Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகச் சொல்லியும் தனது கொள்கைக்கு எதிராக இருப்பதால் நடிக்க மாட்டேன் என அழகு சாதன க்ரீம் விளம்பரம் ஒன்றைத் தவிர்த்துள்ளார் சாய் பல்லவி. டோலிவுட்டில் ‘நக்ஸல்’ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் ராணா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நக்ஸல்பேபி!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பாலிவுட்டில் தனக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார் டாப்ஸி. சமீபத்தில் அமிதாப் பச்சன் - டாப்ஸி நடித்த ‘பத்லா’ திரைப்படம்  வெற்றியடைந்ததையடுத்து டாப்ஸிக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது தமிழில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து ‘சாந்த் கி ஆன்ங்க்’ திரைப்படத்தில் 60 வயது துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துவருகிறார் டாப்ஸி. யாத்தே யாத்தே!

இன்பாக்ஸ்

• தமிழ் சினிமாவில் மீண்டும் தன்னை நிலைநிறுத்த ரெடியாகிறார் ஸ்ருதி ஹாசன். எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான ஆறுமுகக்குமார் தயாரிக்கும் அந்தப் படத்துக்கான போட்டோஷூட் அண்மையில் நடந்திருக்கிறது. நீங்க எதை உடைச்சீங்க ஸ்ருதி?

இன்பாக்ஸ்

• ஷங்கர், ராஜமௌலி என பிரமாண்ட இயக்குநர்களின் நாயகியாக நடித்தவர்  ஜெனிலியா. பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்ததற்குப் பிறகு நடிப்பைக் கைவிட்டார். தற்போது, கணவர் ரிதேஷுடன் நடிப்பதற்காக கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து வருகிறாராம் ஜெனிலியா. வந்தா ஜோடியாத்தான் வருவோம்!

இன்பாக்ஸ்

• டைகர் வுட்ஸ், கோல்ஃப் விளையாட்டின் GOAT பிளேயர்களில் ஒருவர். 2005-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பெரிய  டோர்னமென்ட்டில் கூட வெற்றியில்லாமல் பழைய பெருமைகளால்  ஞாபகப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தவர் 14 ஆண்டுகள் கழித்து மாஸ்டர்ஸ் டோர்னமென்ட்டை வென்றுள்ளார். காயங்கள், வழக்குகள், அறுவை சிகிச்சை என அடுத்தடுத்த பிரச்னைகளைச் சந்தித்த டைகர் வுட்ஸின் வெற்றியை முகமது அலிக்குப் பிறகு ஸ்போர்ட்ஸ் உலகின் சிறந்த கம்பேக் இதுதான் என ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிகிறார்கள். Well கம்பேக்!

இன்பாக்ஸ்

• ட்விட்டர், பிளாக் என்று அடிக்கடி தன் கருத்துகளை இணையவெளியில் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு எப்போதும் மக்களோடு தொடர்பிலேயே இருக்கிறார் அமிதாப். சமீபத்தில் அவர் எழுதிய வலைப்பதிவு ஒன்றில் நம்ம பாக்யராஜுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்திய சினிமாவில் திரைக்கதை ஜாம்பவானாகத் திகழும் பாக்யராஜ், நடிகர் மற்றும் இயக்குநராகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததற்குத்தான் அந்த வாழ்த்து! பாக்யராஜ் இயக்கத்தில், அமிதாப் நடித்த  ‘ஆக்ரீ ராஸ்தா’ படத்தையும் அவர் நினைவு கூர்ந்திருந்தார். இதையடுத்து ‘பாக்யராஜ் 40’ விழா எடுக்க பலரும் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு வருகிறார்கள். சந்தோஷமான சமாசாரம்!

• 60  வயதான மடோனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது புதிய ஆல்பத்தினை உருவாக்கிவருகிறார்.  மதாம் எக்ஸ் ( Madame X) என்ற அந்த ஆல்பத்தின் டீசரை சில தினங்களுக்குமுன் வெளியிட்டார். அதைப் பார்த்து மெர்சலான அவரின் ரசிகர்களுக்கு சிங்கிள் ட்ராக் ஒன்றையும் வெளியிட்டு திக்குமுக்காடச் செய்துள்ளார் மடோனா. நான்கு வருடத்துக்குப் பிறகு வெளிவரும் மடோனாவின் ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சிக்ஸ்டி சிக்ஸர்! 

இன்பாக்ஸ்

• தனது வித்தியாசமான ஆல்பங்கள் மூலம் ‘ராப்’ ரசிகர்களைத் தன் வசப்படுத்தியவர் லில் டிக்கி. பூமியின் சுற்றுச்சூழல் குறித்து அவர் வெளியிட்ட ‘எர்த்’ ஆல்பத்திற்குப் பல திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. முழுக்க அனிமேஷனில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்தை லியானார்டோ டி காப்ரியோ உச்சிமோந்து பாராட்டியுள்ளார். உலகமெங்கும் சுற்றுச்சூழல் குறித்துப் பல கலைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது லில் டிக்கியும் இடம்பிடித்துவிட்டார்.குரல் கொடுப்போம்!

இன்பாக்ஸ்

• ரத்தம் தெறிக்க, தோட்டாக்கள் பறக்க ஹாலிவுட்டின் அல்லு அர்ஜுனாக வாழும் கீனு ரீவ்ஸ் பயங்கரமான பைக் பிரியர். ஆர்ச் மோட்டார்ஸ் என்ற பைக் மாடிஃபை நிறுவனத்தையும் இவர் நடத்திவருகிறார். இவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மெத்தட் 143’ பைக்கை இப்போது விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறார். கார்பன் ஃபைபர், அலுமினியம், லெதர் என மூன்று பொருள்களால் உருவாகியிருக்கும் இந்த பைக்கின் விலை ரூ.70 லட்சம் இருக்கும். உலகிலேயே மொத்தம் 23 பைக்கை மட்டும்தான் உருவாக்குகிறார்களாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

• ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ நாயகி தபு சமீபத்தில் நடித்து ஹிட்டடித்த ‘அந்தாதுன்’, அடுத்தடுத்த வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. பத்தாண்டுகள் கழித்து தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழுக்கும் வாங்க தபு!