'மெட்டி ஒலி' தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட். ஈரநிலம், அரசாட்சி, தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்துவந்த இவர் சிவாஜி, தீரன் அதிகாரம் ஒன்று, கவண் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் அந்தப் படத்துக்கு `கன்னி மாடம்' எனப் பெயரிடப்படவுள்ளது. இப்படத்தின் பூஜை விழா அண்மையில் சென்னையில் நடந்தது

இதுகுறித்து போஸ் வெங்கட் கூறும்போது, ``படம் இயக்குறது என்னோட நீண்டகால கனவு. இப்போதான் நிறைவேறி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணிபுரியும்போதும், அவங்க எப்படி வேலை செய்றாங்கனு திருட்டுத்தனமா கவனிப்பேன். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுநீள பொழுதுபோக்குப் படமா இருக்கும்னு நம்புறேன்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுகம் காயத்ரி ('யார்' கண்ணன் மகள்), வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.