Published:Updated:

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

Published:Updated:
ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

குறைவாகவே படங்கள் பண்ணினாலும் அவை நிறைவாக இருக்க வேண்டும் என அதிகமும் மெனக்கெடுபவர் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ஒரு மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தேன்.

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட சேர்ந்து ஒரு வருடம் ஆகியும் எனக்கு என்ன வேலை செய்றோம்னு தெரியலை. ஒரு இடத்துல `லைட் வை’னு சொல்வார். ஏன்னு எனக்குத் தெரியாது. ‘எனக்கு இந்த வேலை புரியலை. நான் இருந்து, அவர் பெயரைக் கெடுக்க விரும்பலை; கிளம்புறேன்’னு கே.வி.ஆனந்த்கிட்ட சொன்னேன். ‘ஏன் எங்ககிட்ட கேட்டா சொல்ல மாட்டோமோ’னு சொல்லி, ஆனந்த், திருநாவுக்கரசு, பாலமுருகன்... சுத்தி இருந்த எல்லாரும் நிறைய நோட்ஸ் கொடுத்து, கேமரா பற்றி எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தாங்க. இப்பவும் எனக்கு ஏதாவது சந்தேகம்னா, இவங்ககிட்டதான் கேட்பேன். என்னை உருவாக்கினது இவங்கதான்!” - வார்த்தைகளில் அத்தனை எளிமை. 

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“நீங்க கதைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி, நீங்க மிஸ் பண்ணிட்டோமேனு நினைக்கிற படம் எது?”

“கதை எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தலைனா, நான் அந்தப் படத்துல வொர்க் பண்ண மாட்டேன். காசுக்காக மட்டும் வேலை செய்றது எனக்குப் பிடிக்காது. என் படங்கள் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கொண்டு போகணும்னு நினைப்பேன். ‘வருடத்துக்கு ஒரு படம்தான் பண்ணுவியா?’னு நண்பர்கள் திட்டுவாங்க. நானும் அதை மாத்திக்க நினைப்பேன், அப்படி அமையாது. ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு கண்டிப்பா வருடத்துக்கு ரெண்டு படம் பண்ணணும்னு பிளான் பண்ணேன். அதைக் கடைப்பிடிப்பேன். மத்தபடி, நான் மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்பட்ட படம், ‘கற்றது தமிழ்’. ராம் கதை சொன்னப்ப இந்தப் படத்தை பண்ணியே ஆகணும்னு நினைச்சேன். அந்த நேரத்துல ஒரு பாலிவுட் படத்துல வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். பதினைந்து நாள்தான் ‘கற்றது தமிழ்’ படத்துல வொர்க் பண்ண முடிஞ்சது. பிறகு, ஒருகட்டத்துல சமாளிக்க முடியாத காரணத்தால, ராம்கிட்ட ஸாரி சொல்லிட்டு, அதிலிருந்து விலகிட்டேன்.” 

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“ ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’னு தொடர்ந்து அமீரின் அடுத்தடுத்த படங்களில் வேலை பார்த்த அனுபவம்?”

“அமீர்கூட வேலை செய்யறது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ‘ராம்’ படத்துக்கு ஒவ்வொரு சீனையும் ரெண்டு பேரும் கலந்து பேசி எடுத்தோம். ஒவ்வொரு கேரக்டர்லேயும் அமீருடைய தாக்கம் இருந்துக்கிட்டே இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட `ஒன் மோர்’ போவார். இந்த டீட்டெயிலிங் அமீர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது. ‘பருத்திவீரன்’ படத்துக்கு இவருடைய உழைப்பு அபாரமானது. அந்தப் படத்துல நடிச்ச பெரும்பாலானோர், அந்த ஊர்க்காரங்க. அவங்களை வேலை வாங்கிய விதம் இருக்கே... அதுக்கே அவ்வளவு பொறுமை வேணும். என்ன பண்ணப்போறோம்னு எல்லார்கிட்டேயும் தெளிவாகச் சொல்லி, ஒவ்வொரு சீனையும் அவங்களுக்குப் புரியவெச்சுட்டுதான் டேக் போவார்!”

“செல்வராகவனுடன் பணிபுரிந்த அனுபவம்?”

“நான் மும்பையில இருக்கும்போது யுவன் கூப்பிட்டு, ‘செல்வா உங்களைச் சந்திக்கணும்னு சொல்றார்’னு சொன்னார். சென்னை வந்து செல்வராகவனைச் சந்திச்சேன். “ ‘புதுப்பேட்டை’ பண்றப்பவே உங்களைக் கமிட் பண்ண முயற்சி பண்ணினேன்”னு சொன்னார். அப்போ அவர், ‘மாலை நேரத்து மயக்கம்’னு ஒரு படம் பண்றதா இருந்தது. `அதுக்கு கூப்பிட்டார்னா, வேண்டாம்னு சொல்லிடலாம்’னு நினைச்சேன். ஆனா, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைப் பற்றிச் சொன்னார். கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அவருடைய சிந்தனை வேற லெவல்ல இருக்கும். ஒரு கதையை மூணு நாள்ல எழுதிடுவார், திரைக்கதைக்குத்தான் டைம் எடுத்துப்பார். ஏன்னா, அவர் மனசுக்குள்ள 150 ரூபாய் கொடுத்துப் படம் பார்க்கிற ஒரு சாமானியன் இருக்கான். இவர் யோசனையில அவனுக்கு எதாவது சந்தேகம் வந்தா, உடனே அவனுக்காக அதைச் சரிபண்ணுவார். சிம்பிளா சொன்னா, செல்வராகவன் வழி தனி வழி!”

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“ ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வந்த ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு, என்ன நினைச்சீங்க?”

“அன்னைக்கு இருந்த ரசிகர்கள் என்ன மனநிலையில இருந்தாங்கனு தெரியலை. `பிடிக்கலை’னு சொல்லியிருந்தாக்கூட பரவாயில்லை; `புரியலை’னு சொல்லிட்டாங்க. `புலிக்கும் சோழனுக்கும் என்ன சம்பந்தம், கப்பல் எப்படி வந்தது?’னு கேட்டாங்க. நம்ம மக்கள் நம்முடைய வரலாறு தெரியாமலேயே இருக்காங்களேனு வருத்தமா இருந்தது. சினிமாத் துறையில் இருந்தும் பெருசா ரெஸ்பான்ஸ் இல்லை. பத்தாவது நாள் மனோபாலா சார் போன் பண்ணி, ‘எங்கடா இருந்தீங்க இவ்ளோ நாளா?’னு கேட்டார். ‘நீங்க திட்டுறீங்களா பாராட்டுறீங்களான்னே தெரியலை சார்’னு சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருந்தது. நாங்கல்லாம் என்ன பண்ணியிருக்கோம்னு யோசிக்க வெச்சிட்டீங்க’னு கண் கலங்கி, எமோஷனலா பேசினார்.” 

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“இப்போ ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைக் கொண்டாடுறதை எப்படிப் பார்க்குறீங்க?”

“அன்னைக்கு இருந்தவங்களைவிட இன்னைக்கு இருக்கிறவங்களுக்கு, சோழர்களைப் பற்றி நிறைய தெரிஞ்சிருக்கு. படம் முடிஞ்சு கடைசியா ‘சோழனின் பயணம் தொடரும்’னு வரும்போது எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டுறாங்க. பத்து வருடங்களுக்கு முன்னாடி எதெல்லாம் புரியலைனு சொன்னாங்களோ, அதுக்கெல்லாம் இப்போ கைதட்டல் கிடைக்குது. ஒவ்வொரு வசனத்தையும் கொண்டாடுறாங்க. `இந்த ரெஸ்பான்ஸ் அப்போ கிடைச்சிருக்கக் கூடாதா?’னு வருத்தப்பட்டேன்.” 

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“ ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வருமா?”

“செல்வராகவனைச் சந்திச்சு, ‘மக்கள் ஆர்வமா இருக்காங்க, சரியான நேரம் இது. பண்ணுங்க’னு சொன்னேன். ‘மறுபடியும் அடி விழுந்தா என்ன பண்றது’னு சிரிச்சார். ‘எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. இப்போ எல்லாரும் ரசிக்கிறாங்க. நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்’னு சொன்னேன். அவர் மனசுல ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பண்ண ஆசையிருக்கு. ‘நிச்சயமா பண்ணணும் சார். அதுக்குத் தகுந்த பட்ஜெட், கால அவகாசம் தேவைப்படும்’னு செல்வராகவன் சொல்லியிருக்கார். ‘எப்போ எடுத்தாலும் சரி. சொல்லுங்க, கலக்குவோம்’னு சொல்லியிருக்கேன்.” 

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

“வேறென்ன படங்கள்ல வொர்க் பண்றீங்க?”

“எஸ்.பி.ஜனநாதன் சார் இயக்கத்துல விஜய் சேதுபதி நடிக்கிற படம், பார்த்திபன் சார் இயக்கத்துல ‘ஒத்த செருப்பு’  படத்துல வொர்க் பண்றேன்.”

உ.சுதர்சன் காந்தி - படங்கள்: ப.சரவணகுமார்