Published:Updated:

``நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டேனு விட்டுட்டாங்க'' - `நக்கலைட்ஸ்' ஶ்ரீஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டேனு விட்டுட்டாங்க'' - `நக்கலைட்ஸ்' ஶ்ரீஜா
``நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டேனு விட்டுட்டாங்க'' - `நக்கலைட்ஸ்' ஶ்ரீஜா

எவ்வளவு கவலையோட தனம் அம்மாகிட்ட பேசுனாலும் அதை அப்படியே காமெடியா மாத்திடுவாங்க. அம்மாவும் சரி, அவங்களுடைய கணவரும் சரி ரெண்டு பேரும் அழகான காதல் ஜோடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூடியூப் வாசிகளுக்கு ஶ்ரீஜா பரிச்சயமான ஒருவர்.. நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் கலக்கிக் கொண்டிருப்பவர். குறும்புத்தனமான பேச்சு, ஆரவாரமில்லாத நடிப்பு என எளிமையாய் ஆடியன்ஸை அட்ராக்ட் செய்பவர். கலகலப்பான ஶ்ரீஜாவின் பர்சனல் பக்கங்களை புரட்டச் சொல்லிக் கேட்டோம்.

ஶ்ரீஜா பற்றிச் சொல்லுங்க?

என்னுடைய சொந்த ஊர் தேனி. தேனி மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்துலதான் வளர்ந்தேன். இளங்கலை கணிதவியல் படிச்சேன். இப்போ கோயம்புத்தூர்ல முதுகலை கணிதவியல் படிச்சிட்டு இருக்கேன். இன்னும் ஒரு மூணு மாசத்துல காலேஜ் முடியப் போகுது. இரண்டரை வருஷம் வீதி நாடகங்களில் நடிச்சிட்டு இருந்தேன். அப்புறம் அங்கே இருந்து நக்கலைட்ஸ் வந்துட்டேன். 

நடிப்பு மேல எப்படி ஆர்வம் வந்துச்சு?

சின்ன வயசுல இருந்தெல்லாம் நடிப்பு மேல கிரேஸ் இல்லை. `நிலா முற்றம்'னு புக் ரீடிங் கிளப் பிஎஸ்ஜி காலேஜ்ல இருக்கு. அங்கே வாரத்துக்கு ஒரு நாடகம் நடிப்பாங்க. எங்களுடைய சீனியர்ஸ் போனதுக்கு அப்புறம் நாங்கதான் தொடர்ந்து நாடகத்தில் நடிக்கணும்னு சொன்னாங்க. அதுக்காக கத்துக்க ஆரம்பிச்சதுதான்! அதுக்குள்ள போகப் போக ஒவ்வொரு விஷயமாக் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல அது இல்லாம இருக்க முடியாதுங்குற அளவுக்கு வந்துடுச்சு.

ஃபேமிலி சப்போர்ட்..?

என் அம்மா லைப்ரரியன். அப்பா பிசினஸ் பண்றாங்க. ஒரே ஒரு தங்கச்சி. அவங்க ஒன்பதாவது படிக்கிறாங்க. பொண்ணுங்களுக்கு இந்த ஃபீல்டுக்குள்ளே வந்தா என்ன மாதிரியான பிரச்னைகள் வீட்டிலிருக்குமோ அதே பிரச்னைகள் எனக்கும் இருந்துச்சு. இப்பவும் இருக்கு! முன்னாடி சுத்தமா புரிஞ்சுக்கலை. இப்போ கொஞ்சம் புரிஞ்சுக்கிறாங்க. நாங்க கிராமத்து ஆளுங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் நடிக்கிறது இழுக்கு! என் ஆசையை அவங்களுக்குச் சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம்தான்! ஆனாலும், கொஞ்ச கொஞ்சமா புரிய வைச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்துல என்னடா நம்ம அம்மா, அப்பாவே நம்மளை புரிஞ்சிக்காம இருக்காங்கன்னு வருத்தமா இருந்துச்சு. பெத்தவங்க பிள்ளைங்களுக்கு சப்போர்ட் பண்ணணும்! அவங்களே புரிஞ்சுக்காததுதான் வருத்தமான விஷயமே. ஒரு கட்டத்துக்கு மேல நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டேன்னு அவங்களே கொஞ்சம் புரிஞ்சுகிட்டாங்க. அதனால இப்போ ஓகேங்க!

உங்களுடைய ரியல் லைஃப் ஸ்டோரியை கான்செப்டா யூஸ் பண்ணியிருக்கீங்களா..?

கிரஷ் அலப்பறைகள், கல்யாண வயசு அலப்பறைகள் அப்புறமா அம்மா அலப்பறைகள் இது எல்லாத்துலேயும் எங்களுடைய கான்செப்ட் யூஸ் பண்ணியிருக்கோம். டீம்ல உள்ள மத்த பொண்ணுங்களும் சில விஷயங்கள் சொல்லுவாங்க. நானும் சொல்லுவேன்.. வீட்டுலேயே கன்டென்ட் கிடைக்கும்போது அதை யூஸ் பண்ணிக்க வேண்டியதுதானே டியூட்! 

தனம் அம்மா, ஶ்ரீஜா காம்பினேஷன் செமையா இருக்கே..?

எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் செமையா செட்டாகும். வீட்டுல என்னுடைய சூழ்நிலை எல்லாமே அவங்களுக்குத் தெரியும். சொல்லப்போனா அவங்கதான் எனக்குப் பயங்கர சப்போர்ட். எங்க டீம்ல உள்ள பொண்ணுங்க எல்லோரும் அடிக்கடி சேர்ந்து ஜாலியாப் பேசி சிரிச்சிட்டு இருப்போம். எவ்வளவு கவலையோட தனம் அம்மாகிட்ட பேசுனாலும் அதை அப்படியே காமெடியா மாத்திடுவாங்க. அம்மாவும் சரி, அவங்களுடைய கணவரும் சரி ரெண்டு பேரும் அழகான காதல் ஜோடி! ஒருத்தருக்கொருத்தவர் அவ்வளவு அன்பா இருப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அன்பான அழகான மனுஷி தனம் அம்மா.

கொங்குதமிழ்ப் பேச ஆசைப்பட்டு இருக்கீங்களா..?

நான் தேனிங்குறதுனால எனக்குக் கொங்குதமிழ் பேசத் தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழே ஒழுங்காப் பேசத் தெரியாது. எங்க வீட்டுல தெலுங்குதான் பேசுவோம். எங்க ஊர் பயங்கரமான கிராமம். எங்க ஊரைச் சுற்றி இருக்கிற சின்னச் சின்ன கிராமத்துலேயும் பெரும்பாலும் தெலுங்குதான் பேசுவாங்க. நான் படிச்ச ஸ்கூலிலும் தெலுங்குதான் என்பதால தமிழ் சுத்தமாத்  தெரியாது. 11 வயசுல ஸ்கூல் மாறினதுக்கு அப்புறமாதான் தமிழ்ப் படிக்க ஆரம்பிச்சேன். அம்மா லைப்ரரியன் என்பதால் பொறுமையா தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. இப்பவும் சில வார்த்தைகள் உச்சரிக்க வராமல் முழிப்பேன். அதனால, சரளமா தமிழ்ப் பேசணும்னு ஆசைப்பட்டிருக்கேன்.

வெள்ளித்திரையில் ஶ்ரீஜாவை எப்போ பார்க்கலாம்..?

இப்போ ஒரு பிராஜக்ட்டில் கமிட் ஆகியிருக்கேன். அதுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரமே வரும்.. இப்போதைக்கு பெரிய பிளான்லாம் இல்ல. 

நடிப்பு தவிர வேறென்ன பிடிக்கும்..?

படிக்கிறதுக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய புக்ஸ் படிப்பேன். நாவல் அதிகமா வாசிப்பேன். இப்போ சமீபமா என் கதை வாசிச்சிட்டு இருக்கேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு