Published:Updated:

“இது காட்டுக் கச்சேரி!”

“இது காட்டுக் கச்சேரி!”

பிரீமியம் ஸ்டோரி

“நம்ம ஊர்ல குழந்தைங்க ரசிக்கிற படங்கள் உண்மையிலேயே குழந்தைகளுக்கான படமான்னு யோசிச்சுப் பாருங்க. எல்லாப் படமும் பெரியவர்களுக்கான படங்களா தான் இருக்கு. குழந்தைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் படம் ஒண்ணு எடுக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான், ‘தும்பா.’ ” விலங்குகளை மையப்படுத்தி, தான் இயக்கும் கிராஃபிக்ஸ் படம் குறித்துப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஹரிஷ் ராம்.

“ ‘எதிர்நீச்சல்’ படத்துல துரை. செந்தில்குமார் சார் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அப்படியே அனிருத்கிட்ட பின்னணி இசைக்கான வேலைகளையும் பார்த்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு அனிருத் டீம்ல மியூசிக் சூப்பர்வைசரா சேர்ந்துட்டேன். அப்போ ஆரம்பிச்சு ‘பேட்ட’ வரைக்கும் அவர்கூட வொர்க் பண்ணியிருக்கேன். நானும் அனிருத்தும் ஸ்கூல்மேட்ஸ்.”

“இது காட்டுக் கச்சேரி!”

“ ‘தும்பா’ன்னா  என்ன?”

“காட்டுக்குள்ள போகலாம்னு முடிவெடுக் கிறாங்க, மூணு பேர். ஏன் எதுக்கு, அங்கே என்ன கண்டுபிடிக்கிறாங்க, எந்தெந்த விலங்குகளைச் சந்திக்கிறாங்க... இதுதான் கதை. படத்துல முக்கியமான கேரக்டர்ல வர்ற ஒரு பெண் புலிதான் தும்பா. ஆக்சுவலா நம்ம நாட்ல ரேடியோ காலரிங் முறையில புலிகளைப் பாதுகாக்கிறதால, எல்லாப் புலிகளுக்கும் ஒரு பேர் உண்டு. என் படத்துல ‘தும்பா’வைப் பேரா வெச்சிருக்கேன். படத்தோட ஷூட்டிங் கேரளக் காடுகள்ல நடத்தியிருக்கோம். அங்கே ‘தும்பா’ன்னு ஒரு ஊர் இருந்ததும், இந்தப் பேர் குழந்தைகளுக்குப் பிடிக்கும்  என்பதும் இந்த டைட்டிலுக்கான காரணங்கள்.” 

“படத்துல புலி மட்டும்தான் வருதா?”

“ அணில், குரங்கு, யானை, மான்  தொடங்கி,  ஒரு காட்டுக்குப் போனா என்னென்ன பார்ப்பீங்களோ, அது எல்லாத்தையும் இந்தப் படத்துல பார்க்கலாம். எல்லாமே கிராஃபிக்ஸ் விலங்குகள்தான்! புலியோட குணம், குரங்கு சேட்டை... இப்படி விலங்குகளோட எல்லா விஷயத்தையும் கிராஃபிக்ஸ்ல கொண்டு வந்திருக்கோம். ஆனா காடு கிராஃபிக்ஸ் இல்ல. ரியல்!”

“ரியல் ஷூட்னா, படப்பிடிப்பு சவாலா இருந்திருக்குமே?”

“ஆமா.  வழக்கமா கிரீன், புளூ மேட்லதான் எடுப்பாங்க. ஹாலிவுட் படங்கள் மாதிரி  ‘போட்டோ ரியலிஸ்டிக்’ கிராஃபிக்ஸா இருக்கணும்னு காட்ல ஷூட், எக்கச்சக்க ரீடேக்னு நிறைய உழைச்சிருக்கோம். மூன்று முக்கிய கேரக்டர்கள் படத்துல இருக்காங்க. தர்ஷனை நண்பனா தெரியும். ‘கனா’ல அந்த நண்பன், நடிகரா ஜொலிச்சதப் பார்த்தேன். தீனாவோட டைமிங் காமெடிக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. கீர்த்தி பாண்டியன், நடிகர் அருண் பாண்டியன் சார் பொண்ணு. பின்னியிருக்காங்க. எதிர்ல இல்லாத ஒண்ணை இருக்கிறதா நினைச்சுக்கிட்டு நடிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதை மூணு பேரும் உணர்ந்து நல்லவிதமா நடிச்சுக் கொடுத்திருக்காங்க. இந்தக் கூட்டணி ரசிகர்களுக்குப் பிடிச்சமாதிரி இருக்கும். தமிழ்ல பல புதுப் படைப்புகளை ரசிகர்கள் வரவேற்கிறாங்க. கண்டிப்பா, இந்தப் படத்தையும் கொண்டாடுவாங்கன்னு நம்புறேன்.”

“இது காட்டுக் கச்சேரி!”

“அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி... படத்துக்கு இத்தனை இசையமைப்பாளர்கள் ஏன்?” 

“நண்பர்கள் எல்லோருமா ஒரே படத்துல வொர்க் பண்றது ஸ்பெஷலா இருக்கும்னுதான்! அனிருத் ஒரு மெலடி போட்டுக் கொடுத்தார். விவேக் - மெர்வின், அவங்க ஜானர்ல ஒரு கொண்டாட்டமான பாட்டு போட்டுக் கொடுத்திருக்காங்க. சந்தோஷ் தயாநிதி ஒரு பாட்டு, புரமோஷன் சாங் பண்ணிக் கொடுத்திருக்கார். அடுத்து ரிலீஸ் பண்ணப்போற பாட்டுல ‘ராஜா சின்ன ரோஜா’ படத்துல ரஜினி ஆடுற மாதிரி, படத்தின் மூன்று கேரக்டர்களும் கார்ட்டூன் கதாபாத்திரங் களோடு ஆடிப் பாடுறமாதிரி இருக்கும். முக்கியமான விஷயம் என்னன்னா, ‘ராஜா சின்ன ரோஜா’வுக்கு வொர்க் பண்ணுன சிலர், இந்தப் பாட்டுக்கும் வொர்க் பண்ணியிருக்காங்க.”

- அலாவுதின் ஹுசைன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு