அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ், இந்த வாரம் நம்ம ‘வணக்கம் சென்னை’யை வலம் வருகிறது. இதோ, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய வாவ் தகவல்கள்!

•  ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவரின் தாத்தா அமர்நாத் தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர். ஐஸ்வர்யாவின் அப்பா மற்றும் அத்தையும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றியவர்கள்தான்.

• சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் முன் சன் டிவி-யின் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார் ஐஸ்வர்யா. பிறகு, கலைஞர் டிவி-யின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பெற்றார். சில சீரியல்களிலும் நடித்தார். அப்போது, ஐஸ்வர்யாவின் சம்பளம் நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய். 

மிஸ்டர் மியாவ்

• தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாவின் முதல் படம், பவர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘நீதான அவன்’. பிறகு, ‘அவர்களும் இவர்களும்’, ‘உயர்திரு 420’, ‘சட்டப்படி குற்றம்’, ‘விளையாட வா’ எனக் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தார். இரண்டாவது கதாநாயகியாக இவர் நடித்த ‘அட்டக்கத்தி’ படம்தான், ஐஸ்வர்யாவுக்குள் இருந்த நடிப்புத் திறமைக்குத் தீனி போட்டது. பிறகு, நடந்தது எல்லாம் மேஜிக் மொமென்ட்ஸ்!

• பாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடித்த ‘ரம்மி’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியானார். இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்கக் கமிட் ஆனவர் படத்தில் இருந்து விலகவே, ஐஸ்வர்யாவுக்கு வந்த வாய்ப்பு அது.

• சீனுராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில் கமிட் ஆகும்போது, ‘தமன்னா இருக்கும்போது தனக்கு முக்கியத்துவம் இருக்குமா’ எனத் தயங்கினாராம் ஐஸ்வர்யா. ‘இந்தப் படத்தோட லைஃபே உன் கேரக்டர்தான்’ என சமாதானம் சொல்லி நடிக்கவைத்திருக்கிறார் சீனுராமசாமி.

• மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படம், ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான மாநில விருதை வென்றவர், தொடர்ந்து தனித்துவமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

• சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ‘உங்களுக்கான கேரக்டர் வரும்போது நிச்சயம் அழைப்பு வரும்’ என அனுப்பிவைத்த மணிரத்னம், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் மறக்காமல் அழைத்திருக்கிறார்.

ம்யூட்

• உச்ச நடிகரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், செம அப்செட்டில் இருக்கிறதாம் படக்குழு. ஆனால், படத்தின் புரமோஷனுக்காகவே இந்த செட்டப் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

• நம்பர் நடிகையும் நடிகையின் காதலரும் தமிழ் சினிமாவில் கொடுக்கும் குடைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவரை தன் கதைகளைத் தானே முடிவு எடுத்துக்கொண்டிருந்த நடிகை, ‘அவர்கிட்டேயும் ஒருதடவை சொல் லிடுங்க’ என்று டார்ச்சர் கொடுக்கிறாராம்!

 

• மகிழ்ச்சியான இயக்குநர், தனது ஆஸ்தான நடிகரை வைத்து இன்னொரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். என்ன காரணத்துக் காகவோ, இந்தச் செய்தி இப்போதைக்கு வெளியே தெரியக்கூடாது என நடிகர் தரப்பில் இருந்து உத்தரவு போயிருக்கிறது.