Published:Updated:

''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா!" - #HBDSivakarthikeyan

''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா!" - #HBDSivakarthikeyan
''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா!" - #HBDSivakarthikeyan

'கெட்டப்புள்ளனு பேரு எடுக்குறது ஈஸி. நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா!' என்று அவரது அம்மா கூறியதை எப்போதும் நினைவில் வைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாகக் கடந்து செல்லும் சிவகார்த்திகேயன், ரசிகர்களின் மனதிலும் செம்பு கலக்காத தங்கமாகத்தான் இருக்கிறாா்.

மிழ் சினிமா ஒரு ராஜதந்திரம் நிறைந்த ராஜாங்கம். ஆனால், திறமையான கலைஞர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கத் தவறியதில்லை. சினிமாவில் ஒருவர் திடீரென வெற்றியைச் சுவைத்தால், அது அதிர்ஷ்டம் என்று அவரது வளர்ச்சியை எளிதாகக் கூறிவிடுவோம். ஆனால, அந்த முகத்தைத் திரையில் காட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் அத்தனை எளிதாக இருந்திருக்காது. இப்படி எந்த ஒரு சினிமா பின்னணியுமின்றி, தன் தனித் திறமையால் சின்னத்திரை டூ வெள்ளித்திரைக்குப் பல தடைகளைத் தாண்டி வந்த ஒருவர், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன். பிறந்தநாள் நினைவாக, அவருடைய பயணத்தைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாமா?!

கருஞ்சிவிங்கி காா்த்தி டூ ஆங்கர் :

சிவகாா்த்திகேயன், SK, ப்ரின்ஸ் என ரசிகர்கர்கள் இவரைப் பல விதமாக அழைக்க, வீட்டில் இவரை அனைவரும் அழைப்பது, காா்த்தி என்றுதான். பள்ளியில் அடக்கமான, அமைதியான, எந்த வம்பு தும்புக்கும் போகாத மாணவர்களில் ஒருவர், கார்த்தி. பள்ளிப் படிப்பை திருச்சியிலுள்ள ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில் முடித்த பின்பு, வழக்கம்போல இன்ஜினீயரிங் சேரும் காா்த்தியின் பயணம் அங்குதான் தொடங்கியது. காலேஜ் கேண்டீன் பென்ச்களில் டீச்சர்களின் வாய்ஸ்யை ஜாலியாக மிமிக்ரி செய்யத் தொடங்கிய இவரை, காலேஜ் கல்சுரலில் மேடையேற்றிவிட, அங்கேயும் கெத்து காட்டினார்.

பிறகு MBA படிக்க சென்னை வரும் சிவா, விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' ஆடிஷனில் கலந்துகொள்கிறாா். வீட்டில் மாட்டிக்கொள்வோமா என்ற பயம் அதிகமாக இருக்க, அதையும் மீறி மிமிக்ரி செய்யும் சிவா, ஒருமுறை டிவியில் போடப்பட்ட ஹைலைட்ஸ் மூலமாக மாட்டிக்கொள்கிறாா். இந்த ஒருமுறை , ஒருமுறை மட்டும் என்று கூறி அடுத்தடுத்த சுற்றிற்கு முன்னேறி, 'காமெடி கிங்' டைட்டில் வென்ற சிவாவிற்கு, அங்கேதான் அடித்தது ஜாக்பாட். விஜய் டிவியில் தொகுப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க்க, அதிலும் வெல்டன் கொடியைக்  காட்டினாா்.

ரஜினிமுருகனின் கதை :

25, நவம்பர் 1991 அன்று ரஜினியின் 'தளபதி' திரைப்படம் வெளியானது. அன்று முதல்நாள் முதல் ஷோவுக்குச் சென்று படம் பார்த்த சிவாவுக்கு, ரஜினியின் ஸ்டைல் ரொம்பவே பிடித்துப்போக, தீவிர ரசிகரானாா். பிறகு, 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது ரஜினியின் மகள் இவரை இல்லத்திற்கு அழைக்க, அவரைக் காண ரஜினி வீட்டிற்குச் செல்கிறாா். சட்டென வரும் ரஜினியுடன் அவர் அவரது நோக்கியா மொபைலில் எடுத்துக்கொண்ட புகைப்படம், சிவாவின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.    

ரெமோ நீ காதலன் :

ஸ்ரீதிவ்யாவில் தொடங்கி நயன்தாரா வரை திரையில் தீவிரமாகக் காதலித்த சிவகாா்த்திகேயன், நிஜ வாழ்க்கையில் வீட்டிற்குக் கட்டுப்பட்ட பிள்ளை. சிறுவர்கள் வந்தாலும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் தந்தையின் குணம், தனக்கு ஆஸ்கர் விருது கொடுக்கிறாா்கள் என்று சொன்னாலும்கூட 'உனக்குக் கொடுப்பாங்கப்பா' என்று கூறும் அம்மாவின் நம்பிக்கை, சிவாவின் படிப்பில் அக்கா காட்டிய கண்டிப்பும் இவையெல்லாம்தான் சிவாவின் வளர்ச்சிக்கும், சினிமாத்துறையில் இருக்கும் நற்பெயருக்கும் முக்கியக் காரணம். இப்படிப்பட்ட இவருக்கு, கல்லூரி காலத்தில் ஏற்பட்ட ஒரே காதல், மொபைல்போன்கள் மீதுதான். கலந்துகொள்ளும் கல்சுலர்ஸில் கிடைக்கும் தொகையை வைத்து, எந்த புதுமாடல் மொபைல் வந்தாலும் முதல் ஆளாக வாங்கிவிடுவாராம், சிவா.

நண்பர்கள் பட்டாளம் :

சிவகார்த்திகேயன் கூச்ச சுபாவம் கொண்டவர், யாாிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கிக் பழகாதவர். அப்படி இருந்தும்கூட இவரது வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், இவரது நண்பர்கள்தான். சினிமாவுக்கு வந்தபிறகும்கூட இவருடன் இருப்பவர்கள் அவரது கல்லூரி கால நண்பர்கள்தான். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இவர் படித்த அதே கால்லூரில் இவருக்கு சீனியர். அருண்ராஜா, திபுநிணன் தாமஸ் என சிவாவின் பட்டாளம் ஒரு ஜிகிரு தோஸ்த் நட்பதிகாரம்.

ஆனந்த யாழையை மீட்டிய ஆராதனா :

சிவாவின் வாழ்வில் தான் மிகவும் மகிழ்ந்த தருணம் என்று அவர் எப்போதும் சொல்வது, மகள் ஆராதனா பிறந்ததை! பிரசவத்திற்காக மனைவி ஆர்த்தி அனுமதிக்கப்பட்டவுடன் ஏர்போர்ட் கிளம்புவதற்காகப் பதட்டத்துடன் காரில் ஏறி, ரேடியோவைத் தட்ட... அப்போது ஒலித்தது, 'தங்க மீன்கள்' படத்தில் இடம்பெறும் 'ஆனந்த யாழை'  பாடல். அன்றே தங்க மகளாகப் பிறந்தாள், ஆராதனா. பின்பு அந்தப் பாடலே இவரது வெகுநாள் ஸ்டேட்டஸாக இருந்தது. கடந்த வருடம் 'கனா' திரைப்படத்தின் மூலம் மகளின் பாசத்தை அவருடனேயே சேர்ந்து ரசிகர்களுக்கு 'வாயாடி  பெத்த புள்ளை'யாகக் கொடுத்தாா், சிவா. மகளுக்கு தமிழ் அதிகம் கற்றுத்தர வேண்டும் என்பது சிவாவின் ஆசை. 

'பாசிட்டிவ் பாண்டி' சிவா :

கதாநாயகனாக வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வெள்ளித்திரைக்கு நுழைந்த சிவா, தனக்கான பாசிட்டிவ் பாயிண்ட்டாக நினைப்பது, தனது ஹியூமரைத்தான். காமெடி ஷோக்களில் தொடங்கி தற்போது நடிக்கும் படங்கள் வரை இது தொடர்கிறது. இதுதான் இவருக்கு அதிகப்படியான குடும்ப ரசிகர்களையும், குழந்தை ரசிகர்களையும் கொடுத்தது. சினிமாவில் 7 வருடங்களைக் கடந்திருக்கும் சிவா, இதுவரை ஒருமுறை கூட மதுவையோ, சிகரெட்டையோ அனுபவித்தது இல்லை. நண்பர்களும் அப்படி என்னை திசைதிருப்பியது இல்லை என்று எங்கு சென்றாலும் ரசிகர்களுக்கும் இதைச் சொல்கிறார், சிவா.

தேங்க் யூ ஆல்... லவ் யூ ஆல்! :

நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, சின்னத்திரை, சினிமா என்று அவர் அனைவரையும் கவர்ந்தது அவரது அன்பால்தான். முடித்த அளவிற்கு உண்மையான அன்பைக் கொடுக்கும் நண்பர்களைக் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறும் சிவா, எந்த சூழலிலும் நண்பர்களை விட்டுக்கொடுத்ததில்லை. அதற்குக் 'கனா'வே சிறந்த உதாரணம். 'கெட்டப்புள்ளனு பேரு எடுக்குறது ஈஸி. நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா!' என்று அவரது அம்மா கூறியதை எப்போதும் நினைவில் வைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாகக் கடந்து செல்லும் சிவா, ரசிகர்களின் மனதிலும் செம்பு கலக்காத தங்கமாகத்தான் இருக்கிறாா்.

அடுத்த கட்டுரைக்கு