Published:Updated:

ஐரா - சினிமா விமர்சனம்

ஐரா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ஐரா - சினிமா விமர்சனம்

ஐரா - சினிமா விமர்சனம்

ஐரா - சினிமா விமர்சனம்

ஐரா - சினிமா விமர்சனம்

Published:Updated:
ஐரா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ஐரா - சினிமா விமர்சனம்

ழக்கமான பேய் மிரட்டல், துரத்தல், வழக்கமான பேய் ஃப்ளாஷ்பேக், வழக்கத்துக்கு மாறான ஒரு கேரக்டரில் நயன்தாரா - ‘ஐரா’.

மீடியாவில் வேலை பார்க்கும் நயன்தாராவுக்குத் திடீரென கல்யாண ஏற்பாடுகள் நடக்க, அதிலிருந்து விடுபட தன் பாட்டி வீட்டிற்குச் செல்கிறார். அங்கே பேய் அனுபவங்கள் பூச்சாண்டி காட்டுகின்றன. மறுபுறம் தொடர்ந்து சில மரணங்கள் நிகழ்கின்றன. இவை இரண்டிற்கும் முடிச்சு போடு மிடத்தில் மற்றொரு நயன்தாராவின் கதை. நாம் சின்னதாக எடுக்கும் ஒரு முடிவு நமக்குத் தெரியாத யாரோ ஒருவரை எவ்வளவு பெரிதாகப் பாதிக்கும் என்ற பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை அலுக்க சலிக்கச் சொல்கிறது படம்.

ஐரா - சினிமா விமர்சனம்

தன் வழக்கமான கெத்து லுக்கில் ஈர்க்கும் நயன், அந்த பாவப்பட்ட பவானி கேரக்டரில் அந்தக்கால சௌகார் ஜானகிக்குச் சவால்விட்டு, சோகம் பிழியப் பிழிய நடித்து, நம்மை எரிச்சலூட்டுகிறார்.

 கலையரசன் கேரக்டர் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதுவும் போகப்போக ‘என்னத்த’ என்றாகிவிடுகிறது.  யோகிபாபு என்ன பேசினாலும் ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்கள். ப்ச்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐரா - சினிமா விமர்சனம்

ஃப்ளாஷ்பேக்கில் வரும் மாதேவனும் கேப்ரியல்லாவும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நடிப்பில் அதகளம் செய்யும் குளப்புள்ளி லீலா, கோலிவுட்டின் வழக்கமான பாட்டியாக வந்துபோகிறார். முதல்பாதியில் அசர வைக்கும் சுந்தரமூர்த்தியின் இசை, போகப் போக ஒரே ட்ராக்கில் பயணித்து ஏமாற்றுகிறது.

பேய்ப்படத்திற்கு ஏற்ற பயமுறுத்தும் லைட்டிங், ஃப்ளாஷ்பேக்கின் ப்ளாக் அண்ட் ஒயிட் காட்சிகள் என உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஶ்ரீனிவாசன்.

ஆங்காங்கே தென்படும் ஃப்ரேம்கள், பட்டாம்பூச்சி வழி சொல்லப்படும் கவித்துவக் குறியீடு என மிகச்சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறார் சர்ஜுன். ஓரிடத்தில் பெண்களை மோசமாக சித்தரிக்கும் ஒருவருக்குப் பதிலடி தருகிறேன் என பெண்ணுறுப்பை சொல்லியே திட்டுகிறார் நயன்தாரா. இதற்குப் பெயர்தான் போலிப்பெண்ணியம், போங்குப் பெண்ணியம்!

நயன்தாராவைக் கொல்ல பேய் ஏன் துடிக்கிறது என்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார்களே, அதைத் தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்துப் பாதுகாத்தால் அடுத்துவரும் தலைமுறைப் பேய்களுக்கு உதவும்.

‘ஆமா, ஐரா என்றால் என்ன அர்த்தம், தலைப்புக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு?’ என்று யோசித்தோம். ஆனால் படத்தில் அதுமட்டுமா பிரச்னை?

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism