Published:Updated:

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

Published:Updated:
ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ங்கர் வருகைக்கு முன், ஷங்கர் வருகைக்குப் பின் என தமிழ் சினிமாவைப் பிரிக்கலாம். அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை இயக்குநர்கள் புடைசூழக் கொண்டாடித் தீர்த்திருக்கி றார்கள்.

இந்த ‘ஷங்கர் 25’ விழாவுக்குக் கேப்டன் மிஷ்கின். இவருடன் லிங்குசாமியும், பாலாஜி சக்திவேலும் கைகோக்க, இந்த நிகழ்வு நெகிழ்வும் மகிழ்வுமாக நடந்து முடிந்திருக்கிறது. அந்தத் தருணங்கள் குறித்து, கலந்துகொண்ட இயக்குநர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.  

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

பாலாஜி சக்திவேல்

“ஷ
ங்கர் சாருக்கு இப்படியொரு நிகழ்வை நடத்தலாம்னு முதலில் மிஷ்கின் சாருக்குத் தோன்றி யிருக்கு. உடனே லிங்குசாமி யிடம் பேசியிருக் கார். லிங்கு என்கிட்ட அதைப் பற்றிச் சொன்னார். ‘நல்லா பண்ணலாம் லிங்கு’ன்னு சொன்னேன். பிறகு நான், லிங்கு, மிஷ்கின் மூணுபேரும் கூடி விவாதித்தோம். மிஷ்கினின் திட்டமிடல் எங்களுக்குத் திருப்தியா இருந்தது. பதினைஞ்சு நாள்ல இதை பிளான் பண்ணி ஏப்ரல் 20-ஆம் தேதி நடத்தி முடிச்சோம். 

வெற்றி மாறனின் ‘விசாரணை’ ரிலீஸானப்போ இதேமாதிரி இயக்குநர்கள் கூடினோம். மிஷ்கின் ஆபீஸ்ல ஒரு சின்ன இடத்துல எல்லோரும் நெருக்கமா உட்கார்ந்து பேசி, பல விஷயங் களைப் பகிர்ந்துகிட்டோம். அதேமாதிரி, ‘ஷங்கர் 25’ நிகழ்வும் நடந்து முடிஞ்சிருக்கு. இரவு நிகழ்வாகத்தான் இது நடந்தது. எல்லோரும் பாட்டுப் பாடினோம். சிரிச்சுப் பேசினோம். டான்ஸ் ஆடினோம். எல்லா இயக்குநர்களும் ஸ்கூல் பசங்கமாதிரி ஆடிப்பாடி இந்த நிகழ்வை என்ஜாய் பண்ணினோம்னே சொல்லலாம். ஷங்கர் சார் அவருடைய மேக்கிங் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகிட்டார். மணிரத்னம் சார் நிறைய பேசினார். அவர் இந்தளவுக்குப் பேசுவார்னு இந்த நிகழ்ச்சியிலதான் தெரிஞ்சுகிட்டேன். மிஷ்கினின் உதவி இயக்குநர்களா இருக்கிற சில பெண்கள் சேர்ந்து பாட்டு பாடினாங்க. மிஷ்கின் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களும் இதுல கலந்துகிட்டாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் சாப்பாடு பரிமாறி, சந்தோஷமா அந்தப் பொழுதைக் கழிச்சோம்.

முக்கியமா, விழா முடிஞ்சதுக்குப் பிறகு டைரக்டர் சார் (ஷங்கர்) எனக்குப் போன் பண்ணி நெகிழ்ந்து பேசினார். ஏற்கெனவே உதவி இயக்குநர்கள் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தி முடிச்சோம். அந்த நிகழ்வு ஒரு மாதிரின்னா, இது வேற மாதிரியான நெகிழ்வான நிகழ்வா அமைஞ்சது. ஷங்கர் சார்கிட்ட இதைப்பத்தி முதல்ல பேசினப்போ, வரக் கூச்சப்பட்டார். ‘கெட் டூ கெதர் மாதிரியான நிகழ்வுதான் சார்’னு அவர்கிட்ட சொன்னோம். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ரொம்பவே சந்தோஷமாகிட்டார்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

மிஷ்கின்

“ஷ
ங்கர் சாரைப் பக்கத்தில் இருந்து பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கலை. ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தா, கட்டியணைத்துப் பாராட்டுவார்.  இப்படித்தான் எங்களுடைய உறவு இருந்தது.

வெற்றி மாறனின் ‘விசாரணை’க்காக இயக்குநர்கள் எல்லோரும் என் ஆபீஸ்ல கூடும்போதுதான், அவரைப் பக்கத்தில் பார்த்து நிறைய பேசினேன். தம்பி மாதிரி பாவிச்சுப் பேசினார். ஷங்கர் ஒரு தாய்மை உள்ளம்கொண்ட மனிதர்னுகூடச் சொல்லலாம். நாங்க எல்லோரும் ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் படம் பண்ற இயக்குநர்களா இருக்கலாம். ஆனா, போய்ச் சேரும் இடம் ஒண்ணுதான். ஒரு பார்வையாளனுக்கு மிகச்சிறந்த கதையை சுவாரஸ்யமா சொல்லத்தான் எல்லோரும் நினைக்கிறோம். இதை ஷங்கர் சார் 25 வருடமா திறம்படப் பண்ணிக்கிட்டிருக்கார். இது ஒரு இமாலய சாதனைன்னுதான் சொல்லணும். அவருடைய இந்த உயரத்துக்குக் காரணம், அவருடைய உழைப்பு. அந்த உழைப்பாளிக்கு சக தொழிலாளிகளா நாங்க இந்த விழாவை எடுத்திருக்கோம்.

ஷங்கர் சாருக்காக நானொரு பாட்டு எழுதி கம்போஸ் பண்ணிப் பாடினேன். அவருடைய படங்களில் இடம்பெற்ற மெலடி பாடல்கள், இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பாடினோம். சுருக்கமா சொன்னா, அவருக்காக ஒரு கச்சேரியே நடத்தினோம். மணி சார் கிட்டதட்ட எட்டு மணிநேரம் எங்ககூட இருந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மணி சார், ‘ஸ்கூல் ரீயூனியனுக்குப் போயிட்டு வந்த மாதிரி இருந்தது’ன்னு எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த இரவு நிம்மதியா முடிஞ்சது. முக்கியமா, ஹோட்டல்ல ஆர்டர் பண்ணாம, ஷங்கர் சாருக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் வீட்டிலேயே சமைச்சுப் பரிமாறினோம். வானத்தில் இருக்கிற நட்சத்திரக் கூட்டங்கள் தரையிறங்கி வந்தது மாதிரி முடிஞ்சது.”

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

லிங்குசாமி

“ ‘ஷ
ங்கர் 25’ன்னு பொறிச்ச டி-ஷர்ட்ஸ் எல்லோரும் ஒரேமாதிரி போட்டுக்கிட்டோம். சர்ப்ரைஸ் என்னன்னா, மணி சாரும் அந்த டி-ஷர்ட்ல வந்தார். இதுவரை பார்த்த மணி சார் மாதிரி, அன்னைக்கு இல்லை. ‘காம்ப்ரமைஸ் பண்ணிக்காம ஒரு விஷயத்தை பிரமாண்டமா காட்டுறதுல, ஷங்கர் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்’னு மணிசார் சொன்னதுல, ஷங்கர் சாருக்கு ரொம்ப சந்தோஷம். ‘இது நல்லா இருக்கே... மாசத்துக்கு ரெண்டு மூணு முறை இப்படி சந்திக்கலாமே’ன்னு கே.எஸ்.ரவிக்குமார் சார் சொன்னார். இது ஒரு மறக்க முடியாத இரவு.”

பாக்யராஜ்

“ ‘ஜெ
ன்டில்மேன்’ படம் பார்த்ததும், நீண்ட காலம் பயணிக்கப்போற ஒரு இயக்குநர் கிடைச்சிருக்கார்னு ஃபீல் பண்ணினேன். ஷங்கர் என்றாலே பிரமாண்டம் என்பதால், அடுத்து என்ன பண்ணப்போறார்னு தோணுச்சு. அடுத்தடுத்து தன்னை நிரூபிச்சார்னு பல விஷயங்களைப் பகிர்ந்து கிட்டேன். சின்ன ஃபங்ஷன் தானேன்னு சாதாரணமா கையை வீசிட்டுப் போயிட்டேன். பார்த்திபன் ஒரு பொக்கே கொண்டு வந்திருந்தார். அதைப் பார்த்ததும்தான், ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கியிருக் கலாமேன்னு தோணுச்சு. இத்தனை திறமை வாய்ந்த இயக்குநர்களை ஒரு இடத்தில் இணைப்பது சாதாரண விஷயமில்ல. ஒருங்கிணைத்த டீமுக்கு என் வாழ்த்துகள். அடுத்தமுறை இதைப் பெரிய ஃபங்ஷனா பண்ணலாம்னு சொன்னேன். அதேபோல ‘பாக்யா’ வெளிவந்து முப்பது வருடம் ஆகிடுச்சு. நான் சினிமாவுக்கு வந்து 40 வருடம் ஆகிடுச்சு. இரண்டையும் இணைத்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன்.’’

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

எழில்

“இ
ந்த நிகழ்வில் பெரிதும் பிடித்திருந்தது, எளிமைதான். ஷங்கர் சாருடைய ‘ஜென்டில்மேன்’ பட பூஜைக்கு என்னை பாலாஜி சக்திவேல் அழைச்சுட்டுப் போனார். இவர் இப்படிப்பட்ட ஒரு இயக்குநரா வருவார்னு நான் நினைக்கவே இல்லை. இதை ஷங்கர் சார்கிட்டயே சொன்னேன். அந்த இரவை வாழ்நாளில் மறக்கவே முடியாது.”

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

வசந்தபாலன்

“25
ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஷங்கருக்கு 25 பரிசுகளை வழங்கினார், மிஷ்கின். சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக, அந்தப் பரிசுகளைப் பிரிக்கிறதுக்கு முன்னாடி, அதுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கிறவங்களுக்கு ரூபாய் 2000 பரிசுன்னும் சொன்னார் மிஷ்கின். எல்லாமே கஷ்டமா இருந்தது. பாண்டிராஜ் மட்டும் சரியா சொல்லி, 2000 ரூபாய் பரிசு பெற்றார். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு நிகழ்வு அது. பங்கேற்ற எல்லா இயக்குநர்களும் ஷங்கர் சாரை இறுக்கித் தழுவி முத்தமிட்டனர்.”

அடுத்து ஹாஃப் செஞ்சுரி போட வாழ்த்துகள் ஷங்கர்!

- வே.கிருஷ்ணவேணி, சனா, அலாவுதின் ஹுசைன்