Published:Updated:

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

Published:Updated:
வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வேலைக்கு ஓய்வு கொடுத்தாலும், மூளைக்கு ஓய்வு கொடுக்காத இந்தியக் காவல்துறை அதிகாரி ருத்ரனின் அமெரிக்க ஆட்டமே ‘வெள்ளைப்பூக்கள்.’

அமெரிக்க மண்ணில் அடுத்தடுத்து நடக்கும் ஆட்கடத்தல்களைத் துப்பறிய முயல்கிறார் ருத்ரன். ஒரு கட்டத்தில் அவர் குடும்பத்திலேயே ஒருவர் கடத்தப்பட, எல்லாக் கடத்தல்களுக்கும் உள்ள தொடர்புப்புள்ளிகளை இணைத்துக் குற்றவாளியை நெருங்கும்போது, ருத்ரனோடு நம்மையும் படபடக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்  விவேக் இளங்கோவன்.

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

அறிவும் அனுபவமும் கொண்ட மிடுக்கான காவல்துறை அதிகாரி ருத்ரனாக, விவேக். “ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை டெஸ்ட் மேட்ச் மாதிரிதான். ஆனால், அதிலும் ஃபோர், சிக்ஸ் அடிக்கலாம்” என்ற பட வசனதுக்கு ஏற்ப, இது அவரின் செகண்ட் இன்னிங்ஸ் செஞ்சுரி! சீரியஸ், காமெடி, சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் வெல்டன் சொல்ல வைக்கிறார். சார்லி, படத்தின் செகண்ட் ஹீரோ. ஆங்காங்கே அவர் அடிக்கும் கவுன்ட்டர்கள் எல்லாம் கன்ஃபார்ம் சிரிப்பு வெடி. ருத்ரனின் மருமகள் அலைஸாக, பெய்ஜ் ஆண்டர்சன். அவர் `அப்பா’ என்று அழைக்கும் போதெல்லாம்... ப்பா...  அழகு! விவேக்கின் மகன் தேவ், சார்லியின் மருமகள் பூஜா தேவரையா என்று அனைவருமே நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

த்ரில்லர் படங்களுக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் திரைக்கதை, சில நேரங்களில் சீட்டின் நுனியில் உட்காரவும், சில நேரங்களில் சீட்டில் சரிந்துவிழவும் வைக்கிறது. கடத்தல்களைக் கற்பனை செய்துபார்த்துக் கண்டுபிடிக்கும் விதம், ‘மைண்ட் ரூம்’ ஒன்றில் விக்டிம்களோடு அவர் உரையாடும் ‘ஷெர்லாக்’ ஸ்டைல் போன்ற காட்சியமைப்புகள்... வாவ்!

அமெரிக்க போலீஸ் செல்லும் க்ரைம் சீன்கள் அனைத்திற்கும் ருத்ரனும் செல்கிறார்; அவர்கள் பார்வையிலும்படுகிறார். ஆனால், `சும்மா வாக்கிங் வந்தேன்’ என ஒவ்வொரு முறையும் சமாளித்து `எஸ்கேப்’ ஆவதெல்லாம் ஃபாரின் உப்புமா. அந்தப் பூச்சிப்பல் வில்லன் வரும் காட்சிகள், கூச வைக்கும் அத்தியாயங்கள்! அந்த அடர்த்தி மற்ற காட்சிகளில் மிஸ் ஆகிப்போனது தான், படத்தின் மைனஸ். அந்த க்ளைமாக்ஸ் உண்மையிலேயே முரட்டு ட்விஸ்ட்! படத்தில் சொல்லியபடியே நிறைய ஸ்டீரியோடைப்களை உடைத்திருக்கிறார்கள். 12 வருட ஃப்ளாஷ் பேக்கையும் நிகழ்காலத்தையும் சரியாக மிக்ஸ் செய்த விதம் அட்டகாசம்.

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

ஒளிப்பதிவில் ஒருசில காட்சிகள் தவிர்த்து, மற்ற காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தொகுப்பில், ப்ரவீன்.கே.எல். தேவையான பர பரப்பைத் தந்திருக்கிறார். ராம்கோபால் க்ருஷ்ணராஜுவின் பின்னணி இசை படத்தின் பலம்.  தனியாளாக விவேக் ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க, அவ்வளவு பெரிய காவல்துறை என்ன செய்கிறது போன்ற லாஜிக் கேள்விகளும் எழாமலில்லை.

குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமை களை மையப்படுத்திக் கதை சொல்லியிருக்கும் இந்த `வெள்ளைப்பூக்கள்’, தொழில்நுட்ப ஏரியாவில் கொஞ்சம் தொய்வடைந்தாலும், எழுத்து, நடிப்பு, திரைக்கதை ஏரியாக்களில் பூத்துக்குலுங்குகிறது!

-விகடன் விமர்சனக்குழு