Published:Updated:

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

Published:Updated:
“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“ ‘டிமான்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’னு நிறைய த்ரில்லர் கதைகள்ல நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தின் முதல் ரெண்டு காட்சியை பரத் என்கிட்ட சொல்லும்போதே, சம்திங் ஸ்பெஷல்னு தோணுச்சு. கதையைக் கேட்க ஆரம்பிச்சதுல இருந்து, கடைசி வரைக்கும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் அப்படியே இருந்துச்சு. அந்த ஃபீலிங் ஆடியன்ஸுக்கும் கிடைக்கும்னு நம்புறேன்” நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார் அருள்நிதி.

“ ‘K 13’ என்ன கதை?”

“த்ரில்லர் படங்களில் நடிக்கிறதைவிட அதைப் பற்றிப் பேட்டி கொடுக்கிறதுதான் சிரமமா இருக்கு. ஏன்னா, படத்தோட கதை பற்றி டீட்டெயிலா சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா, ட்விஸ்ட் தெரிஞ்சு படம் பார்க்கும்போது சுவாரஸ்யமில்லாமப்போயிடும். ‘K 13’ ஒரு அபார்ட்மென்ட்ல நடக்கிற கதை. ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ரெண்டு படத்திலேயும் ‘யார் அந்தக் கொலையைப் பண்ணியிருப்பாங்க’ங்கிறதுதான் விஷயம். ஆனா, திரைக்கதை வித்தியாசமா இருக்கும். சிம்பிளா சொன்னா, இந்தப் படம் வழக்கத்திற்கு மாறான சைக்கலாஜிகல் த்ரில்லர் கதை. ஒரு அப்பார்ட்மென்ட்தான் ஷூட்டிங் ஸ்பாட். வசனங்களும் ரொம்பக் கம்மி. அதனால, 27 நாள்ல மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிஞ்சிடுச்சு.”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி... ரெண்டு ஹீரோயின்கள் பற்றி...?”

“இயக்குநர் பரத் சீன் சொல்லும்போதே ஷ்ரத்தா அந்தக் கேரக்டரா மாறிடுவாங்க, எந்தக் காட்சியா இருந்தாலும் ரெண்டே டேக்ல ஓகே பண்ணிடுவாங்க. காயத்ரியும் ஸ்பாட்ல பாசிட்டிவ் எனர்ஜிதான். படத்துல ரெண்டுபேருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கும்.”

“உங்களை இயக்கிய மாறன் இப்போ உதயநிதியை இயக்குகிறார். உதயநிதியை இயக்கிய சீனு ராமசாமி இப்போ உங்களை இயக்கப்போறார். ஏற்கெனவே திட்டமிட்டதா?”

“தெரிஞ்சோ, தெரியாமலோ இப்படி ஒரு சூழல். ‘மெளனகுரு’ படம் முடிஞ்ச சமயத்திலேயே சீனு ராமசாமி சாரும் நானும் சேர்ந்து படம் பண்ணியிருக்க வேண்டியது. அப்படியே தள்ளிப்போய், இப்போதான் நிகழ்ந்திருக்கு. சமீபத்துலதான் ஒருநாள் போன் பண்ணி ‘இப்போ உனக்கு ஏற்ற மாதிரி சூப்பரா ஒரு கதை இருக்கு’ன்னு சொன்னார். கேட்டேன், ரொம்பப் பிடிச்சிருந்தது. ஜூன்ல ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்கோம். சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜான்னு புது காம்பினேஷன்ல வொர்க் பண்ணப்போறது ரொம்பவே சந்தோஷம். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின்போதே, ‘இதுக்கு முன்னாடி வேற ஒரு கதை வெச்சிருந்தேன். அதை உங்க அண்ணன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணினேன்’னு சொல்லியிருந்தார், மாறன்.  அப்படி அவர்கிட்ட கதை சொல்லி ஓகே ஆனதுதான், ‘கண்ணை நம்பாதே’ படம். இது யதார்த்தமா நடந்ததுதான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“ கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடித்த அனுபவம்?”

“இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்லதான் மகேந்திரன் சாரை முதல் முதல்ல பார்த்தேன். அவர் கார்ல கூலிங் கிளாஸ் போட்டு வரும்போது, அப்படியே ரஜினி சாரைப் பார்க்கிற மாதிரி இருக்கும். அவர் நடை, பேச்சு, குரல் எல்லாமே செம ஸ்டைல். எல்லோரையும் ’மிஸ்டர்’னு சொல்லித்தான் கூப்பிடுவார். ’மிஸ்டர் அருள்’னு அவர் கூப்பிடுறதே அவ்ளோ அழகா, கம்பீரமா இருக்கும். ’மிஸ்டர் அருள், நீங்க இந்தப் படம் பார்த்திருக்கீங்களா... மிஸ் பண்ணாம பாருங்க’ன்னு மத்த மொழிப் படங்களைப் பத்தி என்கிட்ட நிறைய பேசுவார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்பவே சாருக்கு உடம்புக்கு முடியாமப்போச்சு. ஐ.சி.யூ-ல இருந்தப்போகூட, ‘மிஸ்டர் கரு.பழனியப்பன், நாளைக்கு ஷூட்டிங் போலாமா?’ன்னு கேட்டப்போ, நான் அசந்துட்டேன். இப்படியான ஒரு லெஜென்ட்கூட நான் நடிச்சது என் பாக்கியம்.”

“நடந்து முடிந்த தேர்தல்ல திருவாரூர்த் தொகுதியில மட்டும் பிரசாரம் செய்தீங்களே?!”
 
“ஆமா. தாத்தா ஊராச்சே... அதனால அங்கே பிரசாரம் பண்ணினேன். காலேஜ்ல படிக்கும்போதே அப்பாகூட போய் தாத்தா நின்ன சேப்பாக்கம் தொகுதிக்குப் பிரசாரம் பண்ணியிருக்கேன். அப்போ நான் நடிகர் கிடையாது. அதனால வெளியே தெரியல. 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் திருவாரூருக்குப் போயிருந்தேன். எனக்கு மட்டுமல்ல, எங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் திருவாரூர் எப்போவும் ஸ்பெஷல்தான். அண்ணன் உதயநிதியும் தீவிரமா பிரசாரம் பண்ணினார். ஏழெட்டு வருடமா கோடிக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கஷ்டப்பட்டுட்டிருக்காங்க. அவங்களுக்காகவும், தாத்தாவுக்காகவும் இந்தமுறை தி.மு.க ஜெயிக்கும், ஜெயிப்போம்.”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“டூயல் ஹீரோ கதையில் ஜீவாவுடன் நடித்த அனுபவம்?”

“ஜீவாதான் ‘இப்படி ஒரு கதை இருக்கு. கேட்டுப் பாருங்க’ன்னு சொன்னார். அப்படித்தான் இயக்குநர் ராஜசேகரை சந்திச்சுக் கதை கேட்டேன். ரெண்டு நண்பர்கள் பற்றிய கதை. நானும், ஜீவாவும் கபடி வீரர்களா நடிச்சிருக்கோம். டைரக்டரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கபடி பிளேயர்ஸ். அவங்கதான் எனக்கும் ஜீவாவுக்கும் கபடி சொல்லிக் கொடுத்தாங்க. தவிர, இயக்குநரோட ரெண்டு நண்பர்களோட கேரக்டர்தான் எனக்கும் ஜீவாவுக்கும்! ‘தளபதி’ தினேஷ் மாஸ்டருடைய பையன் பிரதீப் ஸ்டன்ட் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கார். அவர்கூட இருந்த ராஜேஷ், அருண் ரெண்டுபேரும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருந்தாங்க. ஜீவாகூட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம்.”

“கொஞ்சம் ஜாலியாகவும் நடிக்கணும்!”

“போலீஸ் கதை, த்ரில்லர், ஹாரர், ஸ்போர்ட்ஸ் படம்னு வெரைட்டி காட்டிக்கிட்டிருக்கீங்க. அடுத்து என்ன ப்ளான்?”

“வித்தியாசமா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். முக்கியமா, அடுத்த படம் த்ரில்லர் ஜானரா இல்லாம பார்த்துக்கணும். ஏன் சொல்றேன்னா, அப்போ இருந்து இப்போ வரைக்கும் கோபாலபுரத்துலதான் ஓட்டு போட்டுக்கிட்டிருக்கேன். இந்த முறை ஓட்டுபோட வரிசையில நின்னுக்கிட்டிருந்தப்போ ஒரு பாட்டி, ‘அருளு... நீ ஏன்பா எப்போவும் சீரியஸாவே நடிக்கிறே, கொஞ்சம் ஜாலியா  நடி’ன்னு சொன்னாங்க. அவங்க கமென்ட் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. நானும் ஜீவாவும் சேர்ந்து நடிக்கிற படம் அவங்க எதிர்பார்த்த மாதிரி ஜாலியா இருக்கும்.”

- உ.சுதர்சன் காந்தி

மார்க் தெரிஞ்சாச்சா, மதுரைக்கு வாங்க!

ப்
ளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. அடுத்து என்ன கோர்ஸ் பண்ணலாம்? ஆயிரம் கேள்விகள் எழுமே! உங்களுக்காகவே சவீதா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் வழங்கும் ‘ஆனந்த விகடன் என்ன மார்க்ஸ், என்ன கோர்ஸ்? - கல்வி வேலைவாய்ப்புக் கண்காட்சி’ ஏப்ரல் 27-28, மதுரை, தல்லாகுளம், லஷ்மி சுந்தரம் ஹாலில் நடைபெறுகிறது. ஆர்வத்துடன் வாருங்கள். அனுமதி இலவசம்!

கல்விக் கருத்தரங்கில் பங்கேற்க உங்கள் பெயர் மற்றும் முகவரியை 97909 90404 என்ற எண்ணில் பதிவு செய்யவும்.