Published:Updated:

`` ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 எனக்கு மறக்க முடியாத ஷோவாக இருக்கும்'' - ரச்சிதா!

``எனக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதனால்தான் இப்போது மறுபடியும் 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0' நிகழ்ச்சிக்கு நடுவராகக் கூப்பிட்டதும் உடனே ஒத்துக்கொண்டேன்' என்கிறார் ரச்சிதா சந்தோஷமாக!. 

ஜி தமிழ் சேனலில் `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3' நிகழ்ச்சி வரும் மார்ச் 10-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் சீசன் 1-ல் குஷ்பூ ஸ்பெஷல் ஜட்ஜாக இருந்தார். சீசன் 2 நிகழ்ச்சியில் பாக்யராஜ், ரோஜா, அர்ச்சனா என மூவரும் நடுவர்களாக இருந்தார்கள். இப்போது, 'சீசன் 3'ல் பாக்யராஜ், ரச்சிதாவோடு நடுவராகக் கைகோக்கிறார் நடிகை தேவயானி.  இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் மற்றும் சபானா. இந்நிகழ்ச்சிக்கான புரொமோ நேற்று வெளியானது.

இந்நிகழ்ச்சி குறித்து ரச்சிதா பேசும்போது, `இன்றைக்கு இருக்கிற ஜென்ரேஷன் பசங்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இந்த வருஷத்தில் எனக்கு இது முதல் நிகழ்ச்சி. முக்கியமான நிகழ்ச்சியும்கூட. கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். சிரிச்சி சிரிச்சி வயிறு வலி எடுக்கப் போகுது உங்களுக்கு'' என்றார். 

`` ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 எனக்கு மறக்க முடியாத ஷோவாக இருக்கும்'' - ரச்சிதா!

`ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அஷ்வந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, ஜி தமிழில் வெளியான, `மெல்லத் திறந்தது கதவு' சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு, சீசன் 1-ல் ரசிகர்கள் பலர் இருந்தனர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் செம்மையாக அசத்தியவர். அப்போதுதான் அவர் நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தார். இன்னும் சொல்லப் போனால், ஆரம்பத்தில் அஸ்வந்த் பேசுவதே புரியாமல் இருந்தது. அதற்கு சப் டைட்டில் எல்லாம் போட்டார்கள். 

`` ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 எனக்கு மறக்க முடியாத ஷோவாக இருக்கும்'' - ரச்சிதா!

ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும், `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0' நிகழ்ச்சியில் பாக்யராஜ்,தேவயானி, ரச்சிதா நடுவர்களாகப் பங்கெடுக்கிறார்கள். தொகுப்பாளர்களாக கமல், சபானா நிகழ்ச்சியைச் சுவாரஸ்யமாக கொண்டுபோகவிருக்கிறார்கள். குட்டீஸ்களுடைய சேட்டைகள், அடாவடித்தனங்கள், திறமைகள் எனப் பல குழந்தைகளுக்கு வாய்ப்புக் கொடுத்தது இந்த மேடை. இன்னும் நிகழ்ச்சியைச் சிறப்பாக பல திறமையான குழந்தைகளைத் தேர்வு செய்திருக்கிறார்களாம்.