Published:Updated:
'ஜாங்கிரி' மதுமிதா திருமணம் - அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வாழ்த்து

'ஜாங்கிரி' மதுமிதா திருமணம் - அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வாழ்த்து
`ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தின்மூலம் நம்மை ஈர்த்த நடிகை மதுமிதா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மதுமிதா, அவருடைய தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார். இதனிடையே, இவர்களுடைய திருமணம் இன்று பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் பலர் இவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டனர். மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன், அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.