Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ் இந்த வாரம் பெங்களூரை வலம் வந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா பற்றிய வாவ் தகவல்கள் இதோ!

•  தெலுங்கு, கன்னட சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர், ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவில் பிறந்த இவர், மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தார். முதல் படமான ‘கிரிக் பார்ட்டி’ கன்னடப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ‘சைமா’ விருதுபெற்று, திரையுலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பிறகு, ‘சலோ’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தார். குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீத கோவிந்தம்’ ரசிகர்களின் கனவுக் கன்னி பட்டியலில் ராஷ்மிகாவையும் இணைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் ஆந்திரத்தைக் கடந்து, இந்திய அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. ராஷ்மிகாவின் பல க்யூட் ரியாக்‌ஷன்கள் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களிலும் வலம் வந்தன.

• நடிப்பில் பத்துக்கும் குறைவான படங்களே ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ஆனால், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார், ராஷ்மிகா. கன்னடம், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து, ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கவிருக்கிறார், ராஷ்மிகா. தவிர, சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

• ‘கீத கோவிந்தம்’ படத்துக்குப் பிறகு தெலுங்கில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா இணையும் ‘டியர் காம்ரேட்’ படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

•   கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார், ராஷ்மிகா. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவிருக்கும் படத்தில், ரன்தீப் ஹூடா ஜோடியாக நடிக்கிறார்.

• சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர், ராஷ்மிகா. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கிறார்கள்.

• அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில், ராஷ்மிகா கமிட் ஆகியிருப்பதாகச் செய்திகள் வந்தன. அதை மறுத்து, ‘விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால், விரைவில் அவர்களுடன் இணைந்து பணிபுரிவேன் என நம்புகிறேன்’ என ட்வீட் செய்தார், ராஷ்மிகா.

மிஸ்டர் மியாவ்

• இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட அமைதி நடிகர் நடித்த சில படங்கள் வரிசையாகத் தோல்வியடைந்தன. ஆனாலும், தனது சம்பளத்தைக் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்யாத அவர், புதிய படத்தில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்கிறாராம்!

• தமிழில் செம பிஸியாக இருக்கும் நம்பர் நடிகைக்குப் பாலிவுட் வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன. இதுவரை தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்த அவர், பாலிவுட் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு, கூடவே காதலருடன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவால் காதலரும் செம ஹாப்பி!

• சமீபத்தில் நடந்து முடிந்த பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியின், வெற்றியாளரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாம். சேனலுக்கு நெருக்கமான திரைப் பிரபலங்களின் சிபாரிசில்தான் அவர் தேர்வு செய்யப்பட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism