Published:Updated:

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா
‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா

நடிகர் ஆர்யா - சாயிஷாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக பத்து நாள்களாகப் பரவிய தகவலை தற்போது ஆர்யாவே உறுதி செய்துள்ளார்.  

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா


நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவைக் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து நடிகர் ஆர்யா, மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்தனர். இந்தச் செய்தி வெளியானவுடனே சாயிஷா - ஆர்யா இருவருக்கும் வயசு வித்தியாசத்தைப் பற்றி மீம் வந்தது.

ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தி. சாயிஷா வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

இன்று காதலர் தினத்தையொட்டி தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை சாயிஷா. இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``எங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் மார்ச்சில் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளோம். இதை அறிவிக்க மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எங்கள் புது வாழ்வைத் தொடங்க உங்களின் ஆசீர்வாதங்களும் தேவை.‘ எனப் பதிவிட்டுள்ளார். இத்துடன் நடிகர் ஆர்யாவுடன் சாயிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதே ட்வீட்டை நடிகர் ஆர்யாவும் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா

இவர்களுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ரானா டகுபதி, ‘ வாழ்த்துக்கள் மச்சான். கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள்’ என்றும் ‘சாயிஷாவுக்கு வாழ்த்துக்கள்’ என்றும் பகிர்ந்துள்ளார். 

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா

இவரைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ‘ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அழகான திருமண வாழ்க்கைக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். 

‘கடைசி பேச்சுலர் காதலர் தின வாழ்த்துகள் மச்சான்’ - திருமணத்தை உறுதிச் செய்த ஆர்யா- சாயிஷா