Published:Updated:

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

படங்கள்: கிரண்ஷா

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

படங்கள்: கிரண்ஷா

Published:Updated:
“பயோபிக்கா, வேணவே வேணாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

ச்சம் என்பது மடமையடா’ மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தற்போது, ‘தேவராட்டம்’, ஜீவா - அருள்நிதி நடிக்கும் படம்,  மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ என... தன் சினிமாப் பயணத்தை டாப் கியரில் செலுத்திக்கொண்டிருக்கிறார். 

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

“டக்குனு ஸ்லிம்மாகிட்டீங்களே?”

“சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனா, நான் ரொம்ப வெயிட் ஆகிட்டேன்னு பலரும் சொன்னாங்க. அதனால எடையைக் குறைக்க முடிவு பண்ணினேன். உணவுக் கட்டுப்பாடு எனக்குக் கஷ்டமாதான் இருக்கு... அதனால, பிடிச்சதை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்குவேன்.” 

“தமிழில் இதுவரை நடிச்ச படங்கள் எதுவும் சரியாப் போகலை. தொடர் தோல்விகள் வருத்தத்தைக் கொடுக்குதா?” 

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

“கண்டிப்பா! ‘சத்ரியன்’ ரிலீஸ் ஆனப்பவே அதை உணர்ந்தேன். என் முதல் தோல்வி அது. வீட்டுக்குப் போய் ஒரே அழுகைதான். தொடர்ந்து படம் தோத்துடுச்சுன்னா, ‘ராசியில்லாத நடிகை’னு முத்திரை குத்திடுவாங்க. அதுக்குத்தான் ரொம்ப பயந்தேன். பிறகு, ‘பெரிய ஹீரோக்களே ஃப்ளாப் கொடுக்கிறாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு நடிச்சேன். ஆரம்பத்துல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறதுல குழப்பம் இருந்தது. இப்போ மாறியிருக்கு. வெற்றி, தோல்விகள் சினிமாவிலும் சகஜம்தான்னு உணர்ந்திருக்கேன்.”

“ரொம்ப நாளுக்குப் பிறகு மலையாளப் படத்துல நடிச்சிருக்கீங்கபோல?!”

“ ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்துக்குப் பிறகு, கௌதம் சார் படத்துல நடிக்க வந்துட்டேன். பிறகு, இங்கே வரிசையா வாய்ப்புகள். தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியா இருக்கிறதுனால, மலையாளப் படத்துல நடிக்க மாட்டேன்னு நினைச்சுட்டாங்கபோல! ‘ஜம் ஜம்’ வாய்ப்புக்குப் பிறகு, ‘மிக்காயில்’னு ஒரு மலையாளப் படத்துல நடிக்கிறேன்.” 

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

“ ‘என்.டி.ஆர்’ படத்துல அவர் மகளா நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?”

“பாலகிருஷ்ணா, வித்யா பாலன் இப்படி அந்தப் படத்துல இருந்த எல்லாரும் பெரிய ஸ்டார்ஸ். அவங்ககூட ஃப்ரேம் ஷேர் பண்ணிக்கிட்டதே பெரிய விஷயம்தான். வித்யா பாலன் மேடம்கிட்ட, ‘இதை எப்படிப் பண்ணீங்க, அதை எப்படிப் பண்ணீங்க?’னு அவங்க நடிச்ச படத்தைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டிருந்தேன். ஒருகட்டத்துல, ‘இன்னும் எத்தனை கேள்விதான் என்கிட்ட கேட்பே?’னு சிரிச்சாங்க.”

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

“யாருடைய பயோபிக்ல நடிக்க ஆசை?”

“பயோபிக் படத்துல நடிக்கிறது, அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாதுனு, ‘நடிகையர் திலகம்’ பார்த்தப்போதான் தெரிஞ்சது. அந்த `மாயா பஜார்’ சீன்ல நடிக்கும்போது, ரொம்பக் கஷ்டப்பட்டதாகச் சொன்னாங்க, கீர்த்தி சுரேஷ். அவங்க அழுது நடிச்ச ஒரு காட்சியைப் பார்த்து எனக்கும் அழுகை வந்திடுச்சு. ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை எனக்கும் பிடிக்கணும். அப்போதான், அவங்க வாழ்க்கையை என்னால சரியா பிரதிபலிக்க முடியும். கங்கணா ரணாவத் நடித்த ‘குயின்’ படம்தான், மலையாளத்துல நான் நடிச்சிருக்கிற ‘ஜம் ஜம்.’ அதுல, கங்கனா பண்ணுன கேரக்டரை நடிக்கவே கஷ்டமா இருக்கு. அப்படி இருக்கிறப்போ, பயோபிக்ல நடிக்க டைம் ஆகும். மத்தபடி, எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க கேரக்டர்ல நடிக்கச் சொன்னா, நான் ரெடி!”

“தமிழில் எந்த ஹீரோகூட நடிக்க ஆசை?”

“ரஜினி சார்கூட ஒரு சீன் நடிச்சா போதும். விஜய் சாருக்கு ஜோடியா நடிச்சே ஆகணும்!’’

அலாவுதின் ஹூசைன்