Published:Updated:

``பிரவீணா அக்காவுடனான நட்பு... மறக்க முடியாத நினைவுகள்!" - நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

``பிரவீணா அக்காவுடனான நட்பு... மறக்க முடியாத நினைவுகள்!" - நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
``பிரவீணா அக்காவுடனான நட்பு... மறக்க முடியாத நினைவுகள்!" - நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

மிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர், பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து ஒதுங்கியவர் தற்போது மீண்டும் நடிப்பைத் தொடர்கிறார். தன் சினிமா பயணத்தைப் பற்றிக் கூறுகிறார், பூர்ணிமா. 

``காலேஜ்ல காமர்ஸ் கோர்ஸ் படிச்சேன். காலையில 6.45 – 10.30 வரைதான் காலேஜ் நடக்கும். பிறகு என் சினிமா கனவு நிறைவேறக் கவனம் செலுத்தினேன். இந்தி படங்கள்ல நடிச்சேன்; மாடலிங் பண்ணினேன். பாலிவுட்ல பெரிய ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டேன். இயக்குநர் கே.பாலசந்தர் சார் பட ஆடிஷனுக்காக சென்னை வந்தேன். சாருஹாசன் அங்கிள்தான் சென்னை விமான நிலையத்துக்கு வந்து என்னை பிக் அப் பண்ணினார். அன்னிக்கு தொடங்கிய சுஹாசினி உடனான நட்பு, இப்போ வரை தொடருது. இந்த நிலையில், இயக்குநர் பாசில் சாரின் `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்துல கமிட் ஆனேன். அந்தப் பட காஸ்ட்யூம் செலக்‌ஷன் சென்னை பாம்குரோவ் ஹோட்டல்ல நடந்துச்சு. ஒரு ரூம் முழுக்க எனக்கான விதவிதமான ஆடைகளைப் பார்த்ததும் பூரிப்பில் திக்குமிக்காடிப்போயிட்டேன். 

கொடைக்கானல்ல ஷூட்டிங் நடந்துச்சு. அந்தப் படத்தில் நடிக்கிறப்போ, பிரபா கேரக்டர் பெயரைச் சொல்லித்தான் எல்லோரும் என்னைக் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு அந்த கேரக்டருடன் ஒன்றிப்போயிருந்தேன். காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுகிட்டு இருக்கும்போது, அந்தப் படத்தின் வெற்றியால் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஓய்வு கிடைக்கும். மும்பை வீட்டுக்கும் வருஷத்துல சில முறைதான் போவேன். தென்னிந்திய மொழிகளில் புகழ் கிடைச்சதால, இந்தி படங்களில் நடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். பிரவீணா அக்காவுடனான நட்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷ நினைவுகள். பிற்காலத்தில் அவருடனான நட்பு எதனால் ஏற்பட்டதுனு தனிமையில் அடிக்கடி யோசிச்சிருக்கேன்."

பாலிவுட் சினிமா, கமல்ஹாசனுக்கு ஜோடி?, யார் அந்த பாக்யராஜ்?, திமிரு பிடிச்சவரா இருப்பாரோ?, பிரவீணா அக்காவின் நட்பு, அந்த ஒரு ரூபாய் சென்டிமென்ட், தேதி குறித்த எம்.ஜி.ஆர், திடீர் கல்யாணம், ரீ-என்ட்ரி பயணம் உட்பட தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். நாளை வெளியாகவுள்ள அவள் விகடனில், `எவர்கிரீன் நாயகிகள்' என்ற தொடரில்.