“நான் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருசம் ஆகிடுச்சு. திருவான்மியூர் கலாஷேத்ராவுல பரதநாட்டிய க்ளாஸுக்குப் போயிட்டிருந்த சமயம், அங்கே என்னைப் பார்த்த டி.ஆர்.சாரும், உஷா மேடமும் என் வீட்டைக் கண்டுபிடிச்சுத் தேடி வந்து, ‘மைதிலி என்னைக் காதலி’ படத்துல நடிக்கக் கேட்டாங்க. ‘பரதநாட்டியம் தெரிஞ்ச பொண்ணுதான் ஹீரோயினா வேணும். ரெண்டு மாசம் கால்ஷீட்’னு சொன்னாங்க. விடுமுறை நாள்ல ஷூட்டிங் இருந்தது. அதனால ஓகே சொன்னேன், நடிச்சேன், படம் ரிலீஸாகி பெரிய ஹிட் ஆச்சு. இப்போ திரும்பிப் பார்த்தா, பல படத்துல நடிச்சுட்டேன். திருமணம் முடிஞ்சது. வாழ்க்கை சந்தோஷமா போகுது. சமீபத்துல டி.ஆர்.சார், குறளரசன் திருமணப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தார், பழைய நினைவுகளையெல்லாம் சந்தோஷமா பேசிப் பகிர்ந்துக்கிட்டோம்.” - அத்தனை சந்தோஷமாகப் பேசும் அமலாவின் வார்த்தைகளில் அழகான தமிழ். தற்போது, நடிகர் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘ஹை ப்ரிஸ்டெஸ் (High Priestess)’ என்ற வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்திருக்கும் அமலாவிடம் பேசினேன்.

“சீரியலுக்குப் பிறகு, சிறிய இடைவெளி. இப்போ வெப் சீரிஸ்ல களமிறங்கியிருக்கீங்க?”

“என் தோழிகளில் ஒருத்தி, புஷ்பா இக்னேஷியஸ். ரொம்பத் திறமைசாலி. விளம்பரப் பட இயக்குநர். ‘எப்போ படம் பண்ணப்போறேன்’னு கேட்டப்போ, ‘வெப் சீரிஸுக்குக் கதை எழுதிக்கிட்டிருக்கேன். முடிச்சுட்டு உன்கிட்டதான் வருவேன். நீதான் நடிக்கணும்’னு சொல்லிக்கிட்டிருந்தா. சும்மா காமெடி பண்றானு நினைச்சு விட்டுட்டேன். ஆனா, சொன்ன மாதிரியே ‘High Priestess’ கதையை முடிச்சதும் என்கிட்ட வந்துட்டா. இந்தக் கதைக்காக நிறைய மெனக்கெட்டிருக்கான்னு படிச்சப்போ தெரிஞ்சது. புஷ்பாவுக்கு சூப்பர் நேச்சுரல்ஸ் மேல நம்பிக்கை அதிகம். `டேரட் கார்டு (tarot card)’ விஷயத்தை மையப்படுத்தி இந்தக் கதையை எழுதியிருக்கா. இந்த ஸ்கிரிப்ட்மேல எனக்கும் நம்பிக்கை அதிகமா இருந்தது, ரொம்ப சுவாரஸ்யமாவும் இருந்தது. அதனால, ஓகே சொல்லிட்டேன். இந்த சீரிஸ்ல நான் டேரட் கார்டை ரீடு பண்ற ஆளா நடிச்சிருக்கேன்.”

“சினிமாப் பின்னணியுள்ள குடும்பம் உங்களோடது. வெப் சீரிஸ்ல நடிக்கிறதுக்கு என்ன சொன்னாங்க?”

“என் குடும்பத்துல யாரும் வெப் சீரிஸ்ல நடிச்சதில்லை. நான்தான் முதல்முறையா என்ட்ரி கொடுக்கிறேன். கணவர் நாகார்ஜுனா என்னை வாழ்த்தி அனுப்பினார். தவிர, எங்க ஃபேமிலியில எல்லோரும் பிஸியா இருக்கிறதுனால, ஒண்ணா சேர்ந்து பேசுற நேரமும் குறைவு. அப்படியே நேரம் கிடைச்சாலும், அதிகமா சினிமா பற்றிப் பேசிக்கமாட்டோம். நாகார்ஜுனா எனக்கு எப்போவுமே சப்போர்ட். இந்த வெப் சீரிஸ் ஷூட்டிங் சென்னையில 15 நாள்கள் நடந்தது. அப்போ வீட்டைப் பொறுப்பா பார்த்துக்கிட்டார். முக்கியமா, உடம்புக்கு முடியாத எங்க அம்மாவை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டார்.”

“சமந்தா என்ன சொன்னாங்க?”

“ரிலீஸான வெப் சீரிஸின் டீஸரை சமந்தாவும், நாகர்ஜுனாவும் அவங்க ட்விட்டர்ல ஷேர் பண்ணியிருந்தாங்க. இந்த வெப் சீரிஸைப் பார்க்கிறதுக்காக ரொம்ப ஆர்வமாவும் இருக்காங்க.”

“தமிழ் சினிமாவுல உங்களைப் பார்த்துப் பல வருடம் ஆகிடுச்சு. ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?”

“காரணம் எதுவும் இல்லை. வருடத்துக்கு ஒரு படமாவது தெலுங்கு, இந்தி, மலையாளம்னு நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தமிழ் சினிமா வாய்ப்பு அமையலை, அவ்ளோதான்.”

“தமிழ் சினிமாக்கள் பார்க்குறீங்களா?”

“என் ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் சென்னையிலதான் இருக்காங்க. எங்களுக்குன்னு தனியா ஒரு வாட்ஸப் குரூப் இருக்கு. தமிழ்நாட்டுல நடக்குற முக்கியமான செய்திகள், தமிழ் சினிமாக்கள் பற்றியெல்லாம் அதுமூலமா தெரிஞ்சுக்குவேன். தவிர, நானும் அடிக்கடி சென்னைக்கு வந்துக்கிட்டு தானே இருக்கேன். வர்றப்போ எல்லாம் தமிழ் படங்களைப் பார்ப்பேன். சமந்தா நடிச்ச ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்க்கணும்னு நினைச்சேன், இன்னும் பார்க்கல. சீக்கிரமே பார்த்திடுவேன்.”

“உங்க ஃபிட்னஸ் ரகசியம்?”

“வீட்டுல இருக்கிற எல்லோருமே ஃபிட்னஸ்ல ஆர்வமா இருப்போம். ஃபிட்னஸ் ப்ரீக்னே சொல்லலாம். நான் அசைவம் சாப்பிட மாட்டேன். ஒன்லி வெஜ். பல வருடமா வீகன் டயட் ஃபாலோ பண்றேன். பால் உணவுகளை முடிஞ்ச ளவுக்குத் தவிர்ப்பேன்.”

“குடும்பம் பற்றிச் சொல்லுங்க?”

“நாக சைதன்யா ரொம்ப ரெஸ்பான்ஸான பையன். எல்லா விஷயத்திலும் சரியா இருப்பார். ஸ்கூல் படிப்பை முடிக்கிறவரை சென்னையில தான் வளர்ந்தார். அவங்க அம்மா அவரை ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க. காலேஜ் படிக்கிறப்போதான் இங்கே வந்தார். ரொம்ப ஸ்வீட். நல்லா நடிக்கிறார். குடும்பத்தை அழகா, சந்தோஷமா பார்த்துக்கிறார். நாக சைதன்யா - சமந்தாவைப் பார்த்து நானும் சந்தோஷப்படு றேன். இன்னொரு பையன் அகில் ஆஸ்திரேலியா, யு.எஸ்ல படிச்சு முடிச்சார். அவருக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சினிமாவையும் காதலிக்கிறார்.”

- சனா