Published:Updated:

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”
பிரீமியம் ஸ்டோரி
“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

Published:Updated:
“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”
பிரீமியம் ஸ்டோரி
“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“ ‘சின்னதம்பி’ படத்துல கவுண்டமணி சார் கேரக்டர் மாதிரி, இந்தப் படத்துல ஹீரோ கேரக்டருக்கு ஆறு மணிக்குமேல கண் தெரியாது. அப்படிப் பார்வைச் சவால் உள்ள ஒருத்தனுக்குக் காதல் வந்தா என்ன நடக்கும்னு ஜாலியா சொல்றதுதான் ‘சிக்ஸர்!” - வெறும் கைகளால் பேட்டைச் சுழற்றுவது போன்ற பாவனையுடன் பேசுகிறார் வைபவ்.

“ஸ்போர்ட்ஸ் பட டைட்டிலா இருக்கே?!”

“இல்லை, இது ஒரு ரொமான்டிக் காமெடிப் படம்னு சொல்லலாம். டபுள் மீனிங் காமெடி, விரசமான காட்சிகள் எதுவும் இல்லாத க்ளீன் காமெடிப் படமா ‘சிக்ஸர்’ இருக்கும். ஹீரோயினா பாலக் லால்வாணி நடிச்சிருக்காங்க. காமெடிக்கு சதீஷ் இருக்கார். முதல் முறையா ஜிப்ரான் மியூசிக்ல நான் நடிச்சிருக்கேன். இயக்குநர் சாச்சி புதுமுகம்.”

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“நிறைய புது இயக்குநர்கள்கூட படம் பண்ண என்ன காரணம்?”

“பெரிய இயக்குநர்கள் யாரும் கூப்பிடுறதில்லை, அதுதான் காரணம். நிறைய புது இயக்குநர்கள் நல்ல கதைகளை வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்ட இருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நான் நடிச்சுக்கிட்டிருக்கேன். இதுவே கொஞ்சம் ஸ்லோதான். இதே ஸ்லோவுல போனா, சீக்கிரமே வயசாகி இன்டர்ஸ்ட்ரியில இருந்தே காணாமப் போயிடு வோம்னு இப்போ வேகத்தைக் கூட்டி யிருக்கேன். இந்த வருடம் ‘ஆர்.கே.நகர்’, ‘காட்டேரி’, ‘சிக்ஸர்’, ‘டாணா’ன்னு வரிசையா என் படங்கள் ரிலீஸாகப்போகுது. தவிர, நிதின் சத்யா தயாரிப்புல பிரபு சார்லஸ் இயக்குற ஒரு படத்துல வாணி போஜன், வெங்கட் பிரபுகூட நடிச்சி ருக்கேன்.”

“வெங்கட் பிரபு குரூப்பில் நீங்க ஸ்பெஷல்தானே?”

“வெங்கட் பிரபுவும், நானும் புருஷன் - பொண்டாட்டி மாதிரி. அப்பப்போ சண்டை போட்டுக்குவோம், அப்புறமா சேர்ந்துக்குவோம். சின்ன வயசுல இருந்தே ஃபிரெண்ட்ஸ். அவர்தான் என்னை ‘மங்காத்தா’வுல பதிய வெச்சார். இல்லைன்னா, மக்களுக்குத் தெரியாம நான் எப்பவோ காலி ஆகியிருப்பேன்.”

“பிரேம் ஜி-க்கு எப்போதான் கல்யாணம்?” 

“பொண்ணு பார்த்துக்கிட்டே இருக்காங்க. நம்மாளுதான் அதுல இன்ட்ரஸ்ட்டே காட்ட மாட்டேங்கிறான். சத்தியம் பண்ணிச் சொல்றேன், சீக்கிரமா அவனுக்குக் கல்யாணம் நடக்கும்.”  

“வெங்கட் பிரபு டீம்ல சிவா, ஜெய், வைபவ் தவிர வேற யாரும் ஹீரோவா டிராவல் ஆகலையே ஏன்?”

“அமைய வேண்டியது, சரியா அமையல. இதோ, நிதின் சத்யா முழுநேர தயாரிப்பாளர் ஆகிட்டார். அஜய் டான்ஸ் மாஸ்டரா இருக்காப்ல. அரவிந்த் ஆகாஷ் சீரியல், சினிமான்னு ரெண்டும் பண்றான். விஜய் வசந்த் ஆசைக்காக சினிமாவுல நடிக்கிறார், பிசினஸைப் பார்த்துக்கவே அவருக்கு நேரம் சரியா இருக்கு.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“அரசியல் படத்துல நடிச்சுட்டீங்க. அரசியல் என்ட்ரி ஐடியாவும் இருக்கா?”

“அட ஏங்க நீங்க வேற... போன எலக்‌ஷன்ல என் ஓட்டை வேற யாரோ ஒருத்தன் போட்டுட்டுப் போயிட்டான். எனக்குப் பதிலா லிஸ்ட்ல வேற யாரோட போட்டோவோ இருந்துச்சு. யாருன்னு கேட்டதுக்கு எந்தப் பதிலும் இல்லை. இதை எங்கே போய்க் கேட்கிறது, மாத்து றதுன்னுகூட எனக்குத் தெரியல. இந்த அளவுக்குத்தான் இருக்கு என் அரசியல் அறிவு.”

“வெங்கட் பிரபு படங்கள்ல ஓகே...  ‘பேட்ட’ படத்துல கேமியோ ரோல் பண்ணீங்களே எப்படி?”

 “ரஜினி சார்கூட நடிக்கணும்னு ரொம்பநாள் ஆசை. ரஞ்சித்கிட்ட கேட்டிருந்தேன். அப்புறம் கார்த்திக் சுப்புராஜை டார்ச்சர் பண்ணினேன். ‘ஒரு பாட்டு சீன்ல நடிச்சுட்டுப் போயிடுங்க’ன்னு கூப்பிட்டார். இதுல என்னைவிட சூப்பர் ஸ்டாருக்குத்தான் செம ஷாக். ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னுக்கிட்டிருந்த என்னைப் பார்த்து, ‘வாங்க வைபவ்... என்ன இந்தப் பக்கம்’னு கூப்பிட்டுப் பேசினார், ரஜினி சார். ‘நானும் இந்தப் படத்துல நடிக்கிறேன்’னு சொன்னதும், ‘நமக்குத் தெரியாம என்ன கேரக்டர்’னு ஷாக் ஆகிட்டார். ஷூட்டிங் நடந்தப்போ, ‘பக்கத்துல நில்லுங்க. இல்லைனா, எடிட்ல தூக்கிடுவாங்க’ன்னு சிரிச்சார் ரஜினி சார். அந்த மொமென்ட் செமயா இருந்துச்சு!”
 

- அலாவுதின் ஹுசைன்