Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்தவர், சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான ‘பிரேமம்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே, பிரசன்னா, மீரா ஜாஸ்மின் நடித்த ‘கஸ்தூரி மான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார், சாய் பல்லவி.  

மிஸ்டர் மியாவ்

•  ‘பிரேமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால், வரிசையாகப் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால்,  எதிலும் கமிட் ஆகாமல், மருத்துவம் படிக்க ஜார்ஜியா சென்றார் சாய் பல்லவி. படிப்பை முடித்தப்பிறகே மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். வீட்டில், ‘டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை’ என்ற பெயர் பலகையை மாட்டி வைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மலையாளத்தில், துல்கர் சல்மானுடன் ‘கலி’ படத்தில் நடித்த சாய் பல்லவி, அதற்குப்பிறகு மூன்று வருடங்களாக எந்த மலையாளப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்போது, ஃபஹத் ஃபாசில் ஜோடியாக ‘அதிரன்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கிக்கொண்டிருக்கும் இந்தப்படம், சைக்காலஜிகல் த்ரில்லர் படமாக உருவாகிறது.

• ‘நல்ல டான்ஸர்’ எனப் பெயர் எடுத்திருக்கும் சாய் பல்லவி, முறைப்படி நடனம் கற்றவர் இல்லை. மாதுரி தீக்‌ஷித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடன வீடியோக்களை சாய் பல்லவியின் அம்மா ராதா, போட்டுக் காட்ட, அதைப் பார்த்து நடனம் கற்றுக்கொண்டாராம். 

• தெலுங்கில், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம், ‘ஃபிடா’. இப்படத்துக்காக, சாய் பல்லவி டப்பிங் பேசிய வீடியோ ஒன்றை அந்தப் படம் ரிலீஸான சமயத்தில், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா. இந்த வீடியோவை இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். 

மிஸ்டர் மியாவ்

• தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சாய் பல்லவிக்கு கிளாமர் ரோல் பிடிக்காது. ‘‘என்னுடைய அம்மா, அப்பா என்னுடைய சந்தோஷத்துக்காக நடிக்க அனுப்பியிருக்காங்க. அவங்க மனசு நோகுற மாதிரி எதையும் செய்யமாட்டேன்’’ என்பது சாய் பல்லவியின் பதில். 

• ‘‘நடிகை என்று சொல்வதைவிட, மருத்துவர் என்று சொல்லும்போது எனக்கு ஆத்மதிருப்தி ஏற்படுகிறது. ஒருவரைக் குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், நோயே வராமல் தடுக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்பது, ‘மருத்துவர்’ சாய் பல்லவியின் விருப்பம்.

ம்யூட்

• சமீபத்தில் வெளியான யானையின் பெயர் கொண்ட படம் தோல்வியடைந்ததில், ஹீரோயினைவிட அதிக வருத்தத்தில் இருப்பது இயக்குநரின் காதலிதானாம். ஏனெனில், படத்துக்கான கதையை எழுதியதுடன், இயக்குநருக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்ததே அவர்தானாம்!

• மந்திரப் பெயர் கொண்ட நடிகையுடன், இரட்டைப் பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஏழாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இதனால், நடிகைகள் பலர் மந்திர நடிகை மீது பொறாமையில் இருக்கிறார்கள்.

• போஸ்ட் பெயர் கொண்ட நடிகையும், ஜெயமான நடிகரும் பிரிந்துவிட்டதாக வந்த தகவல்கள் உண்மையில்லையாம். ஒன்றாகச் சுற்றுவது தெரிந்தால், வாய்ப்புகள் வராது என நடிகர் சொன்னதாலேயே, இருவரும் பொய்யானத் தகவல்களைப் பரப்பியிருக்கிறார்களாம். இப்போதும் இணைப்பில்தான் இருக்கிறார்களாம் இவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism