Published:Updated:

திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்!

திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட்  சூதாட்டம்!
திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்!
திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட்  சூதாட்டம்!

திருவனந்தபுரம்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள கேரளாவை சேர்ந்த ஶ்ரீசாந்தின் விவகாரங்களை அடிப்படையாக வைத்து பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஷ், திரைப்படமாக எடுக்க உள்ளார்.

ஷாஜி கைலாஷ் ஏற்கனவே மலையாளத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில்  பல திரைப்படங்களை எடுத்துள்ளார். குறிப்பாக கமிஷனர், சிட்டி, சிந்தாமணி கொலை கேஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை.

##~~##

தமிழில் விஜயகாந்த்தை வைத்து வாஞ்சி நாதன் உள்பட சில படங்களை அவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.