Published:Updated:

`மே ஐ கம் இன்!’ - கதிரின் சத்ரு டிரெய்லர்

சந்தோஷ் மாதேவன்
`மே ஐ கம் இன்!’ - கதிரின் சத்ரு டிரெய்லர்
`மே ஐ கம் இன்!’ - கதிரின் சத்ரு டிரெய்லர்

கதிர், சிருஷ்டி டாங்கே நடிப்பில் வருகிற மார்ச் மாதம் 8 ம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் `சத்ரு'. பரியேறும் பெருமாள், சிகை, எனப் பல வகை கேரக்டர்களை முயற்சி செய்து பார்க்கும் கதிர், இம்முறை போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார்.

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜாவாருணி, பவன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், `ராட்டினம்' படத்தில் கதாநாயகனாக வந்த லகுபரன், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

`மே ஐ கம் இன்!’ - கதிரின் சத்ரு டிரெய்லர்

இந்தப் படத்தை ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் டில்லிபாபு, வெளியிடுகிறார். ஒரு நாள் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் முன்னோட்டம் இன்று யூடியூப்பில் வெளியானது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் கதிர், யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக வாழும் வில்லன் என முன்னோட்டம் முழுக்க விறுவிறுப்பாகச் செல்கிறது. இந்த டிரெய்லரை இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். `பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பிறகு கதிர் நடிப்பில் வெளிவருவதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.