Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ந்தமுறை மிஸ்டர் மியாவ் வலம்வந்தது பெங்களூரு சிட்டி. அங்கிருந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பற்றி அவர் அள்ளிவந்த பர்சனல் விஷயங்கள் இதோ...

• தந்தை ஸ்ரீநாத் முன்னாள் ராணுவ வீரர். இவர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், அஸ்ஸாம், தெலங்கானா என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பணிமாறுதலாகி செல்லும்போதெல்லாம் மகளையும் அழைத்துச் சென்றதால், ஷ்ரத்தாவுக்கு பல மொழிகளும் அத்துபடி!

• அம்மணிக்குத் தனிப்பட்ட வகையில் வெளியே நண்பர்கள் யாரும் இல்லை. சினிமாவில் மாதவனும் தெலுங்கு நடிகர் நானியும் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• மேடை நாடகத்தின்மீது தீராக் காதல் கொண்டவர் ஷ்ரத்தா. வேலையில் இருந்துகொண்டே மேடை நாடகங்களில் நடித்தவர், மலையாளப் படமான ‘கோஹினூர்’ மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

• கன்னட பிளாக்பஸ்டர் படமான ‘யூ-டர்ன்’தான் இவரைப் பிரபல நடிகையாக்கிய திரைப்படம். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

• ஷ்ரத்தாவை, ‘நடிகை நந்திதா தாஸ் சாயலில் இருக்கிறார்’ என்று பலரும் கூறுவதுண்டு. இப்படி யாரேனும் முகத்துக்கு நேராகக் கூறினால், மேடத்துக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவந்துவிடுமாம்! 

• தெலுங்கில் இவர் நடித்த முதல் படமான ‘ஜெர்ஸி’ வெற்றியடைந்து, சக்சஸ் ஹீரோயின் என்ற சென்டிமென்ட்டும் தொத்திக்கொள்ள... அடுத்தடுத்து தெலுங்குப் பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

 

• யாராவது பரிசுகள் கொண்டுவந்தால், ‘புத்தகமே போதும்’ என்று புத்தகங்களை பரிசாகப் பெறுவதில் ஆர்வம் காட்டுவார். அந்தளவுக்கு ஷ்ரத்தா புத்தகப் பிரியர்.

மிஸ்டர் மியாவ்

• ஷ்ரத்தாவுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் தோனி. ஏன் என்று கேட்டால், ‘தோனியின் நிதானம் ரொம்பப் பிடிக்கும்’ என்பார்.

• தென் கிழக்காசிய நாடுகளின் உணவுகளை விரும்பிச் சாப்பிடும் ஷ்ரத்தாவுக்கு, சாட் வகை உணவுகள் மிகவும் பிடித்தமானவை.

• தமிழில் அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, ‘மிலன் டாக்கிஸ்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஷ்ரத்தா.

• அருள்நிதியுடன் ஷ்ரத்தா ஜோடி சேர்ந்த ‘கே-13’ படம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே தனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருப்பதில் மேடத்துக்கு செம குஷி!

மிஸ்டர் மியாவ்

• ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்த நடிகர் லேட்டாக வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தன் சகோதரரின் திருமணத்துக்கும் லேட்டாகத்தான் வந்தாராம் அந்த நடிகர். அதிலும் நிகழ்ச்சியில் தலைகாட்டிய உடனேயே, தாய்லாந்துக்குப் பறந்துவிட்டாராம்!

• படத்துக்குப் படம் தன்னை உருமாற்றிக் கொள்ளும் நடிகரின் தமிழ், இந்திப் படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழில் அடுத்து எந்தப் படத்தையும் கமிட் செய்யாமல் இருக்கிறாராம்.