தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரி மகனும் நடிகருமான மோகித் மார்வா திருமணம், கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி துபாயில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திருமணம் முடிந்த தான் தங்கியிருந்த ஹோட்டல் குளியலறையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஸ்ரீதேவியின் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் மறைவுக்கு மொத்த இந்திய திரையுலகமும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீதேவி உயிரிழந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. இது பற்றி அவரின் மூத்த மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் கை தன்னைப் பிடித்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன், ‘ என் இதயம் எப்போதும் கனமாக உள்ளது. இருந்தாலும் நான் தினமும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். காரணம் அதில் நீங்கள் இருப்பதால்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தன் தாய் பற்றிய ஜான்வி கபூரின் இந்த பதிவு ஸ்ரீதேவி மற்றும் ஜான்வி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீதேவின் இறப்புக்குப் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.