ' படங்களின் சாயலைத் தொட்டுவிடாமல், சாமர்த்தியமாகப் படத்தை நகர்த்தியிருப்பார், இயக்குநர் ராஜேஷ். 

விண்ணைத்தாண்டி வருவாயா :

23 வயது வரை 5 சினிமா மட்டுமே பார்த்திருக்கும் த்ரிஷாவை, சினிமா இயக்குநர் கனவில் இருக்கும் 22 வயது சிம்பு காதலிக்கிறார். மனம், மதம், இனம் எனக் காதலுக்குப் பல தடைகளை அடுக்கும் த்ரிஷா, இறுதியாக சிம்புவைக் கரம்பிடித்தாரா? என்பதை வித்தியாசமான க்ளைமாக்ஸுடன் சொல்லியது, 'விண்ணைத்தாண்டி வருவாயா'. சிம்பிளான காதல் சினிமா, சிம்பு - த்ரிஷாவின் பிரமாதமான நடிப்பால் கிளாஸிக் சினிமாவானது. 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

`என் கண்ணு வழியா உன்னை யாரும் பார்க்கலைபோல!', 'இனியெல்லாம் முடிஞ்சுபோச்சுனு நினைச்சேன். `நினைக்காதே.. முடிஞ்சுதான் போச்சு'னு சொன்னா!' என அழகழகான ஹைக்கூ வசனங்களே படம் முழுக்கக் காதலை நிரப்பியது. முதல் காதலை தியானித்து வழங்கப்பட்ட பாடல்கள், ஏ.ஆர். ரஹ்மானுடையவை. `காதல் டிலைட்' கௌதம் மேனனுக்குக் காலமெல்லாம் பெயர் சொல்லும் அக்மார்க் `காதலர் ஸ்பெஷல்' திரைப்படம் இந்த `விண்ணைத்தாண்டி வருவாயா'. 

காதலில் சொதப்புவது எப்படி:

கல்லூரி நண்பர்கள் சித்தார்த் - அமலாபால் இடையிலான ஈகோ யுத்தத்தால், இருவரும் பிரிகிறார்கள். காதலில் சொதப்பிய அவர்கள் இறுதியிலாவது காதலைத் தக்கவைத்துக் கொண்டார்களா இல்லையா? என்பதை சொதப்பல் இல்லாமல், இளமைக் கொண்டாட்டமாகச் சொன்னது, `காதலில் சொதப்புவது எப்படி?' திரைப்படம். 

"ஆட்டோகிராஃப், விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி... 'லவ்வர்ஸ் டே' ரிலீஸ் படங்கள் ரீவைன்ட்!"

சில நிமிடக் குறும்படத்தை முழுநீள சினிமாவாக மாற்றும் பரிசோதனையில், காட்சிக்குக் காட்சி சிரிக்கும்படி திரைக்கதை அமைத்து, அறிமுகப் படத்திலேயே சிறப்பான சம்பவம் செய்தார், இயக்குநர் பாலாஜி மோகன். இளைஞர்கள் மட்டுமல்ல; எல்லா வயதினரும் காதலில் சொதப்புகிறார்கள் என்பதைச் சொன்ன விதத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது இந்தக் `காதலில் சொதப்புவது எப்படி?' திரைப்படம். 

மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாது, `சித்திரம் பேசுதடி', `கன்னத்தில் முத்தமிட்டால்', `பிரியாத வரம் வேண்டும்', `காலமெல்லாம் காதல் வாழ்க', `காதல் கண் கட்டுதே', `அனேகன்' எனப் பல திரைப்படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருக்கிறது. காதலர் தினத்தில் வெளியான காதல் படங்கள் உங்களுக்கும் நினைவுக்கு வந்தால், அந்தப் படத்தைப் பற்றி கமென்ட் பாக்ஸில் பதிவு செய்து, காதலை நினைவு கூரலாம்!