Election bannerElection banner
Published:Updated:

`செம்பியன்' எனப் பெயர் வைத்தது ஏன்?- காரணம் சொல்லும் கயல்விழி சென்றாயன்

'பிக்பாஸ்' சென்றாயனுக்கு கடந்த 9-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று குழந்தைக்குப் பெயர் சூட்டும்விழா நடைபெற்றுள்ளது. இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள கயல்விழி சென்றாயனிடம் பேசினோம்.

``ஒற்றைப்படையில் தான் பெயர் சூட்டுவிழா நடத்தணும்னு முடிவெடுத்திருந்தோம். அவருக்கு அவசர வேலை இருக்குன்னு சொன்னதால நேற்றைக்கே பெயர் வைச்சிடலாம்னு முடிவெடுத்தோம். நேற்று எங்க ராசா பிறந்து ஒன்பது நாளாகியிருந்துச்சு. நானும், என் வீட்டுக்காரரும் நிறைய தமிழ் பெயர்கள் யோசிச்சோம். அவர் ஃப்ரெண்ட்ஸ்கிட்டலாம் விசாரிச்சிட்டு இருந்தாரு. பெயர் கூட்டுத்தொகை 9 வரணும்னு சொன்னாங்க. அதுக்கு ஏற்றப் பெயரை யோசிச்சோம்.

பல பெயர்களை யோசிச்சு கடைசியா எங்களுடைய செல்லத்துக்கு `செம்பியன்'ன்னு தமிழ்ப் பெயர் வைச்சோம். செம்பியன் என்கிற பெயருக்கு சிறந்த அரசன், வீரன்னு அர்த்தம். அதுமட்டுமில்லாமல், முதல் ஏழு வள்ளல்களில் ஒருவருடைய பெயர் செம்பியனாம். ராஜராஜ சோழனுடைய தாத்தாவின் பெயர் செம்பியன் தான் தெரியுமா'' எனப் புன்னகைக்கிறார், கயல்விழி. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு