பேயென்றாலே பயந்தோடும் ஹீரோ, பின் பேய்க்காகப் பழிவாங்கக் களமிறங்கும் அதே அதே அதே கதைதான் ‘காஞ்சனா 3.’ இம்முறை குப்பத்து மக்களுடனும், இன்டர்நேஷனல் பேயோட்டிகளுடனும் களமிறங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

பேய்க்கு பயப்படுவது, சத்தம் கேட்டால் யாருடைய இடுப்பிலாவது ஏறி அமர்வது, தனக்குள் பேய்வந்த பிறகு ‘தெரிஞ்சுடுச்சா’ எனக் கேட்பது... இப்படி டெம்ப்ளேட் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், லாரன்ஸ். ஃப்ளாஷ்பேக்கிலாவது மாடுலேஷன் மாற்றியிருக்கலாம். மூன்றாவது பாகம் என்பதால் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என மூன்று ஹீரோயின்கள். லாரன்ஸ் அவர்களின் இடுப்புகளில் குதித்து ஏறுகிறார்; பதிலுக்கு அவர்களும் லாரன்ஸ் இடுப்பில் ஏறி அமர்கிறார்கள். நாம் மட்டும் வேறு வழியில்லாமல் தியேட்டரில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறோம்.

படத்தில் கொஞ்சமாவது சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்திருப்பது கோவை சரளா - தேவதர்ஷினி - ஸ்ரீமன் காம்போ. இதற்கு முந்தைய பாகங்களில் பார்த்த அதே எனர்ஜெட்டிக் காமெடி. ரத்தம் அதிகம் தெறிக்கும் காட்சிகளின்போது, ‘குழந்தைங்க பார்க்கிறாங்கல்ல, காஸ்டியூம் சேஞ்ச்’ எனச் சொல்லும் லாரன்ஸ், ஏன் அவ்வளவு கிளாமர் காட்சிகளை அள்ளித் தெளித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. போக, என்னதான் மொத்தக் குடும்பமும் ஜாலி டைப் என்றாலும், குடும்பத்துக்குள்ளே என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் டூ மச்; த்ரீ மச். சில இடங்களில் இரட்டை அர்த்தம் என்றெல்லாம் இல்லாமல், நேரடி ஆபாச வசனங்கள் வேறு.

குப்பத்து மக்கள் நள்ளிரவில் சோற்றுக்கில்லாமல் கஷ்டப்படுவது மாதிரியான காட்சிகளையெல்லாம் நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும். அந்த மக்கள், ஆதரவற்றோரைவிடவும் ஆதரவற்ற நிலையில் படம் முழுதும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதையைப் போலவே, சண்டைக்காட்சிகளும் ஓவர் டோஸ். சூப்பர் ஹீரோ ஸ்டன்ட்டுகள், மேஜிக் என க்ளைமாக்ஸ் காட்சி வீடியோ கேமைப் போல் இருக்கிறது. ரூபனின் எடிட்டிங்கும், வெற்றி - சுஷிலின் ஒளிப்பதிவும் தேவைக்கேற்ப அமைந்திருக்கின்றன.

படத்தின் உச்சபட்ச திகில், க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்துகான அறிவுப்பு வரும்போது உண்டாகிறது. பாவம் சார் பேய்!

- விகடன் விமர்சனக் குழு