Published:Updated:

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

Published:Updated:
மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

“நான் - அவள் - இளையராஜா” எனும் உலகின் மிகச்சிறு காதல் கவிதையின் செல்லுலாய்டு வடிவம் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்.’

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

1992, `ராஜகீதம்’ என்ற பெயரில் கேசட் கடை நடத்திவருகிறான் நாயகன் ஜீவா. அந்த ஊரில் சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தியின் குடும்பம். மெஹந்தியைப் பார்த்த கணத்திலேயே ஜீவாவின் மனதுக்குள் ஆயிரம் வயலின்கள் இசைக்க ஒரு இளையராஜா பாடல். சில நாள்களிலேயே, அந்த வயலின்கள் மெஹந்தியின் மனதிலும் கச்சேரி நடத்த, காதலில் இருவரும் கரைகிறார்கள். சாதிதான் முக்கியம் என்று நினைக்கும் நாயகனின் அப்பா, காதலை ஏற்றுக்கொள்ளாத நாயகியின் தந்தை - இதற்கிடையில் காதல் என்ன ஆனது என்பதைப் புன்னகையும் கண்ணீருமாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

ஜீவாவாக, புதுமுகம் மாதம்பட்டி ரங்கராஜ். மோசம் என்று சொல்ல முடியாத நடிப்பு. மெஹந்தியாக, புதுமுகம் ஸ்வேதா த்ரிபாதி. கன்னம் குறைந்த பூனம் பாஜ்வா போலிருக்கிறார். சில காட்சிகளில் நன்றாக நடித்தி ருக்கிறார். கதாநாயகி கத்திக்குத்தில் தப்பிக்கும் சாகசத்தைவிடப் பெரிய சாகசம், ஆர்.ஜே.விக்னேஷ் ‘ஜோக்’ என்ற பெயரில் எய்யும் மொக்கைக் குத்துகளை நாம் தாங்கிக்கொள்வது.

பாதிரியாராக வேல.ராமமூர்த்தி, ஜாதி வெறியராக மாரிமுத்து, கத்தி வீசும் ஜாதவாக வரும் அங்கூர் விகால் ஆகியோர் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு கொடைக்கானல் பனியை நம் முகத்தில் அப்புகிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் இதம். ஆனால், பேக்ரவுண்ட் ஸ்கோரில் ஆங்காங்கே வரும் இளையராஜா அநாயாசமாக ஸ்கோர் செய்துவிடுகிறார். “இதயம், எனக்கும் உன் அளவுதான்” போன்ற சில வசனங்களில் கவர்கிறார் ராஜூமுருகன்.

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

ஒரு காதல் படத்தின் பின்னணியாக சர்க்கஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அந்த மக்களின் வாழ்க்கை நுட்பமாகப் பதிவு செய்யப்படவில்லை. படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே படம் எதை நோக்கி, எந்த வேகத்தில், எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறதெனத் தெரிந்துவிடுகிறது. முதல் பாதி ஈர்க்கத் தவறுகிறது. இரண்டாம் பாதியில்தான் படம் சில முக்கியமான தருணங்களைப் பதிவு செய்திருக்கிறது.

அழுத்தமான காட்சிகள் இல்லாததால் மெஹந்தி - ஜீவா காதல் நம்மை ஆழமாகவோ அழுத்தமாகவோ பாதிக்கவில்லை. இத்தனை குறைகளையும் தாண்டி சாதியத்துக்கு எதிராகக் காதலை முன்னிறுத்தும் அரசியல், படம் முழுக்க நம்மை நெகிழ்த்தும் இளையராஜா பாடல்களுக்காக இந்த சர்க்கஸுக்குக் கைதட்டலாம்.

- விகடன் விமர்சனக் குழு