Published:Updated:

`விஜய் படத்துக்கு கதை எழுத ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்!’ - விக்ரமன்! #23yearsofPooveUnakkaga

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`விஜய் படத்துக்கு கதை எழுத ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்!’ - விக்ரமன்! #23yearsofPooveUnakkaga
`விஜய் படத்துக்கு கதை எழுத ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்!’ - விக்ரமன்! #23yearsofPooveUnakkaga

``அன்றைக்கு இந்தப் படத்தை வெளியிட அவ்வளவு சிரமப்பட்டோம். ஒரு ஊரில் மட்டும்தான் ரிலீஸ் என்கிற வழக்கம் அப்போது இல்லாமல் இருந்தது.  அதனால், எங்களை நம்பி தியேட்டர் கொடுக்க ஆள் இல்லை. அதனால்தான் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் ரிலீஸ் செய்தோம்.’’

`விஜய் படத்துக்கு கதை எழுத ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்!’ - விக்ரமன்! #23yearsofPooveUnakkaga

`பூவே உனக்காக’ படம் வந்து 23 வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்னும் அந்தப் படத்தின் பாடல்கள் வந்தால் 'ஹம்' செய்யாதவர்கள் இருக்க முடியாது. முக்கியமாக, 'ஆனந்தம் ஆனந்தம் பாடும்' பாடல். அந்தப் படம் வெளியான நாள் இன்று. அந்தப் படத்தின் இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்,

``பிப்ரவரி 15-ம் தேதி ரிலீஸ் செய்தால் மட்டும்தான் தியேட்டர் கிடைக்கும், இல்லைனா கிடைக்காது என்பதற்காக ஒப்புக்கொண்டு மதுரை சினி ப்ரியா காம்ளக்ஸில் ரிலீஸ் பண்ணோம். ஒரு வேளை அந்தத் தியேட்டரில் நல்ல வசூல் இல்லை என்றால் மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்கள் பிரின்ட் எடுக்கமாட்டார்கள். நிறைய பேர் பண்ணாதீங்கனு சொன்னாங்க. நாங்க வெளியிடுவதில் உறுதியாக இருந்தோம். 

மதுரையில் வெளியானதும் படம் முதல் ஷோவே ஃபுல். `கிளைமாக்ஸ் சூப்பர்'னு ரிப்போர்ட் வந்தது. அதற்குப் பிறக்குதான் அடுத்தடுத்த நாள்களில் வெவ்வேறு ஊர்களில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் உள்ள பாடல்கள்தான் இப்போது வரை எவர் கிரீன். 'சொல்லாமலே யார் பார்த்தது' பாடலை கர்நாடகாவில் எடுத்தோம். 'பூவே உனக்காக' படத்தின் இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி 'கர்ணன்' படத்திற்கான ஷூட்டிங் அங்கதான் நடந்ததாம். நான் ஷூட் பண்ணப் பிறகு இப்போது 200 படங்களுக்கும் மேல் எடுத்துட்டாங்க. 'சிக்லட்டு சிக்லட்டு சிட்டுக் குருவி' பாடலை ஊட்டியில் ஷூட் பண்ணோம். 'ஓ பியாரி பானி பூரி' பாடல் சென்னையின் பல இடங்களில் எடுத்தோம். நான்கு நாள்கள் ஓடி ஓடி இந்தப் பாட்டை எடுத்தோம்.

`விஜய் படத்துக்கு கதை எழுத ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்!’ - விக்ரமன்! #23yearsofPooveUnakkaga

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலை இரண்டு பாதியாக எடுத்தோம். பிலிம் சிட்டியில் ஒரு பாதியையும், இப்போது ஃபோரம் மாலாக இருக்கும் இடத்தில் அப்போது, விஜயா கல்யாண மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தில் பாதிப் பாடலை எடுத்தோம். 1995 அக்டோபரில் ஆரம்பித்து அடுத்த வருஷம் பிப்ரவரியில் ரிலீஸ் செய்தோம். அந்தப் படத்தில் ஃபைட்டும் இருந்தது. அப்புறம் அதைத் தூக்கிட்டோம். அப்போதுதான் விஜய் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நேரம். எவ்வளவு பெரிய டயலாக்கைச் சொன்னாலும் அப்படியே கேட்டுட்டு, கடகடனு பேசுவார். அதேபோல அவரைப்போல டப்பிங்கை அவ்வளவு ஸ்பீடாக யாராலும் செய்ய முடியாது. ஃபர்ட்ஸ் பாஸ்ட்டஸ் டப்பிங் பினிஷ் பண்ற ஆளை அதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை'' என்றவர், 

``அந்தப் படம் வந்த பிறகு, இவர் எதிர்காலத்தில் பெரிய சூப்பர் ஸ்டாராக வரப்போறார்னு சொன்னேன். அது பெரிய கேலி கிண்டலுக்கு உள்ளானது. படத்தில் நடித்ததற்காக அப்படி சொல்றார்னு சொன்னாங்க. இப்போது இருக்கிற விஜய்க்கு தகுந்த மாதிரியான ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய படம் எடுக்கும் பாணி என்பது வேறு, இப்போது உள்ள விஜய் படத்துக்கான பாணி வேறு என்பதால், இந்த விஜய்க்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் மட்டுமே எழுதித்தருவேன். இயக்குவது சிரமம்’’ என்றார் விக்ரமன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு