Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ந்தமுறை மிஸ்டர் மியாவ் வலம்வந்தது நீலாங்கரையின் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கே சொந்த வீடு வாங்கியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பின்னணியைச் சேர்ந்தக் குடும்பத்திலிருந்து வந்தாலும், முன்னணி நடிகையாக வர, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் கீர்த்தி. குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துவிட்ட இவர், தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். இவரைப் பற்றிய ‘வாவ்’ தகவல்கள் இதோ...

மிஸ்டர் மியாவ்

• ஃபிட்னெஸில் அதீத கவனமாக இருப்பார், கீர்த்தி. முட்டையின் வெள்ளைக் கரு மட்டும்தான் கீர்த்தி சுரேஷ் சாப்பிடும் ஒரே நான்வெஜ் அயிட்டம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி, விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பு, ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி நடித்த, ‘மானே தேனே பேயே’ படத்தில் கமிட் ஆகியிருந்தார். இந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

• குழந்தை நட்சத்திரமாக தனது 12 வயதிலேயே டெலிவிஷன் தொடர்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார், கீர்த்தி. மலையாளத்தில் இவர் நடித்த இரண்டு சீரியல்கள்தான், சினிமா என்ட்ரிக்கான விசிட்டிங் கார்டு.

• தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் கீர்த்தியின் படம் ஒன்று, பெரும் செலவில் தயாராகிவருகிறது. புதுமுக இயக்குநர் நரேந்திரா இயக்கும் இப்படத்துக்காக, ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில்
ஏழு ஏக்கரில் செட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இது கீர்த்தியின்  20-வது படம்.

• மலையாளத்தில், கீர்த்தி நடிக்கும் ‘மரக்கார் - அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படத்தில், கீர்த்தியின் அக்கா ரேவதி உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார்.

• பாலிவுட் இயக்குநர் நாகேஷ் கக்கனூர் இயக்கவிருக்கும், ‘ஹைதராபாத் ப்ளூஸ்’ படத்தில் நடிக்கவிருக்கிறார், கீர்த்தி சுரேஷ். பெண் உரிமையைப் பேசவிருக்கிறது, இப்படம். 


• விஜய்யுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துவிட்ட கீர்த்தி, விஜய்யின் தீவிர ரசிகை. ‘போக்கிரி’ படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் அவரை ரசிகர்களோடு ரசிகராகச் சென்றுப் பார்த்திருக்கிறார்,
கீர்த்தி.

• ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார், கீர்த்தி. தற்போது, ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்துக்குக் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில், மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ம்யூட்

‘மி
ல்க் ஸ்லிம்’ நடிகை, “சினிமாவில் ‘மீ டு’ என்ற விஷயத்தைப் பலரும் விளம்பரத்துக்காகவே கூறிவருகிறார்கள்” என்று சொல்ல, அந்த நடிகையின்மீது கடுப்பில் இருக்கிறார்கள், சக நடிகைகள்.

ஸ்டைல் நடிகரின் படத்தில் நடிக்க மலையாளத்தில் வளர்ந்துவரும் தமிழ் நடிகையிடம் கேட்டிருக்கிறார்கள். அவரோ ‘நான் ரொம்ப பிஸி’ என்று சொல்லிவிட்டாராம்!