Published:Updated:

நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!
நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

சனா

பிரீமியம் ஸ்டோரி
நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

“மும்பைப் பொண்ணு நான். சைக்காலஜி படிச்சுக்கிட்டே மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போதான் தெலுங்கு சினிமாவுல நடிக்கிற வாய்ப்பு வந்தது. தொடர்ச்சியா அங்கே மூணு படங்கள் பண்ணிட்டேன். டைரக்டர் பாபா பாஸ்கர் சார் என் தெலுங்குப் படங்களைப் பார்த்துட்டு ‘குப்பத்து ராஜா’ வாய்ப்பு கொடுத்தார். ஆனா, இந்தப் படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே வைபவ்கூட ‘சிக்ஸர்’, ஆதிகூட ஒரு படம்னு கமிட் ஆயிட்டேன். இப்போ ஷூட்டிங் போயிட்டிருக்கு. எனக்கு நயன்தாரா மேடம் ரொம்பப் பிடிக்கும். அவங்களை மாதிரி நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை’’ என்கிறார், பலாக் லவானி.

நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

“கேரளாதான் என் சொந்த ஊர். இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணு நான். சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பா, அம்மா ரெண்டுபேருமே டீச்சர்ஸ். முதல்ல சினிமாவுக்கு ‘நோ’ சொன்னாங்க. நான் அடம்பிடிச்சு ஓகே சொல்ல வெச்சேன். மலையாளத்துல ரெண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஹீரோயினா நடிச்ச முதல் படம், ‘நட்பே துணை’தான். இந்தப் படத்துல நடிச்சப்போ எனக்கு ஹிப் ஹாப் ஆதியைத் தெரியாது. அப்புறமாதான், ‘மீசைய முறுக்கு’ படத்தைப் பார்த்தேன். ‘நட்பே துணை’க்காக ஹாக்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன். படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன்’’ நம்பிக்கையுடன் முடிக்கிறார், அனகா.

நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

“மும்பைப் பொண்ணு, படிச்சுட்டு மாடலிங் ஃபீல்டுல இருந்தேன். பிறகு, ஜெட் ஏர்வேஸ்ல விமானப் பணிப்பெண் வேலை. கன்னடத்துல ஒரு படம் பண்ணி யிருக்கேன். அதுக்குப் பிறகு நேரா தமிழ் சினிமாவுக்குத்தான் என்ட்ரி கொடுத்தி ருக்கேன். எனக்கு சிவகார்த்திகேயனை ரொம்பப் பிடிக்கும். அவர் நடிச்ச ‘ரெமோ’ படமும், தயாரிச்ச ‘கனா’ படமும் என் ஃபேவரைட். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துல பெண் நிருபரா நடிச்சிருக்கேன். இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படமா இருக்கும். தமிழ் வசனங்களைப் பேச, ஸ்பாட்ல உதவி இயக்குநர்கள் சொல்லிக் கொடுத்தாங்க. ரியோ இதுல சூப்பரா நடிச்சி ருக்கார். எவ்ளோ பெரிய வசனமா இருந்தாலும், ஒரே மூச்சுல பேசிடுவார். கண்டிப்பா இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்!” பாசிட்டிவாகப் பேசுகிறார், ஷிரின் காஞ்ச்வலா.

நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

“லண்டன் பொண்ணு நான். துருவ் விக்ரம் அறிமுக மாகுற ‘ஆதித்யா வர்மா’ படம் மூலமா தமிழ்ல ஹீரோயினா அறிமுகம். பஞ்சாப்தான் பூர்வீகம். நான வேல்ஸ்ல பிறந்தேன். சின்ன வயசுல இருந்து நடிக்கணும்னு ஆசை. 11 வயசுல இருந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறேன். அப்படி ஒரு விளம்பரப் படத்துல நடிக்க இந்தியா வந்தப்போதான், என் முதல் வாய்ப்பு கிடைச்சது. சூஜித் சர்கார் இயக்கிய பாலிவுட் படமான ‘அக்டோபர்’தான் அந்தப் படம்.  விமர்சன ரீதியாக அதிகம் பேசப்பட்ட படம் அது. இப்போ, தமிழ்ல ‘ஆதித்யா வர்மா.’ அடுத்தடுத்து சில வாய்ப்புகள் வருது... பார்ப்போம்!” என்கிறார், பனிட்டா.

நாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்!

“கோவைப் பொண்ணு நான். தமிழ் பேசுற ஹீரோயின்ஸ், தமிழ்ப் படங்களில் நடிச்சாலே எல்லோரும் ஆச்சர்யமா பார்க்கிறாங்க. சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிராமத்தில் ஒருநாள்’ நிகழ்ச்சிதான் என் அடையாளம். ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்துக்கு ஆடிஷன் நடந்தப்போ, கலந்து கிட்டேன். கிட்டத்தட்ட 150 பெண்கள் வந்திருந்தாங்க. அதுல என்னை இயக்குநர் சி.வி.குமார் சார் செலக்ட் பண்ணி னார். இந்தப் படத்துல ஹீரோயினுக்கு பவர்ஃபுல் கேரக்டர். படத்துல எனக்கு ஃபைட் சீன்ஸ் இருக்கு. அதுக்காகப் பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கூத்துப்பட்ட றையில் நடிப்பு பற்றிய நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். ஏதாவது ஒரு கேரக்டர் ரோலில் நடிச்சா போதும்னு நினைச்ச எனக்கு, ஹீரோயின் சான்ஸ் கிடைச்சி ருக்கிறது, சந்தோஷம்!” என்கிறார், பிரியங்கா. 

-அலாவுதின் ஹுசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு