Published:Updated:

`இனி குத்துப்பாட்டுக்கு நோ; மனசுல பதியுற கேரக்டருக்கு யெஸ்!’’ - நடிகை இனியா

வே.கிருஷ்ணவேணி
`இனி குத்துப்பாட்டுக்கு நோ; மனசுல பதியுற கேரக்டருக்கு யெஸ்!’’ - நடிகை இனியா
`இனி குத்துப்பாட்டுக்கு நோ; மனசுல பதியுற கேரக்டருக்கு யெஸ்!’’ - நடிகை இனியா

`வாடகை சூட வா’ படத்தின்  மூலம் தமிழ் சினிவுக்கு அறிமுகமானவர் இனியா. பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்தார். தற்போது தமிழில் `காபி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கிக்கொண்டிருக்கும் இப்படம், ஹீரோயினை மையப்படுத்திய கதை. இதில், இனியாவுக்கு ஆக்‌ஷன் சீக்வென்ஸும் இருக்கிறது. தவிர, மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் இனியா. அவரிடம் பேசினோம்.

`இனி குத்துப்பாட்டுக்கு நோ; மனசுல பதியுற கேரக்டருக்கு யெஸ்!’’ - நடிகை இனியா

``மலையாளத்தில் பி.வி.சந்திரன் இயக்கும் `பெண்களிலா’ படத்தில் நானும் நரேனும் நடிச்சிருக்கோம். 90-களில் நடக்கும் கதை. மற்றொரு படம், ப்ரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் ஜோடியாக `தக்கோல்’ என்கிற படத்தில் நடிக்கிறேன். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி. கன்னடத்தில் சிவராஜ் உடன் `துரோணா’ படத்தில் நடிச்சிருக்கேன். ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகப்போகுது. தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வேண்டும். நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு, ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ற நடிகையாவே இருந்திடாம, மக்கள் மனசுல பதியிற மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கணும்’’ என்றவரிடம்,

`ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் `குக்குறு’ பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே என்றால், ``டைரக்டரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு ஒப்புக்கொண்டேன். நல்ல கலர்ஃபுல்லான சூழ்நிலையில் அமைந்திருக்கும் அந்தப் பாடல். பிருந்தா மாஸ்டர்தான் அந்தப் பாடலுக்கு கோரியோகிராப் பண்ணியிருந்தாங்க. அதற்குப் பிறகு, நான் எந்தக் குத்துப்பாடலுக்கும் ஒத்துக்கல. இனியும் அப்படிக் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது எனவும் முடிவெடுத்துவிட்டேன்’’ என்கிறார் இனியா தெளிவாக.