Published:Updated:

``24-ம் புலிகேசியா பண்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!’’ - யோகி பாபு

தார்மிக் லீ
``24-ம் புலிகேசியா பண்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!’’ -  யோகி பாபு
``24-ம் புலிகேசியா பண்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!’’ - யோகி பாபு

ஷங்கர் பேனரில், சிம்புதேவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் `இம்சை அரசன் 23-ம் புலிகேசி.’ இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் கொஞ்ச நாளைக்குப் பின் ஆரம்பித்தது. பின், சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாகப் படத்திலிருந்து வடிவேலு விலகிக்கொண்டார். தற்போது யோகிபாபுதான் இப்படத்தின் புது ஹீரோ என்ற செய்தி நேற்றிலிருந்து வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.  

`இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யாக இரட்டை வேடத்தில் நடித்த வடிவேலு, ரசிகர்களுடைய அதிக வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க, இயக்குநர் சிம்புதேவன் வடிவேலுவை பல முறை அணுகியுள்ளார். `இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’, `எலி’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார் வடிவேலு. பின் ஒரு வழியாக 24-ம் புலிகேசி எனப் படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் அதிகாரபூர்வமாக வெளிவந்ததது. முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துத் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் இயக்குநர் ஷங்கர். ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பல கோடி ரூபாய் செலவில் சில நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது.

பின் பல்வேறு விதமான பிரச்னைகளால் வடிவேலு இப்படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டதாக அறிவிப்பு வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது யோகி பாபு `24-ம் புலிகேசி’ வேடத்தில் நடிக்கப்போவாதாகச் செய்திகள் நேற்றிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக யோகி பாபுவிடம் பேசினோம். ``எனக்கே இந்த விஷயம் நேத்துதான் தெரியும். ஒரு வார்த்தை என்னைத் தேடி வந்து `நீங்கதான் பண்ணனும்’னு சொன்னா அதைப் பண்றதுல எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. அதை விட்டுக் கொடுக்க எனக்கு மனசு வராது. அதுவும் எனக்கு ஒரு வேலைதானே. பேச்சு வார்த்தைகள் போயிட்டிருக்கதா சொல்றாங்க. அப்படி ஏதாவது மாறுதல்கள் இருந்தா, உங்களுக்கு கண்டிப்பா அப்டேட்ஸ் வரும்’’ என்று கூறினார்.