Published:Updated:

``விஜய் அட்வைஸ், `சுப்ரமணியபுரம் 2', சயின்ஸ் பிக்ஷன் கதை, மம்மூட்டிக்குத் தம்பி!" - ஜெய் ஷேரிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``விஜய் அட்வைஸ், `சுப்ரமணியபுரம் 2', சயின்ஸ் பிக்ஷன் கதை, மம்மூட்டிக்குத் தம்பி!" - ஜெய் ஷேரிங்ஸ்
``விஜய் அட்வைஸ், `சுப்ரமணியபுரம் 2', சயின்ஸ் பிக்ஷன் கதை, மம்மூட்டிக்குத் தம்பி!" - ஜெய் ஷேரிங்ஸ்

`` `எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி'க்குப் பிறகு அதேமாதிரி அப்பாவியான ரோல் கதைகள் நூற்றுக் கணக்குல வந்தன. ஆனா, அதையே ஜெய் டெம்ப்ளேட் ஆக்கிடுவாங்கனு பண்ணல்ல!" - நடிகர் ஜெய்

``சசிகுமார் சார்கிட்ட 'சுப்ரமணியபுரம் 2' எடுங்கனு கேட்டுக்கிட்டே இருக்கேன். ‘முதல் பாகம் அளவுக்கான ஒரு கதை அமைஞ்சா, நிச்சயம் பார்ட் 2 எடுக்கலாம்’னு சொல்லியிருக்கார். அந்தப் படம் இல்லைனாலும், சசி சார் அடுத்து டைரக்ட் பண்ற படத்துல நிச்சயம் நான் இருப்பேன்.” - ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த ஜெய் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீடியாவிடம் பேசுகிறார். 'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா' உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கிறார். கோபி நயினார் இயக்கும் படத்தில் நடிப்பது, மம்மூட்டியின் பாராட்டு, விஜய் தந்த அட்வைஸ்... உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், ஜெய். 

``நீங்க ஜாலியான ஹீரோ. கோபி நயினாரின் கதை உங்களுக்கு எப்படிப் பொருந்தியது?”

``ஒரேமாதிரி திரும்பத் திரும்ப நடிச்சுக்கிட்டு இருக்க முடியாதே! `எங்கேயும் எப்போதும்', `ராஜா ராணி'க்குப் பிறகு அதேமாதிரி அப்பாவியான கேரக்டர்கள் நூற்றுக் கணக்குல வந்தன. விட்டா, அதையே நம்ம டெம்ப்ளேட் ஆக்கிடுவாங்கனு நினைச்சுத் தவிர்த்தேன். `பகவதி' படத்துக்குப் பிறகு விஜய் சார்கிட்ட அடிக்கடி வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருந்தப்போ, `இப்படி சப்போர்ட்டிங் ரோல் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னைக் கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க’னு சொன்னார். ஒரேமாதிரியான கேரக்டர்ல நடிக்கிறப்போ, விஜய் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.”

``டயலாக் டெலிவரி, உடல்மொழியில உங்களுக்குனு ஒரு பாணி இருக்குல்ல?"  

``ஆமாம். 'நான் ஒண்ணும் அழுவலியே', 'என்னப் பரமா' மாதிரியான நிறைய வசனங்கள் இருக்கு. அதுதான் என் அடையாளமே. அதை எப்போவுமே விடமாட்டேன். ‘பார்ட்டி’ படத்துலகூட அந்த மாதிரி ரெண்டு மூணு வசனம் வரும்.”

``கோபி நயினார் படத்துக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டீங்கனு கேள்விப்பட்டோம்?”

``ஆமாம். கோபி சார் எந்தளவுக்கு ரிசர்ச் பண்ணி சீரியஸா வேலை பார்ப்பார்னு நம் எல்லோருக்கும் தெரியும். அப்படியான ரிசர்ச்தான் இந்தப் படமும். அதில் ஒரு பகுதிதான், ஃபுட்பால் கோச்சிங். இந்தக் கேரக்டருக்காக மூணு கோச் எனக்கு ட்ரெய்னிங் கொடுக்குறாங்க. உலகத்தோட மற்ற பகுதிகள்ல விளையாடும் முறைக்கும் நம் நார்த் மெட்ராஸ்ல ஃபுட்பால் விளையாடும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. அதை ஷார்ப்பா வெளிப்படுத்துறது மிகப்பெரிய சவால். தவிர, சிறைக்குள்ளே நடக்கும் ஒரு பகுதியும் இதில் இருக்கு. அதுக்கும் கோபி சார் நிறைய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கார்.”

`` `பார்ட்டி' படத்துல நீங்க ஹீரோவா, வில்லனா?”

``அது எனக்கே தெரியலைங்க!. நல்லவனா கெட்டவானானு நானும் கடைசி வரை வெங்கட் பிரபுகிட்ட கேட்டேன். அது அவருக்கே தெரியல. வில்லன் மாதிரி பல கெடுதல் பண்ண முயற்சி பண்ணி, அது காமெடியா முடியும். அந்தப் படத்துகாக இந்தியெல்லாம் பேசியிருக்கேங்க.”

``இவை தவிர ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்திலேயும் கமிட் ஆகியிருக்கீங்க!”

``அது பெரிய பட்ஜெட் சினிமா. எதிர்காலத்துல நடக்கிற மாதிரியான கதை. அதுல கல்லூரி மாணவனா நடிக்கிறேன். இந்தப் படத்துக்கு பிரபல விஷுவல் எஃபெக்ட் கலைஞர் ஆண்ட்ரு பாண்டியன்தான் இயக்குநர். படத்தோட கிராஃபிக்ஸ் காட்சிகளெல்லாம் உலகத் தரத்துல இருக்கும்.”

``இவ்வளவு படங்கள்ல முதல்ல வரப்போற படம் எது?”

`` `நீயா 2' தான் முதல்ல ரிலீஸ் ஆகும். இதில் எனக்கு இரட்டை வேடம். ‘பலூன்’ படத்துல வர்றமாதிரி ரெண்டு கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்காது. ஒன்னு நிகழ்காலத்துல நடக்கிற கதை. அதில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் கேரக்டர். எதிர்காலத்துல ஒரு கேரக்டரா வருவேன். பழைய `நீயா' படத்துக்கும் இதுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. ஆனா அதோட பல ரெஃபெரன்ஸ் இதில் இருக்கும்.”

``மம்மூட்டிக்குத் தம்பியா 'மதுர ராஜா' படத்துல நடிக்கிறீங்க. மலையாளத் திரையுலகம் உங்களை எப்படி வரவேற்குது?”

``இப்படியொரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. `இந்தப் படத்துக்குப் பிறகு உனக்கு மலையாளத்துல நிறைய வாய்ப்புகள் வரும். தமிழ்ல நடிக்க உன்னால கால்ஷீட் கொடுக்க முடியாது’னு மம்மூட்டி சார் என்கிட்ட சொன்னார். படம் மலையாளத்துல இருந்தாலும், என் கேரக்டர் மதுரையிலிருந்து கொச்சிக்கு அடைக்கலம் தேடிப்போற மாதிரி இருக்கும். அதனால, என் வசனங்கள் எல்லாமே தமிழ்லதான் இருக்கும்."

``அஞ்சலியுடன் மறுபடியும் சேர்ந்து நடிக்கிறீங்கனு சொல்றாங்களே?”

``இப்போதைக்கு இல்லை. அவங்களா புக் பண்ணினாதான் உண்டு.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு