Election bannerElection banner
Published:Updated:

``‘யுத்தம் செய்’ நான் பண்ணியிருக்க வேண்டியது!’’ - ‘கண்ணே கலைமானே’ உதயநிதி #SponsoredContent

``‘யுத்தம் செய்’ நான் பண்ணியிருக்க வேண்டியது!’’ - ‘கண்ணே கலைமானே’ உதயநிதி #SponsoredContent
``‘யுத்தம் செய்’ நான் பண்ணியிருக்க வேண்டியது!’’ - ‘கண்ணே கலைமானே’ உதயநிதி #SponsoredContent

``‘யுத்தம் செய்’ நான் பண்ணியிருக்க வேண்டியது!’’ - ‘கண்ணே கலைமானே’ உதயநிதி #SponsoredContent

```இனிமேல் நீங்கள் மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலின்!’னு சீனு ராமசாமி சார் ட்விட்டர்ல போட்டுவிட்டுட்டார். போன் பண்ணி, `பட்டமெல்லாம் வேணாம் சார், ப்ளீஸ்’னேன். `நான்தான் இந்தப் படத்தின் கேப்டன். நான் சொல்றதுதான். இனி நீங்கள் `மக்கள் அன்பன்தான்’னார். பிறகு ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருந்தோம். `மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலினே வருக’னு போஸ்டர். `டைட்டில் தந்ததும் நின்னுடுச்சு பாத்தீங்களா’னு சீனு சாருக்கு சந்தோஷம். பிறகு படம் ரெடியானதும் போட்டுக்காட்டினார். டைட்டில் கார்டில் `மக்கள் அன்பன்’ உதயநிதினு இருந்துச்சு. சீனு சாரோட சண்டை போட்டு அந்த `மக்கள் அன்ப’னை எடுக்கவெச்சேன். ஏன்னா பட்டம்ங்கிறது மக்களுக்காக ஒர்க் பண்ணும்போது அந்த வேலையைப் பாராட்டி அவங்க தரணும். மற்றபடி, நான் நடிச்சதுலேயே மனசுக்கு நிறைவான படம்னா அது `கண்ணே கலைமானே’தான். அதற்காக சீனு ராமசாமி சாருக்கு நன்றி. நிச்சயம் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்.” நம்பிக்கையாகப் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் தயாரித்து நடித்துள்ள `கண்ணே கலைமானே’ படம் நாளை (22-ம் தேதி) வெளியாக உள்ள நிலையில் உதயநிதியைச் சந்தித்துப் பேசினேன். 

``மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் கார்த்திக். அவரை எனக்கு அறிமுகப்படுத்திவெச்ச சீனு சார், `இந்தப் பையனோட கதாபாத்திரத்தைதான் நீங்க பண்றீங்க’னார். அவர் இயற்கை உரம் தயாரிக்கிற இளைஞர். அங்கயே 20 நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மண்புழுக்கள் உள்ள சானத்துல இறங்கி வேட்டியை மடிச்சுக்கட்டிகிட்டு மிதிக்கணும். அப்ப லைட்டா மேக்கப் டச் பண்ணினாலும், `என் படத்துல யாரும் மேக்கப் போடக் கூடாது’னு சொல்லி தேங்காய் எண்ணெயை கொண்டுவரச்சொல்லி முகத்துல தேய்ச்சி விட்டுடுவார் சீனு சார். `கண்ணே கலைமானே’ ஷூட்டிங் அனுபவம் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு.”

``இளையராஜா-பி.சி.ஸ்ரீராம் - மிஷ்கின் - உதயநிதி காம்பினேஷனே புதுசா இருக்கு. `சைக்கோ’ படத்தின் ஆரம்பப்புள்ளி எது?”

`` `ஒரு கல் ஒரு கண்ணாடி’க்கு முன் மிஷ்கின் சார்தான் என்னை அறிமுகப்படுத்துறதா இருந்தது. எனக்காக அவர் எழுதின கதைதான் `யுத்தம் செய்’. அதுக்காக போட்டோஷூட்லாம் பண்ணி முடிச்சிட்டோம். மிஷ்கினா, ராஜேஷானு என் முன் ரெண்டு ஆப்ஷன்கள். `முதல் படம் டார்க்கா இருக்க வேணாம். காமெடி படமாவே போயிடலாம்’னு நண்பர்கள் சொன்னாங்க. அப்படித்தான் `ஓகே ஓகே’ பண்ணினேன். இப்பவும், `நீ அதை பண்ணியிருந்தா வேறமாதிரி இருந்திருப்ப’னு மிஷ்கின் சார் சொல்லிட்டே இருப்பார். அப்படி ஒருநாள் அவர்ட்ட பேசிட்டு இருக்கும்போது ஒரு ஏலியன் கதை சொன்னார். `செமயா இருக்கு. ஆனா இது எனக்கு செட்டாகாது சார்’னு சொன்னேன். `வேணும்னா இந்தக் கதையை கேளு’னு வேறொரு ஒன்லைன் சொன்னார். அதுதான் `சைக்கோ’. 

உடனடியா ஷூட்டிங் தொடங்கினோம். மாஸ்டர் ஷாட், சஜஷன்...னு வழக்கமான ஷூட்டிங் பேட்டர்னை உடைக்கிறதுதான் மிஷ்கினின் ஸ்பெஷல். ‘மத்தவங்க எடுக்குறதை நான் ஏன் எடுக்கணும். அதுக்கெதுக்கு மிஷ்கின்’ம்பார். தனக்கு வேணும்ங்கிறது வர்றவரை பிடிவாதம் பிடிப்பார். நினைச்சது வந்துடுச்சுனா அவரளவுக்கு யாராலும் பாராட்ட முடியாது. கூப்பிட்டுவெச்சு முத்தம் கொடுத்து, கட்டிப்பிடிச்சு, கைதட்டவெச்சுனு கொண்டாடிடுவார். அவர் ஒரு குழந்தை மாதிரிதான். 40 நாள் ஷூட் முடிஞ்சிருக்கு. இன்னும் 20 நாள் மீதி இருக்கு. என்னுடன், நித்யா மேனன், அதிதி ராவ்னு பவர் பெர்ஃபாமர்கள். இளையராஜா சார் மியூசிக்ல, பி.சி.சார் லைட்டிங்ல ஒரு பாட்டு ஷூட் பண்ணினோம். அதையெல்லாம் நம்பவே முடியலை. இதுக்கெல்லாம் காரணம் மிஷ்கின்தான். நான் இதுவரை பண்ணினது எல்லாமே யூ சர்டிஃபிகேட் படங்கள்தான். யூ/ஏ கூட கிடையாது. ஆனா, ``சைக்கோ’வை ஏ சர்ட்டிஃபிகேட்லதாம்பா எடுத்துக்கொடுக்க முடியும்னு மிஷ்கின் சார் ஆரம்பத்துலயே சொல்லிட்டார்.”

``நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.அதியமான் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்க. அந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?”

``சீனு ராமசாமி சார் சொல்லிதான் கே.எஸ்.அதியமான் சாரின் கதையைக் கேட்டேன்.  எனக்கு அவரின் படங்கள் ரொம்பப் பிடிக்கும். வேறமாதிரி ஒரு கதை சொல்லுவார்னு நினைச்சேன். ஆனா கதை சொல்ல ஆரம்பிச்ச 10வது நிமிஷத்துல என்னை ஆச்சர்யப்படுத்திட்டார். ஃபேன்டஸி கதை. சி.ஜி நிறைய இருக்கு. அவர் ரொம்ப நம்பிக்கையா இருக்கார். இந்தக் கதையில் பெரிய பயணம் இருக்கு. இதில் யோகிபாபு, பாயல் ராஜ்புத், கயல் ஆனந்தி நடிக்கிறாங்க. அடுத்து மு.மாறன் இயக்கும் படம். அவரின் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் பார்த்துட்டு, `நல்லாருக்கு’னு போன் பண்ணினேன். `என்கிட்ட இன்னொரு கதை இருக்கு கேக்குறீங்களா’ன்னார். `வாங்க’னேன். சொன்னார். இரவுக்கு ஆயிரம் கண்கள் மாதிரியே இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதை. படத்தின் பெயர் `கண்ணை நம்பாதே’. கொஞ்சம் அரசியல், நிறைய சஸ்பென்ஸ் இருக்கும். இந்தப் படங்களை முடிக்கவே நாலஞ்சு மாசங்கள் ஓடிடும். இதுக்கிடையில் கட்சி வேலைகள். பரபரப்பாதான் இருக்கு வாழ்க்கை.”

``கலைஞர் இறந்து 6 மாதங்கள் ஓடிடுச்சு. அவர் இல்லாத இந்த நாள்கள் எப்படி இருக்கு?”

``சமீபத்தில் செய்திகள் சேனல்ல கலைஞர் கடைசியா கொளத்தூர் பிரசாரக் கூட்டதில் பேசின வீடியோவை மறுஒளிபரப்பு பண்ணினாங்க. `இங்க ஸ்டாலின் வரலை. அவன் சார்பா நான் வந்திருக்கேன். என் சார்பா அவன் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டு இருக்கான். ஸ்டாலின்னா உழைப்பு, உழைப்பு, உழைப்பு’னு அவர் பேசின வீடியோவைப் பார்த்துட்டு அப்பா உட்பட எல்லோரும் கண் கலங்கிட்டோம். கலைஞர் இல்லைங்கிறதை எங்களால இன்னும் நம்பவே முடியலை. அவர் எங்ககூடவே  இருக்கார்னு நினைச்சுதான் வேலைகளை செஞ்சிட்டு இருக்கோம். அறிவாலயத்தில் அவரின் சிலை திறப்பு விழாவுல, `எல்லாரும் வந்திருக்காங்க. நீங்க எங்க போயிட்டீங்க தலைவரே’னு  அப்பா பேசும்போது கண் கலங்கிட்டேன்.

கூட்டம் முடிஞ்சதும் கட்சிக்காரங்க எல்லாரும், `அப்பாவோட ஸ்பீச் பயங்கர எமோஷனலா இருந்தது. அழுதுட்டோம்’னு சொன்னாங்க. தமிழகம் தழுவிய, தமிழர்கள் தழுவிய அந்தப் பிணைப்புதான் கலைஞரின் உழைப்புக்கான அடையாளம். எப்படியாவது அவரை காப்பாத்திட மாட்டோமானுதான் கடைசிவரை தவிச்சோம். ட்ரீட்மென்ட்னு அவரை ரொம்பவே துன்புறுத்துறோமோ என்ற எண்ணமும் இருந்தது. கடைசியில் எல்லாரையும் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டார். `தலைவருக்கு மருத்துவம் பார்த்தவங்க எல்லாரும் சேர்ந்து புகழஞ்சலி செலுத்துறாங்க. ஆனா இன்னோர் பக்கம் ஜெயலலிதா அம்மையாருக்கு மருத்துவம் பார்த்த எல்லாரும் தினமும் கமிஷன் முன் ஆஜராகிட்டு இருக்காங்க. அதுதான் தலைவரின் பெருமை’னு சில தலைவர்கள் சொன்னாங்க. இப்படி கலைஞரைப் பற்றி தினம் தினம் வெவ்வேறு இயக்கங்கள், அமைப்புகள் புகழஞ்சலி கூட்டங்கள் நடத்திகிட்டே இருக்காங்க. அதில் அவங்க பேசுற ஒவ்வொரு தகவலும் புதுசா இருக்கு. அப்படிப் பேசி முடியாத அளவுக்கு அவ்வளவு விஷயங்களை சாதிச்சிருக்கார், பலருடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கார்னு நித்தம் நித்தம் கலைஞரின் உழைப்பை நினைச்சு பிரமிச்சுட்டே இருக்கோம்.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு